சரும பிரச்சனையை நீக்கும் விளக்கெண்ணெய்

vilakkennai
- Advertisement -

அழகான முகத்தோற்றத்தை பெறுவதற்காக பல ஃபேஸ் க்ரீம்களை நாம் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இன்றி அழகான முகத்தை நம்மால் பெற முடியும். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் விளக்கெண்ணெயை வைத்து நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்குவது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.

சருமத்தில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். இதிலிருந்து வெளிப்படக்கூடிய எண்ணையானது நம்முடைய சருமத்தை இளமையாகவும் பொலிவுடன் தக்க வைத்துக்கொள்ள உதவும். இந்த எண்ணெய் அதிகளவில் உற்பத்தி ஆனாலும் சரி அல்லது குறைவான அளவில் உற்பத்தியானாலும் சரி, அதனால் நம்முடைய சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படும். இப்படி ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நாம் நம் சருமத்தை காப்பாற்ற நம் முகத்திற்கு எண்ணையை தடவ வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு எண்ணைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் ஏற்படும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், கடுகு எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் என்று பல எண்ணெய்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு எண்ணெய்களிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ஒவ்வொரு எண்ணையை நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதும் அந்த எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய சருமத்தில் உள் சென்று நம்முடைய சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் விளக்கெண்ணையை பற்றி பார்ப்போம்.

விளக்கெண்ணையில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இந்த விளக்கெண்ணையை நாம் ஆமணக்கு எண்ணெய் என்றும் கூறுவோம். ஆமணக்கு விதையிலிருந்து பெறக்கூடிய இந்த எண்ணையை சுத்தமான எண்ணெயாக பார்த்து வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். இந்த எண்ணெயை நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பாக ஏதாவது ஒரு இடத்தில் லேசாக தடவி நம் சருமத்திற்கு இந்த எண்ணெய் பொருந்துமா என்பதை பார்த்துவிட்டு தான் உபயோகப்படுத்த வேண்டும்.

- Advertisement -

ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான ஆமணக்கு எண்ணையை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முதல் நாள் இரவே வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த எண்ணெயை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள்.

நீங்கள் எப்பொழுது குளிக்க செல்கிறீர்களோ அப்பொழுது போய் குளித்துக் கொள்ளலாம். இதில் நாம் மஞ்சளை சேர்த்து இருப்பதால் சளி பிடிப்பதற்குரிய வாய்ப்புகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து விடுவது நல்லது.

- Advertisement -

இந்த முறையில் தினமும் விளக்கெண்ணையை முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கும். கரும்புள்ளிகள் அகலும். முகப்பரு பிரச்சினைகள் நீங்கும். முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள் மறையும்.

இதையும் படிக்கலாமே: நிமிடத்தில் முகம் பளிச்சென்று மாற பக்காவான ஃபேஸ் பேக்

நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தக்கூடிய இந்த ஆமணக்கு எண்ணையை நாமும் பயன்படுத்தி தேவதை போல் திகழ்வோம்.

- Advertisement -