செல்வம் பெருக சிவபெருமானுக்கு இந்த நாளில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

siva abisegam
- Advertisement -

இந்த உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். அதனால் தான் திருநீலகண்டன் என்ற பெயரை அவருக்கு ஏற்பட்டது. மேலும் உலகத்தை காப்பாற்றிய அந்த நேரத்தை தான் பிரதோஷம் என்று நாம் அழைக்கிறோம். இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அதையும் தவிர்த்து மற்ற எந்த நாட்களில் சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் என்பது நடைபெறும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சில நாட்கள் விசேஷமான நாட்களாக திகழும். அந்த நாட்களில் அபிஷேகத்திற்காக நம்மால் இயன்ற பொருளை நாம் வாங்கித் தரும் பொழுது அதனால் நமக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும். இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தது.

- Advertisement -

அபிஷேகத்திற்காக பொருட்களை நாம் வாங்கித் தரும் தினம் அதாவது திதி எந்த திதி என்பதை பொறுத்துதான் அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. 15 திதிகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அதில் சில குறிப்பிட்ட திதிகளில் அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தரக்கூடாது. அவ்வாறு தரும் பொழுது அதனால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதை சிலர் அனுபவபூர்வமாகவும் உணர்ந்திருப்பார்கள். சில நேரங்களில் அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கிக் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும். அதனாலேயே கோவிலுக்கு செல்வது வழிபாடு மேற்கொள்வது என்பதை செய்ய தயங்குவார்கள்.

- Advertisement -

சரி இப்பொழுது எந்த திதிகளில் அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கித் தரக் கூடாது என்று பார்ப்போம். திதியை, நவமி, சப்தமி, சதுர்த்தசி போன்ற திதிகளில் அபிஷேகம் செய்வதற்கு பொருட்களை வாங்கி தரக்கூடாது. திதியை மற்றும் நவமி திதியில் அபிஷேக பொருட்களை வாங்கித் தந்து அபிஷேகம் செய்வதன் மூலம் மனக்கவலை அதிகரிக்கும். மேலும் சப்தமி மற்றும் சதுர்த்தசி போன்ற திதி நாட்களில் அபிஷேகம் செய்வதன் மூலம் உடல் உபாதைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நான்கு திதிகளை தவிர்த்து மீதம் இருக்கும் 11 திதிகளும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த திதிகளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரதமை, பௌர்ணமி, அமாவாசை போன்ற திதிகளில் நாம் கரும்புச்சாறு வாங்கி அபிஷேகம் செய்தால் பணவரவு என்பது அதிகரிக்கும். மேலும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் தூவாதசி அன்று நம்மால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்வதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணவசியம் ஏற்பட பரிகாரம்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது இந்த தகவலை கருத்தில் வைத்துக் கொண்டு செய்தால் கண்டிப்பான முறையில் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணர முடியும்

- Advertisement -