- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆண்டியையும் அரசனாக்கும் சக்தி வாய்ந்த இந்த ஒரு மந்திரத்தை தினமும் உச்சரித்தால் போதும். நமது வாழ்க்கையில்...

ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி வாய்ந்த இந்த ஒரு மந்திரத்தை தினமும் உச்சரித்தால் போதும். நமது வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து செல்வாக்கு உயரும்

- Advertisement -

இப்படித்தான் வாழ வேண்டும், இந்த முறைப்படி நடந்து கொண்டால் மட்டுமே எனது வாழ்க்கை மேல்நோக்கி செல்லும் என்று, தான் படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு சில கோட்பாடுகளை வரையறுத்து கொண்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்பவர்கள் ஒரு சிலர் தான் இருக்கின்றனர். ஆனால் 80% நபர்கள் காலம் போன போக்கில் கிடைக்கின்ற வேலையை செய்து இன்றைய ஒருநாள் எப்படியாவது நகர்ந்து விட்டால் போதும் என்று எந்தவித கோட்பாடும் இல்லாமல் தனக்கான வாழ்க்கையை சுவாரஸ்யம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதோடு கடின உழைப்புடன் அதன் மீது நம்பிக்கையும் வைத்திருந்தால் மட்டுமே வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அவ்வாறு இந்த ஒரு மந்திரத்தை நம்பிக்கையுடன் தினமும் உச்சரித்து வர உங்கள் வாழ்க்கை தரம் உயர்வதை உங்களால் உணர முடியும்.

indian-family

நம்மைவிட ஒருவர் நமக்கு மேல் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கின்றார் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கம் என்பது நம்மிடம் இருக்கும். அவ்வாறு வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், வாழ்க்கைப் பயணத்தில் கடவுள் இவ்வாறு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் ஒரு சக்தி இருக்கிறது என்பது நமது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அதன் மீது நம்பிக்கை பிறக்க வேண்டும் அவ்வாறு இந்த நம்பிக்கையுடன் கடினமாக முயற்சி செய்து நேர்மையாக உழைத்தோம் என்றால் நமது வாழ்வில் செல்வநிலை உயர்வது என்பது மிகவும் உறுதியாகும்.

- Advertisement -

இதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் அரசன் ஒருவன் தனது பணியாளருடன் நகர்வலம் சென்றிருந்தார். அப்பொழுது அவர் அருகில் ஒரு பிச்சைக்காரர் நின்று கொண்டிருந்தார். அரசனோ தனது பணியாளரிடம் இவன் இருக்கும் திசையில் கூட நாம் செல்லக்கூடாது. இந்த இடத்தை தவிர்த்து சிறிது தூரம் சுற்றிக்கொண்டு கூட செல்லலாம் என்று அந்த பிச்சைகாரனை தவிர்த்தார். இதைப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்த பணியாளர் அரசன் இவ்வாறு செய்வது தவறு என உணர்த்த வேண்டி ஒரு காரியத்தை செய்ய முற்பட்டார்.

beggar

பணியாளர் பிச்சைக்காரரிடம் சென்று தினம் உங்களுக்கு 50 ரூபாய் கொடுக்கிறேன் நீங்கள் நான் சொல்லும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும் என்று கூறினார். ஆறு மாதம் சென்றது. மீண்டும் அவர் தினமும் 100 ரூபாய் கொடுக்கிறேன் இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும் என்று கூறினார். இவ்வாறு ஒன்றரை வருடங்கள் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார் அதன் பிறகு புத்தருக்கு எவ்வாறு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்ததோ அது போல இந்த மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க இந்த பிச்சைக்காரரின் மனதிலும் ஞானம் பிறந்தது அவர் ஒரு மகானாக மாறினார்.

- Advertisement -

அவர் சொல்வது எல்லாம் பலிக்க ஆரம்பித்தது. அவர் உலகையும் மனிதனையும் புரிய ஆரம்பித்தார். எனவே ஞானியாக மாறினார். அரசரும் ஒருமுறை இவரிடம் வந்து ஆசி பெற்றார். அப்பொழுது பணியாளர் இவரைப் பற்றி அரசரிடம் விவரிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு ஏழை, எளியோர், முதியோர் என எவரையும் ஒதுக்கக்கூடாது. அவரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தார்.

Munivar

இப்படி ஒரு மனிதனையே மாற்றக்கூடிய ஒரு அற்புதம் வாய்ந்த அதி சக்தி வாய்ந்த மந்திரம் காயத்ரி மந்திரம் ஆகும். இந்த மந்திரம் ஒவ்வொரு கடவுளுக்கென்று தனித்தனியாக உள்ளது. நம் மனதிற்கு விருப்பமான கடவுளின் காயத்திரி மந்திரத்தை தினமும் நம்மால் முடிந்தவரை சொல்லிப் பழக வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு வருடம் கடைப்பிடித்து வந்தாலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் உணர முடியும். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி நமக்குத் தேவையான அறிவு, ஆற்றல், தைரியம், செல்வம், பதவி என எதை வேண்டுமானாலும் நாம் வேண்டிக் கொள்ளலாம்.

சற்று முன்