தீராத துன்பம் தீர, கண் திருஷ்டி அகல அமாவாசை அன்று செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரங்கள்

amavasai
- Advertisement -

அமாவாசை என்றாலே எப்போதும் புனித நாளாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து பூஜை செய்து முன்னோர்களை வழங்குவது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவ்வாறு ஐப்பசி மாதம் நவம்பர் 4ஆம் தேதி வரும் இந்த அமாவாசை தினம் தீபாவளி என்று வருகிறது. இன்றைய தினத்தில் சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலம் தீராத கஷ்டங்கள் தீர்ந்து, கடன் தொல்லைகள் அகன்று, ஐஸ்வர்யம் பெருக சில எளிய பரிகாரங்களைச் செய்வதும் நல்ல பலனை அளிக்கிறது. அவ்வாறு அமாவாசை அன்று செய்ய வேண்டிய ஒரு சில பரிகாரங்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

five-rupee-coins

அமாவாசை அன்று காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, சமையல் அறை மற்றும் வீடு முழுவதும் சுத்தம் செய்து, பூஜைக்கு படைக்க வேண்டிய உணவை சமைக்க துவங்குவோம். அவ்வாறு பூஜை அறையில் பூஜை செய்து நைவேத்தியமாக படைத்த சாதத்தை வயதானவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது தோஷங்கள் அனைத்தும் தீர்ந்து தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற ஆரம்பிக்கும்.

- Advertisement -

பிறகு ஒரு சிவப்பு நிறத் துணியில் சிறிதளவு படிகாரம் மற்றும் சிறிய துண்டு வசம்பினை சேர்த்து மூட்டையாகக் கட்டி நிலைவாசல் படி அல்லது தொழில் செய்யும் இடங்களில் கட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் திருஷ்டி அகன்று, பிணிகள் விலகி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன் வளமான வாழ்வும் கிடைத்திடும். இந்த மூட்டையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வைக்க வேண்டும். இதில் இருக்கும் படிகாரம் மற்றும் வசம்பை ஓடும் நீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.

padikaram1

பிறகு எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை முழுவதுமாக பூசிவிட்டு வீட்டு வாசலின் வெளியே வலது பக்கம் இடது பக்கம் ஒன்றாக வைத்து விட வேண்டும் இவ்வாறு செய்வதால் நமது வீட்டிற்கு எதிர் மறை சக்திகள் உள் நுழைவதை தவிர்க்க முடியும்.

- Advertisement -

மிகவும் முக்கியமாக காலை முதல் வேலையாக ஒரு சிறிய கிண்ணத்தில் அல்லது அகல் விளக்கில் உப்பை முழுவதுமாக நிறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை பூஜை அறையின் வட கிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும். அதன்பின் நாம் செய்யவேண்டிய அமாவாசை பூஜைகள் அனைத்தும் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு முன்னதாக அந்த உப்பினை கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

uppu

பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, பூஜை அறையின் முன் வைத்து, கீழே அமர்ந்து கொண்டு, கண்களை மூடி குல தெய்வத்தை நினைத்துக் கொண்டு, அந்த உப்பினை வலது கையில் வைத்துக்கொண்டு, எனது கஷ்டமெல்லாம் தீரவேண்டும், கண் திருஷ்டிகள் அகல வேண்டும், நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டும், தொழிலில் முன்னேற்றம் வேண்டும், வளமான வாழ்வு வேண்டும் என வேண்டிக் கொண்டு உப்பை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த உப்பு தண்ணீரில் கரைவது போல நமது அனைத்து துன்பங்களும் கரைந்து சுகமான வாழ்வு கிடைத்திடும்.

- Advertisement -