வீட்டில், நீங்கள் செய்யும் பூஜைக்கு பலன் இல்லாமல் போவதற்கு இதுதாங்க முதல் காரணம். இந்த கதையை கொஞ்சம் கேளுங்களேன்!

sivarathiri-poojai
- Advertisement -

ஒரு கிராமத்தில் தீவிர சிவ பக்தன் ஒருத்தன் வாழ்வு வாழ்ந்து வந்தான். அவன் பரம ஏழை! மூன்று வேளை சாப்பிடுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருபவன். ஆனால் காலை மாலை இரண்டு வேளையும் இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்ய மட்டும் மறக்கவே மாட்டான். நெய்வேதியம் செய்துவிட்டு அந்த பிரசாதத்தை தான், அந்த ஏழை சிவபக்தன் உணவாக எடுத்துக் கொள்வான். வீட்டில் பஞ்சம் இருந்தாலும், இறைவனுக்கு நைவேத்தியம் வைப்பதிலும் பூஜை செய்வதிலும் அந்த பக்தன் குறை வைப்பதே கிடையாது. பல வருடங்களாக சிவனை வழிபாடு செய்தும், அவனுக்கு இருக்கும் கஷ்டம் மட்டும் தீரவே இல்லை.

sivan

தொடர்ந்து வழிபாடு செய்து வந்த இந்த ஏழை சிவ பக்தனுக்கு ஆழ் மனதில் ஒரு சந்தேகம் மட்டும் இருந்து வந்தது. ‘நாம் செய்யும் வழிபாட்டை சிவபெருமான் பார்க்கின்றாரா? நமக்கு இருக்கக்கூடிய பக்தி சிவபெருமானுக்கு தெரிகின்றதா?’ என்ற சந்தேகம் தான் அது. சந்தேகத்தோடு ஏழை பக்தனின் சிவ வழிபாடு தொடர்ந்தது.

- Advertisement -

ஒருநாள் எதிர்பாராதவிதமாக ஏழை பக்தன் தன்னுடைய நண்பனை சந்திக்கிறான். தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி புலம்பும் போது, இந்த பக்தனுடைய நண்பன், ‘சிவன் வழிபாடு செய்பவர்களுக்கு ஆயுள் முழுவதும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். இனி நீ சிவனை வழிபடாதே! இன்னொரு தெய்வத்தை வழிபாடு செய் என்று, வேறொரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி அந்த தெய்வத்தை வழிபட சொன்னான்.’

sivan2

வேறு ஒரு தெய்வம் கிருஷ்ண பரமாத்மா என்று வைத்துக்கொள்வோமே. மனம் குழம்பிய சிவபக்தன் என்ன செய்கின்றான்? தன்னுடைய வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை எடுத்து பரண் மேலே வைத்துவிட்டு, பூஜை அறையில் கிருஷ்ண பரமாத்மாவின் படத்தை கொண்டு வந்து வைத்து பூஜை செய்ய ஆரம்பிக்கிறான்.

- Advertisement -

கிருஷ்ண பரமாத்மாவுக்கு தீப தூப ஆராதனை செய்யும் போது அந்த புகை நேராக, பரண் மேல் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை நோக்கி சென்றது. சிவ பக்தனுக்கு ஒரு மன உறுத்தல். நாம் கிருஷ்ணனுக்காக செய்யும் பூஜையின் வாசம் சிவபெருமானினுக்கு செல்கின்றதே என்று நினைத்து, சிவலிங்கத்தை ஒரு துணியினால் கட்டி மறைத்து விடுகிறான்.

sivan-workship

சிவபெருமானை மறைத்து வைத்துவிட்டு, திரும்பி பார்த்தால் எம்பெருமான், இந்த ஏழை பக்தனின் கண்களுக்கு காட்சி தருகின்றார். ஆச்சரியத்தில் மூழ்கி விட்டான் சிவபக்தன். இத்தனை நாட்கள் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு நேரில் வராத எம்பெருமான்! இன்று எப்படி வந்தார் என்ற மனக் குழப்பம் இவனுக்குள் ஏற்பட்டது.

sivan-4

இதற்கான தீர்வையும் கொடுத்தார் சிவபெருமான். ‘இத்தனை நாட்களாக நீ எனக்கு பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்து வந்தாய், ஆனால் இந்த பூஜை புனஸ்காரங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொள்கின்றேனா? உன்னுடைய பக்தியை நான் புரிந்து கொள்கிறேனா? என்ற சந்தேகம் உனக்குள் இருந்துகொண்டே வந்தது. இன்று தான், உன்னுடைய மனதில் சந்தேகமே இல்லாமல், பரண்மேல் நான் இருப்பதை உணர்ந்தாய்,. கண்முன்னே வந்தேன். என்று கூறி, அந்த ஏழை சிவபக்தனுடைய கஷ்டத்தை எல்லாம் போக்கினார் எம்பெருமான்.

Sivan-manthiram

உங்களுக்கு புரிந்ததா நம்பிக்கை இல்லாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜை புனஸ்காரத்திர்க்கும் நிச்சயமாக பலன் இல்லை. எந்த சுவாமியைக் வழிபாடு செய்கின்றோம் என்பதில் கேள்வியே கிடையாது. அந்த தெய்வத்தை நாம் எப்படி வழிபடுகின்றோம் என்பதில் தான் நம்முடைய பக்தி மறைந்துள்ளது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -