உங்க வீட்டில் இருக்கும் செம்பு சமையல் பாத்திரங்களை புதிது போல ஜொலிக்க செய்ய இதை தேய்த்து ஊற விடுங்கள் போதும்!

copper-sembu-curd
- Advertisement -

செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்தால் உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறையும். அன்றாட உணவில் செம்பு சத்து ஓரளவுக்கு உடலுக்கு தேவையானதாக இருக்கிறது. இச்சத்தை செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீரை பருகுவதால் நாம் எளிதாக பெற்று விட முடியும் எனவே அந்த காலங்களில் எல்லாம் இது போன்ற வழக்கங்கள் இருந்து வந்தது. இது நாளடைவில் மாறி இன்று பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீரை ஊற்றி வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

சமீப காலங்களில் செம்பு பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடையே அதிகம் காணப்படுகிறது. இதனால் செம்பு வாட்டர் பாட்டில்கள், செம்பு பாத்திரங்கள், செம்பு குடங்கள் போன்றவற்றின் விற்பனை படு ஜோராகவும் நடந்து வருகிறது. தொடர்ந்து செம்பு தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு பல்வேறு நோய்கள் குணமாவதாகவும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது எனவே இந்த செம்பு பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கத்தை நீங்களும் உங்கள் வீட்டில் கொண்டு வருவது ரொம்பவே நல்லது.

- Advertisement -

பூஜைக்கு பயன்படுத்தும் செம்பு பாத்திரங்கள் அல்லது இது போல சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய அன்றாட செம்பு பாத்திரங்கள் போன்றவற்றை பராமரிப்பது என்பது ரொம்பவும் சிரமமான விஷயமாக இருக்கும். பித்தளையை காட்டிலும் செம்பானது மிக விரைவாகவே கருப்பு நிறம் கொண்டு விடும். செம்பின் இயற்கையான நிறம் நாளைடைவில் பயன்படுத்தும் பொழுது இயல்பாக விரைவில் மங்க ஆரம்பித்து விடும். அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் ரொம்பவும் கறுத்துப் போய் மங்கி காணப்படும்.

இத்தகைய செம்பு பாத்திரங்களை கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் எப்படி பளிச்சென மாற்றுவது? என்பதைத்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். செம்பு தட்டுக்கள், செம்பு கலசங்கள், செம்பு தண்ணீர் ஜக் அல்லது குடங்கள் போன்றவற்றை ரொம்ப சுலபமாக பராமரிக்க முடியும். இது போன்ற செம்பு பாத்திரங்கள் நிறம் மங்க ஆரம்பித்தவுடன் அதை தண்ணீர் எதுவும் படாமல் டிரை ஆக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நன்கு புளித்த தயிரை பூச வேண்டும்.

- Advertisement -

மிகவும் புளித்த தயிர் உங்களிடம் இருந்தால் அதை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதை செம்பு பாத்திரம் முழுவதும் எல்லா இடங்களிலும், ஓரங்களிலும் கூட தடவி விடுங்கள். சிறிது நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். புளித்த தயிரில் இருக்கும் சில நுண்ணுயிரிகள் செம்பு பாத்திரத்தை பளிச்சிட வைக்கும். 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை கைகளால் தேய்த்தாலே போதும், இழந்த பொலிவை அது அடைந்து விடும். இதற்காக ரொம்பவும் சிரமப்பட வேண்டிய அவசியமும் கூட இல்லை.

புளித்த தயிர், புளித்த மோர் போன்றவற்றை பயன்படுத்தி செம்பு பாத்திரங்களை சுலபமாக பளபளக்க செய்து விடலாம். பிறகு சாதாரண ஸ்கிரப்பர் கொண்டு சபீனா தொட்டு லேசாக தேய்த்து எடுத்தால் புதியது போல ஜொலிக்க ஆரம்பித்து விடும். இதன் பிறகு கழுவி காய வைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். முந்தைய காலங்களில் குளங்களில் செம்பு காசுகளை போட்டு வைப்பார்கள். செம்பு காசு புழக்கத்தில் இருக்கும் போது இது போல செய்யப்படுவது உண்டு. இதனால் குளத்தில் இருக்கும் நீர் மூலிகை நீராக மாறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -