கோடைகால அரிப்பு வேர்க்குரு தோல் கருமை நிறம் மாறுதல் தடுக்க எளிய குறிப்புகள்

beauty tips
- Advertisement -

கோடை காலம் வந்து விட்டாலே சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் வரத் தொடங்கி விடும். ஆகையால் மற்ற காலத்தை விட இந்த நேரத்தில் நம்முடைய சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. முக்கியமாக வெயில் காலத்தில் வேர்க்குரு அரிப்பு வேனிற்கட்டி போன்றவை எல்லாம் வரக் கூடும். இது மட்டும் இன்றி வெயிலில் சென்று வரும் பொழுது நிறம் அதிகமாகவே கருப்படைந்து மோசமாகி விடும்.

இதற்கெல்லாம் நாம் பராமரிப்பு என்று பெரிய அளவில் கவலையோ செலவு செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களைக் கொண்டு இந்த பிரச்சனைகளை எல்லாம் சுலபத்தில் நீக்கி விடலாம். அது குறித்தான தகவலை தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கோடைகால சரும பராமரிப்பு முறைகள்

கோடை காலத்தில் வேர்க்குரு வருவது இயல்பான ஒன்று தான். உடலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது இது போல வேர்க்குருகள் உடலில் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றை சரி செய்ய கொஞ்சம் ரோஸ் வாட்டரில் சந்தனம் குழைத்து வேர்க்குரு பாதித்த இடத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து அதை சுத்தமான தண்ணீரால் கழுவினால் வேர்க்குருவின் பாதிப்பு குறையும்.

இது மட்டும் இன்றி வேர்க்குருவினால் ஏற்பட்ட எரிச்சலை குறைக்க கற்றாழை பெருமளவு உதவக் கூடும். மூன்று பங்கு தண்ணீரில் ஒரு பங்கு வினிகர் கலந்து அதை ஒரு மெல்லிய துணியில் நனைத்து எடுத்து முகம் முழுவதும் ஒற்றி எடுங்கள் இதன் மூலம் வேர்க்குருவினால் ஏற்படும் எரிச்சல் குறையும். வேர்க்குரு அரிப்பு சரியாக பேக்கிங் சோடாவுடன் கொஞ்சமாக தண்ணீர் கலந்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். அதை வேர்க்குரு அரிப்பு உள்ள இடத்தில் தடவ அதுவும் குறையும்.

- Advertisement -

அடுத்து வெயிலினால் நிறம் கருமையாதல் இது தான் மிகப்பெரிய பிரச்சனையாகவே பலருக்கும் இருக்கிறது. இந்த நிறம் மாறுதலுக்கு காரணம் சூரிய ஒளி நம் மீது படும் பொழுது நம் உடலில் இருக்கும் நலனின் உற்பத்தி அதிகமாகிறது. மெலனின் கருப்பு நிறத்தில் இருப்பதால் நம்முடைய தோலின் நிறமும் இவ்வாறு மாறுகிறது. இதை சரியாக பாதாம் பொடியை ஸ்கிரப் ஆக பயன்படுத்தலாம்.

அது மட்டும் இன்றி காய்ந்த நான்கு எலுமிச்சை தோலை பால் அல்லது தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விட்டு அதன் பிறகு சுத்தம் செய்து பாருங்கள் வெயிலினால் மாறிய நிறம் உடனே சரியாகும். அது மட்டும் இன்றி தயிர் மற்றும் மஞ்சளை சேர்த்து குழைத்து அதையும் பேக் போல பயன்படுத்தலாம். இதுவும் இந்த நிறம் மாறுதலை சரிப்படுத்தும்.

- Advertisement -

அதிகமான எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் லெமன் சாறோடு வெள்ளரிக்காய் சாறையும் சமமாக கலந்து அதை முகத்தில் தடவலாம். லெமன் ஒற்றுக் கொள்ளாது என்பவர்கள் வெள்ளரியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து அதை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து சுத்தம் செய்து விடுங்கள் இதுவும் நல்ல பலனைத் தரும்.

வெயில் காலத்தில் ஏற்படும் வேனிற் கட்டி இதுவும் அதிக அளவு தொந்தரவு தரக்கூடியது தான். இதை சரி செய்ய வேண்டி இருக்கும் இடத்தில் கற்றாழையை தேய்ப்பது சிறந்த பலனை தரும். கற்றாழையில் துத்தநாகம் உள்ளதால் எரிச்சலை கட்டுப்படுத்துவதுடன் அதை சீக்கிரம் குணமாக்கும். கற்றாழைக்கு பதிலாக வெள்ளரிக்காய் துண்டுகளையும் இதற்கு பயன்படுத்தலாம்.

அதே போல் வேனிற்கட்டி பாதித்த இடத்தில் ஒருவித எரிச்சல் வலி இருக்கும். அது சரியாக தேங்காய் பால் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரை கழுவ வேண்டும். இதுவும் நல்ல பலனை தரும். இத்துடன் வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

இதையும் படிக்கலாமே: சரும பிரச்சனையை நீக்கும் விளக்கெண்ணெய்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான சரும பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதற்கான சரியான தீர்வுகளை தெரிந்து கொண்டு நம்மை நாம் பராமரித்துக் கொண்டாலே பல பெரிய பிரச்சனைகளில் இருந்து வெளி வரலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -