நிறைவேறாது என்று ஒதுக்கி வைத்த ஆசைகளும் நிறைவேறும். தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!

hanuman

மனிதனாகப் பிறந்தால் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆண்டவன் நமக்கு சக்தியை கொடுக்க வில்லை. இருப்பினும் நம்முடைய ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருந்தால், நியாயமான கோரிக்கைகளாக இருந்தால், அந்த ஆசைகளை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரைவாக நிறைவேற்றி கொள்ளலாம். அந்த வரிசையில் ஒரு சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hanuman-heart

சக்தி வாய்ந்தவர் என்றாலே அதில் ஹனுமனுக்கு முன்னுரிமை. மற்ற தெய்வங்களை எல்லாம் சக்திவாய்ந்த தெய்வங்கள் இல்லை என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு, ராமரிடம் தீராத பக்தியை கொண்ட இந்த ஹனுமனுக்கு ஒருவித பவர் கட்டாயம் உண்டு. இது ஹனுமன் பக்தர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

சக்தி வாய்ந்த ஹனுமனை எந்த கிழமையில் எப்படி வழிபாடு செய்தால், வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகளும் நிறைவேறும் என்று தெரிந்து கொள்வோமா? ஹனுமனை வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.

senthuram

சிலருக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு சனி பகவானால் வாழ்க்கையில் பெரிய பெரிய பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும். ஆசைகளை பட்டியல் போட்டு சொல்லிவிடமுடியாது.

- Advertisement -

உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட நியாயமான ஆசைகள் ஆக இருந்தாலும் சரி, எந்த கஷ்டங்கள் ஆக இருந்தாலும் சரி, அதை உடனடியாக சரி செய்ய அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். வியாழக்கிழமையில் ஹனுமனுக்கு, செந்தூர காப்பு சாத்த, செந்தூரத்தை வாங்கி கொடுப்பது, அனுமன் கோவிலில் இருந்து செந்தூரத்தை பிரசாதமாக வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, தினம் தோறும் உங்களுக்கு என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ, அதை மனதில் நினைத்துக்கொண்டு ‘ஸ்ரீ ராம ஜெயம்! ஸ்ரீ ராம ஜெயம்! ஸ்ரீ ராம ஜெயம்!’ என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லி, வலது கை மோதிர விரலால் தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதும்.

vadai-malai-hanuman

நீங்கள் நினைத்த காரியம் நிச்சயமாக தடையில்லாமல் நிறைவேறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வேண்டுதலை வைத்தால் சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

hanuman-sivan

எந்த ஒரு கஷ்ட காலத்திலும் எந்த ஒரு துயரம் ஏற்படும் போதும், மன சங்கடம் ஏற்படும் போதும் திக்கு தெரியாமல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போதும், ஹனுமனை மனதார நினைத்து கொண்டு ஸ்ரீ ராமஜெயம் என்று மனதார உச்சரித்தாலே போதும். கூப்பிட்ட குரலுக்கு வந்து உடனடியாக உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் தான் ஹனுமன். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் உண்டு.