பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ இதை செய்தாலே போதும்

couples

மனித உறவுகளில் மிகவும் அழகானதும், வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் உறவு கணவன் – மனைவி உறவாகும். மற்ற எல்லா உறவுகளிடமும் ஏற்படும் பிரச்சனைகள் போலவே கணவன் மனைவிக்குள்ளாகவும் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் ஒரு சிலர் தங்கள் கணவன் மற்றும் மனைவியை பிரிந்து சென்று வாழ துவங்குகின்றனர். இதனால் இருவருக்குமே மன உளைச்சல் உண்டாகிறது. மேற்கண்ட பிரச்சனையை தீர்க்கும் எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Marriage

தங்களை பிரிந்து சென்று வாழும் கணவன் அல்லது மனைவி மீண்டும் தங்களிடம் சேர்ந்து வாழ பலர் மாந்திரீக வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதற்கு பல ஆயிரம் ரூபாய் வரையும் கூட சில பண மோகம் கொண்ட மாந்திரீகர்கள் இவர்களிடம் வசூலித்து விடுகின்றனர். அதேநேரம் அந்த மாந்திரீக வழிமுறைகளால் இவர்களுக்கு பயன் ஏதும் ஏற்படுவதில்லை. மேற்கண்ட சூழ்நிலையில் இருக்கும் கணவன் அல்லது மனைவி பிரிந்து சென்ற தங்கள் வாழ்க்கைத் துணை மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ இந்த எளிய பரிகார முறைகளை கடைப்பிடித்தாலே போதும்.

கணவனை பிரிந்து வாழும் மனைவி தங்களின் கணவர் பயன்படுத்திய ஆடை அல்லது கைக்குட்டை போன்ற ஏதேனும் ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் 27 கொண்டை கடலைகளை வைத்து முடிந்து கொள்ள வேண்டும். கணவரின் ஆடை கிடைக்காதவர்கள் ஒரு மஞ்சள் துணியில் 27 கொண்டை கடலைகளை முடிந்து கொள்ளலாம். 27 நாட்களுக்கு அந்த கொண்டைக் கடலை முடிப்பை மனைவி தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். 27 நாட்கள் முடிந்த பின் மறுநாள் காலையில் அந்த முடிப்பை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பிரிந்து சென்ற என் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் குரு பகவானே” என்று 108 முறை கூறி வணங்க வேண்டும். பிறகு அந்த முடிப்பை ஓடும் தண்ணீரில் அல்லது ஏரியில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள்ளாக பிரிந்து போன கணவர் மீண்டும் உங்களை தேடி வந்து உங்களுடன் சேர்ந்து வாழ வழி வகை செய்வார் குருபகவான்.

Guru baghavan

மனைவியை பிரிந்து வாழும் கணவர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் சிவன் கோயிலில், இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் இருக்கும் சிலையை தொடர்ந்து வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்து வரும் போது 90 நாட்களுக்குள்ளாக பிரிந்து சென்ற மனைவி நீங்கள் அழைக்காமலேயே மீண்டும் உங்களுடன் சேர்ந்து வாழ உங்களை தேடி ஒருவர். மேற்கண்ட இரண்டு பரிகாரங்களையும் உங்கள் குலதெய்வத்தை முதலில் வணங்கிய பின்பு நம்பிக்கையுடன் செய்து வந்தால் பலன் நிச்சயம்.

இதையும் படிக்கலாமே:
விரும்பிய வேலை கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Separated couples pariharam in Tamil. It is also called as Kanavan manaivi pariharam in Tamil or Kanavan manaivi otrumai pariharam in Tamil or Thanthirigam pariharam in Tamil or Guru pariharam in Tamil.