தை அமாவாசையில் சுக்கிர அனுகிரகத்தை பெற வழிபாடு

thai amavasai sukira yogam
- Advertisement -

அமாவாசை என்றாலே அது முன்னோர் வழிபாட்டிற்குரிய ஒரு முக்கியமான நாள். இது வரையில் அமாவாசை பற்றி நாம் இப்படித் தான் நினைத்திருப்போம். அதை அமாவாசை வரக்கூடிய தினத்தை வைத்து அதற்கான பலன்கள் மாறுபடும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் வரும் போது அன்றைய நாளில் அம்மன் வழிபாடுகளை சேர்த்து செய்யலாம்.

அதே போல வியாழக்கிழமையில் வருவது என்றால் அந்த நாளில் குபேர வழிபாடை செய்வது சிறந்த பலனாய் தருவதாக இருக்கிறது. அது போல இந்த தை அமாவாசையானது வெள்ளிக்கிழமையில் வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள். அதே போல்சுக்கிரனுக்கு மிக மிக உகந்த நாள் இந்த வெள்ளிக்கிழமை.

- Advertisement -

இத்தனை யோகங்களை பெற்றுத்தரக் கூடிய இந்த தை அமாவாசை நாளில் சுக்கிரனுடைய முழு அனுகிரத்தையும் நாம் பெற பூஜை அறையில் எந்த இரண்டு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிர யோகத்தைப் பெற ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீபத்தை அமாவாசை தினத்தில் ஏற்றினாலும் இது சுக்கிர பகவானின் அருளைப் பெற ஏற்றக்கூடிய தீபம் தான். இந்த தை அமாவாசை ஆனது விடியற்காலை முதல் அன்றைய நாள் முழுவதும் இருக்கிறது. ஆயினும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையானது காலை 6:00 மணியிலிருந்து 7 மணி வரை, மதியம் 1 லிருந்து 2 மணி வரை, இரவு 8 லிருந்து 9 மணி வரையிலான இந்த நேரங்களில் தீபத்தை ஏற்றினால் சிறந்த பலனை பெறலாம். ஒரு வேளை இந்த நேரங்களில் ஏற்ற முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள்ளாக ஏற்றி விடுங்கள்.

இந்த தீபத்தை ஏற்ற இரண்டு அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். இந்த தீபத்தை வைத்து ஏற்றுவதற்கு ஒரு தட்டை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தீபம் ஏற்ற நாம் பயன்படுத்த போகும் தானியம் தான் மிகவும் முக்கியமானது. அது வெள்ளை மொச்சை பயிர். இந்த வெள்ளை மொச்சையானது சுக்கிர பகவானுக்கு மிகவும் உகந்த தானியம்.

- Advertisement -

இந்த தானியத்தை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தட்டில் போட்டு பரப்பி விடுங்கள். அதன் மேல் இரண்டு அகலை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் எரியும் போது ஒவ்வொரு அகலிலும் ஆறு கற்கண்டை போடுங்கள். ஆறு எண்ணிக்கையும் சுக்கிர வசியத்தை ஏற்படுத்தக் கூடியது. கற்கண்டு சுக்கிர பகவானின் அனுகிரகத்தை பெற்றது.

அன்றைய தினத்தில் அமாவாசையில் இருப்பதால் உங்கள் முன்னோர்களையும் மனதார நினைத்துக் கொண்டு சுக்கிர பகவானுக்குரிய இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். இதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதுடன் சுக்கிரனின் பரிபூரண அனுகிரகமும் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பண வரவு ஏற்பட பிரதோஷ மந்திரம்

இந்த தீப வழிபாடு செய்வதற்கும் உங்கள் முன்னோர் வழிபாடு செய்வதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆகையால் அன்று தினத்தில் முன்னோர் வழிபாட்டையும் எந்தவித குறையும் இல்லாமல் சிறப்பாக செய்து விடுங்கள். இந்த பதிவில் உள்ள தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -