செவ்வாய் பகவானால் யோகத்தை பெறும் ராசிக்காரர்கள்

good luck astrology
- Advertisement -

நவகிரகங்களில் தளபதியாக விளங்குபவர் தான் இந்த செவ்வாய் பகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு கடந்து செல்ல 45 நாட்களை எடுத்துக் கொள்கிறார். நவகிரங்களில் மிக விரைவில் இடம் மாற்றம் செய்யக் கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். இவர் துணிவு, வீரம் தன்னம்பிக்கை போன்றவற்றுக்கு காரணியாக விளங்குபவர். நவகிரகங்களில் ஒவ்வொரு இடமாற்றமும் ஜோதிட சாஸ்திரத்தில் கட்டாயம் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தனுசு ராசியில் உதயமானார். இவர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை அந்த ராசியில் இருப்பார். இவருடைய இந்த பெயர்ச்சியினால் பிப்ரவரி 5ஆம் தேதி வரை யோகத்தில் குளிக்கப் போகும் ராசிக்காரர்களை பற்றி தான் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

மேஷ ராசி
செவ்வாய் பகவான் மேஷ ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் காரணத்தினால் இவர்கள் எடுக்கக்கூடிய காரியங்கள் அனுகூலமாக முடியும். இது வரை இருந்து வந்த காரியத்தடைகள் நீங்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டும். நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகள் முடியும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசியினருக்கு செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் உள்ளார். இவர்கள் பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்பட்டு தீரும். கடின உழைப்பாளியான இவர்களுக்கு உழைப்பினால் ஏற்படக் கூடிய நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் இருக்கும் வருமானம் அதிகரிக்கும். சரியான முறையில் திட்டமிட்டு தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயம் ஆகிறார். உங்களை சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி
உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயம் ஆகிறார். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். பெற்றோர் சகோதரர்கள் முழு ஆதரவு கிடைக்கும்
வேலை செய்து வந்த இடத்தில் இதுவரை இருந்த சிக்கல்கள் தொல்லைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் வருமானத்தால் நல்ல பலனை பெறலாம் ஆரோக்கிய குறைபாடு நீங்கும்.

இதையும் படிக்கலாமே: தை கிருத்திகை முருகர் வழிபாடு

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் படி செவ்வாய் பகவானின் மாற்றத்தினால் ஏற்படக்கூடிய அதிஷ்ட ராசிக்காரர்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள் இது அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயம் மாற்றம் உண்டு என்று இந்த தகவலுடன் பதிவினை முடிவு செய்து கொள்வோம்.

- Advertisement -