எத்தனை முறை செய்தாலும் இந்த சேமியா உப்புமா மட்டும் உதிரி உதிரியாக வரவே மாட்டேங்குதா உங்களுக்கு. இந்த டிப்ஸை ட்ரை பண்ண, உப்புமா குழைந்து போக வாய்ப்பே இல்லை.

semiya
- Advertisement -

சிலபேருக்கு எத்தனை முறை முயற்சி செய்தாலும் இந்த சேமியா உப்புமா மட்டும் உதிரி உதிரியாக வரவே வராது. குழைந்து போய்விடும். சுவையாக இருக்காது. எப்பப்பாத்தாலும் சேமியா உப்புமா தான் என்று விரக்தியோடு இருப்பவர்களுக்கு புதுவிதமான சேமியா ரெசிபி என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். முற்றிலும் வித்தியாசமான மிக மிக சுலபமான சேமியா புலாவ் ரெசிபி உங்களுக்காக. சேமியா உப்புமா, சேமியா புலாவ், சேமியா கிச்சடி, என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் அது நம்முடைய விருப்பம் தான்.

semiya1

முதலில் ஒரு பாக்கெட் சேமியாவை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அந்த சேமியா மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிடுங்கள். சுடு தண்ணீர் ஊற்ற வேண்டாம். சாதாரணமாக பச்சைத் தண்ணீர் ஊற்றினாலே போதும். 10 நிமிடங்கள் ஊறிய சேமியாவை தண்ணீரில் இருந்து நன்றாக பிழிந்து எடுத்து இட்லி பாத்திரத்தில், இட்லி தட்டின் மேல் வைத்து 10 நிமிடம் போல ஆவியில் வேக வைத்து விடுங்கள். வேக வைத்த சேமியா அப்படியே தனியாக இருக்கட்டும். (இட்லி வேகவைப்பது போல சேமியாவை வேக வைக்கணும் அவ்வளவுதான்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பட்டாணி, கேரட், பீன்ஸ், தக்காளி – 1 பொடியாக நறுக்கியது சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு இந்த பொருட்களை எல்லாம் வதக்கி காய்களை வேக வைத்துக் கொள்ளுங்கள். (காய்களையும் தக்காளியையும் மிக மிக பொடியாக நறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள்.)

semiya2

அதன்பின்பு கரம்மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சேர்த்து 2 முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு நிமிடம் போல நன்றாக கலந்துவிட வேண்டும். முட்டை பாதி வெந்தவுடன் ஆவியில் வேக வைத்திருக்கும் சேமியாவை கடாயில் இருக்கும் மசாலா பொருட்களோடு போட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி, 2 நிமிடம் போல கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு சுடசுட இந்த சேமியா உப்புமாவை பரிமாறி பாருங்கள். நிச்சயமாக இப்படி சேமியா உப்புமா செய்தால் குழைந்து போகாது. சூப்பரான டேஸ்டில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. ட்ரை பண்ணி பாக்கறீங்க.

semiya3

பின்குறிப்பு: உங்களுக்கு தேவையான இன்னும் சில காய்கறிகளை வேண்டும் என்றாலும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடாதவர்கள் முட்டையைத் தவிர்த்து விட்டு வெறும் காய்கறிகளை சேர்த்து கூட இந்த சேமியா உப்புமாவை செய்து சாப்பிடலாம்.

- Advertisement -