நாட்டு செம்பருத்தியில் நச்சுன்னு ஒரு குறிப்பு. நாள்பட்ட தலைமுடி பிரச்சனைக்கு கூட தீர்வை தர, இந்த குறிப்பால் மட்டும்தான் முடியும்.

hair8
- Advertisement -

நிறைய பேருக்கு ரொம்ப நாளா தலைமுடி கொட்டுவதில், வளர்வதில் பிரச்சனை இருக்கும். சரி செய்யவே முடியாது. ஏதேதோ முயற்சி செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் ரிசல்ட் சரியாக கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த குறிப்பையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். மிக மிக சுலபமான எளிய குறிப்பு தான் இது. ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதம் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது, நல்ல ரிசல்ட் தெரிவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வாங்க அந்த எளிமையான குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் நாட்டு செம்பருத்திப்பூ. நாட்டு செம்பருத்தி இலை. உங்கள் விருப்பம் போல அதை எடுத்துக் கொள்ளலாம். 10 நாட்டு செம்பருத்தி பூ, 10 நாட்டு செம்பருத்தி இலை, எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கரைக்க வேண்டும். செம்பருத்தி பூவையும் இலையும் கையை கொண்டு நன்றாக கரைக்கும் போது அந்த தண்ணீர் ஜெல் போல நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இதை வடிகட்டிக் கொள்ளுங்கள். ஜெல் மட்டும் தனியாக நமக்கு கிடைத்துவிடும். செம்பருத்திப்பூ இலை திப்பியெல்லாம் தனியாக இருக்கும். இந்த ஜெல்லில் நீங்கள் தலைக்கு குளிக்க கூடிய ஷாம்பு 1 டேபிள் ஸ்பூன் போட்டு, நன்றாக கலந்து இதை தலைக்கு போட்டு கசக்கி குளிக்க வேண்டும். சீயக்காய் இருந்தால் கூட அந்த சீயக்காயை இந்த ஜெல்லில் போட்டு கலந்து வைத்து தலைக்கு குளிக்கலாம். தலை முடி சூப்பரா ஷைனிங்கா உதிராமல் அடர்த்தியாக வளர தொடங்கும்.

உங்களுக்கு தேவை என்றால், அரிசி வடித்த கஞ்சியில் இந்த செம்பருத்தி ஜல்லை போட்டு கலந்து அதில் ஷாம்புவை ஊற்றி குளித்தாலும் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறது. அதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முடி சில்கியாக ஸ்ட்ரைட் ஆக சாஃப்டாக மாறும்.

- Advertisement -

இதை உங்களுக்கு கையால் கரைக்க சிரமமாக இருந்தால், செம்பருத்தி பூ இலை பூ இவைகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றியும் அரைத்துக் கொள்ளலாம். ஆனால் கையில் கரைக்கும் போது தான் இதனுடைய வழுவழுப்பு தன்மை அதிகமாக நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நாட்டு செம்பருத்திக்கு பதில் வேற செம்பருத்தியை இந்த குறிப்புக்கு பயன்படுத்தும் போது ரிசல்ட் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காது. சிவப்பு நிற நாட்டு செம்பருத்தி பூவில் பவர் கொஞ்சம் அதிகம் தான். உங்களுக்கு மேலே சொன்ன குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -