உங்கள் வீட்டைத் தேடி வரும், இந்த வாயில்லா ஜீவராசிகளை துரத்தி அடிக்கவே கூடாது. அதிர்ஷ்டம் உங்களை விட்டுப் போக, கஷ்டம் உங்களைத் தேடிவர, இது கூட ஒரு காரணம் தான்!

owl

நம்மை செல்வம் தேடி வருவதற்கு எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம். எத்தனையோ பூஜை முறைகளை செய்கின்றோம். ஆனால், இதோடு சேர்த்து சில பாவகாரியங்களையும் நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை சில சமயங்களில் மனிதர்களான நாம் மறந்து விடுகின்றோம். நமக்கு வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் செய்யக்கூடிய பாவங்களும் ஒரு காரணம் தான். அந்த வரிசையில், எந்த வாயில்லா ஜீவன்களையும் நாம் துன்புறுத்தக் கூடாது. குறிப்பிட்டு சொல்லப்போனால் நம் வீட்டை தேடி வரும் சில வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்து அவற்றை துன்புறுத்தாமல், பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், நமக்கான அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

dog1

சில பேர் வீட்டு வாசலில் அடிக்கடி நாய் வந்து நிற்கும், அமரும். சில சமயம் அந்த இடத்திலேயே படுத்து உறங்கும். அந்த நாய், அவர்களது வீட்டு வாசலில் அசுத்தப்படுத்தி வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக, சில பேர் அந்த நாயை குச்சியைக் கொண்டு வேகமாக அதன் காலிலோ அல்லது உடம்பின் மீது அடித்து துரத்துவார்கள். சிலபேர் அந்த நாயுடைய காலை எல்லாம் கூட உடைத்து விடுவார்கள்.

இப்படி செய்வதற்கு பதிலாக அந்த நாயை துன்புறுத்தாமல் துரத்துவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. பைரவரின் வாகனமாக சொல்லப்படும் நாய் உங்கள் வீடு தேடி வந்தால் முடிந்தால் அதற்கு உணவு வையுங்கள். முடியவில்லை என்றால் துன்புறுத்தாமல் துரத்தி விடுங்கள். நாயை துன்புறுத்தினால் கட்டாயம் உங்களுக்கு கஷ்டம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

lizard

நம் எல்லோரது வீட்டிலும் வாழும் ஒரு உயிரினம் பல்லி. இந்த பல்லியை கோவிலில் வைத்தால் தங்கபல்லி என்று சொல்லி தொட்டு வணங்கவோம். அதே பள்ளி நம் வீட்டில் வசித்தால் சிலபேர் அதன் மேல் சுடு தண்ணீரை தூக்கி கொட்டுவார்கள். துடைப்பத்தால் அடித்து தூக்கி தூரப் போடுவார்கள். அந்தப் பல்லி வீட்டில் முட்டை வைத்திருந்தால் அந்த முட்டையை எடுத்து உடைத்து குப்பையில் போடுவார்கள். இவை எல்லாம் நம் வீட்டை அசுத்தப்படுத்தும் தான். இல்லை என்று சொல்லவில்லை.

- Advertisement -

ஆனால், முடிந்தவரை பல்லிகளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு குச்சியை வைத்து வீட்டை விட்டு வெளியே வேண்டுமென்றால் அனுப்பிய கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் பல்லி வீட்டுக்குள் வராமல் ஏதாவது வாசனை திரவியங்கள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டில் பல்லியை சாகடிக்க கூடாது. அது உங்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்தை தான் கொண்டு வந்து சேர்க்கும்.

lizard

சொல்லப்போனால் எவரொருவர் வீட்டில் பல்லியே சுத்தமாக இல்லையோ அவர்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சில பேர் வீட்டின் பீரோவின் அடியிலேயே பல்லி வாழ்ந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் பணம் குறைவாக வந்தாலும், கஷ்டம் இல்லாத வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்கள். உங்களுடைய வீட்டு பீரோவில் அடியிலும் பள்ளி இருக்கிறதா சோதித்துப் பாருங்கள்.

kuruvi

சிட்டுக்குருவி வீட்டில் கூடு கட்டினால் நம்முடைய குடும்பத்திற்கு அது மிகவும் நல்லது என்று அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு வருகின்றது. அந்த சிட்டுக்குருவி இனம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட சிட்டுக்குருவி உங்கள் வீட்டைத் தேடி வந்தால், அது உங்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தவே நிறுத்தாதீர்கள். அதற்கான கூட்டை உங்களுடைய வீட்டில் கட்டினால் உங்களுடைய வீட்டிற்கு அதிர்ஷ்டம் தானாக தேடி வரும். சிட்டுக்குருவி உங்களுடைய வீட்டில் கூடு கட்டினால் அதை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கூட அதன் மேல் உங்கள் கை படக்கூடாது. ஒருவேளை அந்த கூட்டில் சிட்டுக்குருவி முட்டை வைத்து இருந்தால் அந்த முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியில் வருவதற்குள் தாய்க்குருவி பறந்து போய்விடும். அது நமக்கு பெரிய பாவமாக சொல்லப்பட்டுள்ளது.

owl

அடுத்ததாக ஆந்தை, ஆந்தையை பார்த்தாலே அலறி அடித்து ஓடி விடுவார்கள். ஆந்தை கெட்ட சகுணம் என்று, ஆனால் அதை நம்முடைய வீட்டு மொட்டை மாடிக்கு வருகை தந்தால், அதன் மூலம் நமக்கு கட்டாயம் அதிர்ஷ்டம் தான் வருமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் கெடுதல் நடக்காது. ஆகவே அதையும் அடித்து துரத்தும் பழக்கம் இருந்தால் இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். சிலபேர் ஆந்தையை பார்த்தால் கல் கொண்டு வீசுவார்கள். இனி ஆந்தையை துன்புறுத்த வேண்டாம்.

உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உங்கள் வீட்டு பால்கனியில் அடிக்கடி புறாக்கள் வந்து அமர்கிறது என்றால், அதைத் துரத்தி விடாமல் அது சாப்பிடுவதற்கான தானியத்தை போடுவது மிக மிக நல்லது. புறா என்று மட்டுமல்ல, உங்கள் வீட்டிற்கு உங்களை தேடி வரும் எந்த ஒரு வாயிலாக ஜுவராசியாக இருந்தாலும் அதை துன்புறுத்தாமல், உங்களால் முடிந்த உணவை அதற்கு கொடுத்துவிடுங்கள்.

pura

உங்கள் வீடு தேடி வரும் வாயில்லா ஜீவராசிகளை உயிரினங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த ஜீவராசிகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் அதைத் துரத்த வேண்டுமே தவிர, உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது என்ற ஒரே காரணத்தினால் அவைகளை நீங்கள் துன்புறுத்தும் பட்சத்தில் தீராத விளைவுகளை எதிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் சந்திக்க நேரிடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ராகு திசையால் தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் என்ன செய்ய வேண்டும்? ராகுவின் பிடியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள் உண்டா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.