- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உப்புமா செய்வதற்கு பதிலாக சேமியா இட்லி செய்வோமா

உப்புமா செய்வதற்கு பதிலாக சேமியா இட்லி செய்வோமா

- Advertisement -

அவசர நேரத்தில் உதவி செய்யக்கூடிய பொருட்களாக நாம் வீட்டில் வாங்கி வைக்கும் பொருட்கள் தான் ரவையும், சேமியாவும். இட்லி தோசைக்கு மாவு இல்லாத நேரத்திலும் அல்லது சப்பாத்திக்கு மாவு இல்லாத நேரத்திலும் அவசரத்திற்காக இந்த சேமியாவையும், ரவையையும் நாம் பயன்படுத்தி உப்புமா செய்து கொடுப்போம். அவ்வாறு செய்வதற்கு பதிலாக சேமியாவே வைத்து புதுவிதமாக சேமியா இட்லி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக சேமியாவை வைத்து சேமியா பாயாசம், சேமியா கேசரி என்ற இனிப்பு வகைகளை செய்வார்கள். பிறகு சேமியா உப்புமா, சேமியா இடியாப்பம், சேமியா கிச்சடியும் என்று டிபன் வகைகளும் செய்வார்கள். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் டிபன் ஐட்டம் தான் சேமியா இட்லி.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சமையல் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • கருவேப்பிலை – சிறிது
  • சேமியா – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தயிர் – 1 கப்.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைக்க வேண்டும். அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை போட வேண்டும். உளுந்து நன்றாக சிவக்கும் அளவிற்கு வறுக்க வேண்டும். அனைத்தும் சிறந்த பிறகு அதில் சேமியாவை கொட்டி வறுக்க வேண்டும். சேமியா வறுத்த சேமியாவாக இருந்தாலும் அதை மறுபடியும் வறுக்க வேண்டும்.

வறுத்த இந்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு இந்த இட்லிக்கு தேவையான அளவிற்கு உப்பை சேர்க்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் தயிரை சேர்த்து கால் டம்ளர் அளவிற்கு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலந்து மூடி வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

10 முதல் 15 நிமிடம் வரை சேமியா ஊற வேண்டும். நன்றாக ஊறிய பிறகு சேமியாவை நன்றாக கலந்து விட்டு நாம் எப்போதும் இட்லி ஊத்துவது போல் இட்லி பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து அடுப்பில் வைத்து விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் இந்த சேமியாவை இட்லி மாவு ஊத்துவது போல் ஊற்றி வைத்து இட்லி சட்டிக்குள் வைத்து மூடி விட வேண்டும்.

பத்து நிமிடம் நன்றாக வேக வேண்டும். பிறகு மூடியை திறந்து கையை வைத்து தொட்டால் கையில் சேமியா ஒட்டக்கூடாது. சேமியா ஒட்டாமல் வந்துவிட்டால் சேமியா இட்லி வெந்து விட்டது என்று அர்த்தம் இப்பொழுது அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து இதனுடன் நம் சாதாரணமாக இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவது போல் சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி என்று அனைத்தையும் உபயோகப்படுத்தி சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: கர்நாடகா ஸ்பெஷல் காரசாரமான ரஞ்சக்கா சட்னி ருசியா செய்யலாம் வாங்க

உப்புமா என்று சொன்னதும் ஓடிவிடும் குழந்தைகள் மத்தியில் சேமியாவை வைத்து புதுமையான முறையில் இப்படி இட்லி செய்து கொடுத்துப் பாருங்கள். ஓடிப் போனவர்களும் திரும்பி வந்து சாப்பிடுவார்கள்.

சற்று முன்