2023 செப்டம்பர் மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

sep rasi palan
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் வேறுபடுகின்றன. அந்த வகையில் ஆங்கில மாதமாக இருக்கக் கூடிய இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ஒன்பது கிரகங்களின் அமைப்பை பொறுத்து 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது? என்பதை தான் இந்த ஜோதிட குறிப்பு தகவல்களின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் தடைகள் விலகி முன்னேற்றம் பெறக்கூடிய மாதமாக திகழப் போகிறது. வேலை தொடர்பாக எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஆடை ஆபரணங்கள் வண்டி வாகனங்கள் சேர்க்க ஏற்படும். அதனால் குடும்பத்தில் சந்தோஷம் மேலோகும். தங்களிடம் கொடுத்த வேலையை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதன் மூலம் வேலையில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து சென்றால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவாக்குவதற்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் நல ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முடிவெடுப்பதற்கு முன்பு ஒரு முறைக்கு நான்கு முறை நன்றாக யோசித்து பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுத்தால் நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் பணவரவு அதிகரிக்கும் மாதமாக திகழப் போகிறது. அதனால் வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். திருமணத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். வேலையில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளை உடன் இருப்பவர்களுடன் ஆலோசித்து எடுத்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மாதமாக திகழப் போகிறது. இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி நடைபெறும். மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. தொழிலில் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிக்கு வழிவகுக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சுற்றுலா பயணம் அல்லது ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வீர்கள்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் பாராட்டும் கௌரவமும் கிடைக்கக்கூடிய மாதமாக திகழப் போகிறது. இதுவரை எதிர்த்து நின்ற நண்பர்களும், உறவினர்களும் உங்களை தேடி வந்து உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். திருமண பேச்சுக்கள் கைகூடிவரும். புதிய வேலைக்கான முயற்சி வெற்றியைத் தரும். அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. படிப்படியாக முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிறரிடம் பேசும் பொழுது சொற்களை கவனத்துடன் பயன்படுத்தினால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் பணவிரயம் ஏற்படுத்தும் மாதமாக திகழப் போகிறது. பழைய வண்டி வாகனத்தை பழுது பார்க்கவும் அல்லது வீட்டை சரி செய்யவும் பணத்தை செலவிட நேரிடும். உடல் நலனில் அக்கறை தேவை. கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதங்கள் ஏற்படும் பொழுது விட்டுக் கொடுத்து சென்றால்தான் மகிழ்ச்சியாக வாழ முடியும். நேர்மறையான எண்ணங்களை அதிகரித்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காண முடியும். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் முறையான வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும். பணத்தை கையாளும் போது கவனத்துடன் கையாண்டால் விரையத்தை தவிர்க்கலாம்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடிய மாதமாக திகழப்போகிறது. எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று பண விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலிலும், வியாபாரத்திலும் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அலட்சியமாக இருப்பதை தவிர்த்தால் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். புதிய வேலை மாற்றத்தை செய்ய நினைப்பவர்கள் இந்த மாதம் தவிர்த்து விடுவது நல்லது. புதிதாக செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையுமே நன்றாக யோசித்து செய்ய வேண்டும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய மாதமாக திகழப் போகிறது. நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதனால் அனைவரின் பாராட்டையும், ஆதரவையும் பெற்று மகிழ்ச்சியில் ஆள்வீர்கள். தேவையற்ற வீண் வாதங்களையும், விவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு அதில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். நீண்ட நாட்களாக கண்ட கனவை நினைவாக்குவதற்குரிய அற்புத வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் வருமானம் பெருகக்கூடிய மாதமாக திகழப் போகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட பல மடங்கு அதிக லாபம் ஏற்படும். அதனால் வியாபாரத்தை அடுத்த கட்ட முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். உடல் நலன் சீராக இருக்கும். தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளை செய்ய ஏற்ற காலமாக இந்த காலம் அமையப்போகிறது. வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் முன்னேற்றத்திற்குரிய மாதமாக திகழப்போகிறது. புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நிதானமாக யோசித்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம். தேவையற்ற கோபத்தை தவிர்ப்பதால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும், தொழிலிலும் புதிய பொறுப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் மன நிம்மதி நிறைந்த மாதமாக திகழப்போகிறது. திடீர் பணவரவு ஏற்பட்டு உங்களை திக்கு முக்காட செய்யப் போகிறது. கொடுத்த பொறுப்பை உரிய நேரத்தில் செய்து முடித்ததால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சவால்கள் அனைத்தையும் எளிதாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவால் பிரச்சனைகள் ஏற்படும். கவனம் தேவை. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சொத்து சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமாக பயணம் செய்யும்பொழுது கவனம் தேவை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். வண்டி, வாகனம் வாங்குவதை தவிர்த்து விட்டு சொத்து வாங்குவது, வீடு கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பண விரயத்தை தவிர்க்கலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். கோபத்தில் தேவையற்ற வார்த்தைகளை விடுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தை கையாளும்போது கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை வேண்டும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பாக பலமுறை யோசித்து செய்ய வேண்டும். முடிந்தவரை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதையோ அல்லது பிறரிடம் கடன் வாங்கி தருவதையோ தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்பட்டால் சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் முயற்சிகள் வெற்றி அடையும் மாதமாக திகழப் போகிறது. புதிய தொழில், வேலை போன்றவற்றை முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட வேண்டும். மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் அவ்வப்போது வந்து கவலை தரும் நேரத்தில் உடன் இருப்பவர்கள் ஆறுதலாக செயல்படுவார்கள். வாக்குறுதி தருவதில் கவனம் தேவை. முடிந்தவரை யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. போதுமான அளவு பணவரவு இருக்கும்.

- Advertisement -