செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக சங்கு பூஜை

sangu poojai
- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு சுப நிகழ்வுகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அதிலும் குறிப்பாக திருமண யோகம் என்பது கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று சங்கை வைத்து வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் பூஜை செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். அந்த பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் ஒன்று தான் செவ்வாய் தோஷம். இது ஆண் பெண் என்று இருவருக்குமே ஏற்படக்கூடிய ஒன்றுதான். இப்படி யார் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தங்கள் வீட்டில் ஒரு சங்கை வைத்து பூஜை செய்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு வெள்ளி தட்டை வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெள்ளி தட்டை வீட்டில் இருக்கும் அம்மன் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். அம்மன் படத்தையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அம்மனுக்கு நெய்வேத்தியமாக இரண்டு வாழைப்பழத்தை வைக்க வேண்டும்.

இப்பொழுது சங்கை சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்து அந்த சங்கை வெள்ளித்தட்டின் மேல் வைத்து விட வேண்டும். பிறகு அதற்கு பூ வைக்க வேண்டும். பிறகு அந்த சங்கில் காய்ச்சாத பசும்பாலை ஊற்ற வேண்டும். அதற்கு மேல் இரண்டு துளசி இலைகளை வைக்க வேண்டும். அடுத்ததாக சங்கு மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

“ஓம் பவன ராஜாய வித்மஹே
பாஞ்ச ஜன்யாய தீமஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் கூற வேண்டும். பூஜை செய்து முடித்த பிறகு சங்கில் இருக்கக்கூடிய பாலை பூஜை செய்தவர்களும் வீட்டில் இருப்பவர்களும் பிரசாதமாக அருந்த வேண்டும். பிறகு சங்கை சுத்தம் செய்து நீர் உலர்ந்த பிறகு ஒரு பட்டு துணியால் சங்கை சுற்றி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை சங்கை வைத்து பூஜை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்கும்.

- Advertisement -

இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் எந்த நோக்கத்திற்காக நாம் செய்கிறோமோ அந்த நோக்கம் நடைபெறும். இந்த பூஜையை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அசைவத்தை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தோறும் நாம் சுக்கிர ஹோரையில் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற முடியும். ஏகாதேசி நாட்களில் செய்யும் பொழுதும் புதன்கிழமை தோறும் செய்யும்பொழுதும் மகாவிஷ்ணுவின் அருளை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: தை செவ்வாய் முருகன் வழிபாடு

ஒரு சங்கை வைத்து சங்கு மந்திரத்தை சொல்லி எந்தெந்த கிழமைகளில் நாம் பூஜை செய்தாலும் அந்த கிழமைக்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும்.

- Advertisement -