செம்பருத்தி பூ கொண்டு எத்தனை நோய்களை தீர்க்க முடியும் தெரியுமா?

sembaruthi

பல வகையான பூக்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. இவற்றில் சில மிகுந்த அழகையும், வாசனை கொண்டவையாக இருக்கின்றன. வேறு சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் பெற்றவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூவினங்களில் ஒன்று தான் செம்பருத்தி பூ. செம்பருத்தி பூவினால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செம்பருத்தி பூ நன்மைகள்

தலைமுடி
செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.

மாதவிடாய் பிரச்சனை

பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும்.

- Advertisement -

சிறுநீர்

ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும். கோடை காலங்களில் நீர் சுருக்கு ஏற்படுவதாலும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உண்டாகும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும்.

இதயம்

இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.

புண்கள்

கோடை காலங்களிலும், மருத்துவ மனைகளில் நீண்ட காலம் இருக்கும் பலருக்கும் உடல் சூடு காரணமாக வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ரத்த சுத்தி

செம்பருத்தி பூவில் நச்சுக்களை அழிக்கும் வேதி பொருட்கள் அதிகம் உள்ளது. தினமும் காலையில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி, உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.

பேன் தொல்லை

அனைத்து வயதில் இருக்கும் நபர்கள், குறிப்பாக அடர்த்தியான தலைமுடியை கொண்ட நபர்களுக்கு பேன்கள் பிரச்சனை ஒரு தொல்லையாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் தொல்லை நீங்கும்.

பெண்கள் பிரச்சனைகள்

பெண்களாக பிறந்த அனைவரும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும், அப்பூவை நீரில் வேகவைத்து, வடிகட்டி அருந்துவதாலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

இரும்பு சத்து

ரத்தம் விருத்தி ஆவதற்கும், உடலின் பலத்திற்கும் இரும்பு சத்து மிகவும் அவசியமாக இருக்கிறது. செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிப்பதோடு, இரத்த சோகை நோய் குறையும்.

சருமம்

உடலின் மேற்போர்வையாக இருக்கும் தோல் அல்லது சருமத்தில் ஈரப்பதம் இருப்பது அவசியம்.செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை பொருந்தியது. இந்த பூவை சாப்பிடுவதாலும், அரைத்து சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து செய்து உடலை பளபளக்க செய்யும்.

இதையும் படிக்கலாமே:
10 முக ருத்ராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sembaruthi benefits in Tamil. It is also called as Sembaruthi poo payangal in Tamil or Sembaruthi poo nanmaigal in Tamil or Sembaruthi maruthuva payangal in Tamil or Sembaruthi poo in Tamil.