இட்லி தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம். உங்க வீட்ல சேமியா ரவை இருக்கா, இந்த அடைய ட்ரை பண்ணி பாருங்களேன்!

adai4
- Advertisement -

இட்லி மாவு தோசை மாவு தீர்ந்துவிட்டது. என்ன டிபன் செய்யலாம். கவலை வேண்டாம். உங்க வீட்ல சேமியா ரவை இருக்கா. அழகான ஒரு ஊத்தாப்பத்தை பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இந்த டிஷை அடை என்றும் சொல்லலாம். ஊத்தாப்பம் என்றும் சொல்லலாம் அது உங்களுடைய இஷ்டம் தான். சட்டென அந்த ஊத்தாப்பம் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

semiya

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 1 கப் அளவு சேமியாவை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மூடி போட்டு விடுங்கள். சேமியா முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சேமியா அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ரவை 1/2 கப், தயிர் 3/4 கப், சேர்த்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இந்த கலவையானது பத்து நிமிடம் ஊறிய பின்பு, ரவை தயிருடன் தோசைக்கு தேவையான அளவு உப்பு, முதலில் வேக வைத்து எடுத்து வைத்த சேமியா, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய குடைமிளகாய் – 1, இஞ்சித் துருவல் – 1 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து இன்னும் 1 கப் அளவு தண்ணீரை இந்த கலவையோடு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். எல்லாப் பொருட்களும் சேர்ந்து கெட்டியான மாவு நமக்கு கிடைத்திருக்கும். (சேமியாவை போட்டு கொழகொழவென பிசையக்கூடாது. சேமியா ஆங்காங்கே தெரிந்தால்தான் மொறுமொறுவென சிவந்து வரும்.)

rava-idli-mavu

எந்த கப்பில் முதலில் சேமியாவை அறுந்து இருக்கிறீர்களோ, அதே கப்பில் ரவை, தயிர், தண்ணீரையும் அளந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஊத்தப்பம் செய்ய இந்த மாவு நமக்கு கொஞ்சம் கட்டியாக தான் தேவைப்படும். இறுதியாக கால் ஸ்பூன் சமையல் சோடாவை இந்த மாவில் சேர்த்து, கலந்துவிட்டால் தோசை செய்வதற்கு மாவு தயார். பதினைந்து நிமிடங்கள் கூட ஆகாது இந்த மாவை தயார் செய்ய.

rava-idli-mavu1

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து விட்டு, மிதமாக சூடு செய்து விட்டு, கல்லின் எண்ணெய் தடவி விட்டு ஒரு கரண்டி இந்த மாவை தோசைக்கல்லில் வார்த்து ஊத்தப்பம் சைசுக்கு லேசாக தேய்க்க வேண்டும். நல்லெண்ணெய் விட்டு சிவக்க வைத்து பொன்னிறமானதும் தோசையை மறுபக்கம் திருப்பி போட்டு, சிவக்க வைத்து எடுத்தால் சேமியா ரவை ஊத்தாப்பம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உங்கள் விருப்பம்போல சாம்பார் சட்னி வகைகளை பரிமாறி கொள்ளலாம். சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

adai5

பின்குறிப்பு: இந்த தோசையில் உங்களுக்கு தேவைப்பட்டால் துருவிய கேரட், முட்டைகோஸ் மற்றும் பொடியாக நறுக்கிய மஸ்ரூம் துண்டுகள் போன்ற காய்கறிகளையும் சேர்த்து கலந்து ஊத்தப்பம் ஆக சுடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இன்னும் இன்னும் ஹெல்தி பிரேக்ஃபாஸ்டாக மாறிவிடும்.

- Advertisement -