ஷாம்பூவை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்ன்னு யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த ஷாம்பு வச்சு செய்யலாம் தெரியுமா? இதெல்லாம் தெரிஞ்சா நீங்களே ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.

shampoo hacks
- Advertisement -

இதுவரைக்கும் நாம் ஷாம்புவை தலைக்கு குளிக்க மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த ஷாம்புவை பயன்படுத்தி வீட்டில் எத்தனை வேலைகளை சுலபமாக செய்யலாம் என்பதையும் இதனால் எவ்வளவு பணத்தை நாம் மிச்சப்படுத்தலாம் என்பதை எல்லாம் தெரிந்தால் நீங்களே பிரமித்து போவீர்கள். அந்த அளவிற்கு அற்புதமான டிப்ஸை எல்லாம் தான் இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நீங்கள் பயன்படுத்தும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் அதில் கொஞ்சமாக எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாக குலுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த ஸ்பிரேவை வைத்து என்னென்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் கதவு ஜன்னல் கண்ணாடி இவை அனைத்தையுமே இந்த ஸ்பிரேவை வைத்து சுத்தம் செய்து பாருங்கள் அவ்வளவு பளிச் சென்று மாறி விடும். இதே வைத்து கிச்சன் பைப், சிங்க் போன்றவற்றில் கூட சிறிது நேரம் ஸ்ப்ரே செய்து விட்டு அதன் பிறகு பிரஷ் வைத்து தேய்த்தால் அதில் இருக்கும் உப்புக்கறைகள் கூட சீக்கிரத்தில் போய் விடும். அதே போல் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய இந்த ஷாம்பு மிகவும் உதவியாக இருக்கும். அது மட்டும் இன்றி ஷாம்பு வைத்து துடைக்கும் போது பிரிட்ஜும் வாடை வராமல் நறுமணத்துடன் இருக்கும்.

கதவு இடுக்கில் இருக்கும் கம்பிகளில் மழைக்காலங்களில் எல்லாம் இறுக்கமாகி திறக்க மூட கடினமாக இருக்கும். அதில் சத்தம் வேறு வரும். அதை சரி செய்ய இது வரை எண்ணெய் ஊற்றி தான் பழக்கம். ஆனால் அதற்கு பதிலாக அந்த இடங்களில் இந்த ஸ்பிரேவை அடித்து பாருங்கள் கதவும் சுலபமாக மூட வரும் எண்ணெய் ஊற்றும் போது அந்த இடத்தில் கறை படிந்து அதை தனியாக சுத்தம் செய்ய வேண்டும். இதில் அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

- Advertisement -

இப்போதெல்லாம் ஹேண்ட் வாஷ் பயன்படுத்தாத வீடுகளே கிடையாது. கொஞ்சம் நல்ல தரமான ஹேண்ட்வாஷ் வாங்க வேண்டும் என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும் அதற்கும் இதே போல இந்த ஸ்ரேவை கொஞ்சமாக எடுத்து கைகளை சுத்தம் செய்து பாருங்கள் ஹேண்ட் வாஷை விட இது நல்ல ஒரு சுத்தத்தை கொடுக்கும்.

நாம் பயன்படுத்தும் துணிகளில் சில மிகவும் மெல்லியதாக இருக்கும் அல்லது விலை கூடுதலாக இருக்கும். இதை மெஷினில் போட்டு துவைக்கும் போது அதிலிருந்து நூல் வெளியில் வந்து துணி வீணாகி விடும். இனி நீங்கள் துணி துவைக்கும் போது கொஞ்சம் இந்த ஷாம்பூவை கலந்து விட்டால் போதும். துணி எவ்வளவு நாள் ஆனாலும் வீணாகாமல் நிறமும் மாறாமல் நன்றாகவே இருக்கும்.

- Advertisement -

துணிகளில் கறை பிடித்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினம். அதிலும் வெள்ளைத் துணியில் காபி கறைகள் பட்டு விட்டால் நீக்குவது அவ்வளவு எளிதில்ல. அந்த இடங்களில் கூட கொஞ்சம் வைத்து டூத் பிரஷை வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தால் கறை இருந்த இடமே தெரியாமல் போய் விடும். அதன் பிறகு அந்த துணியை நீங்கள் எப்போதும் போல துவைத்து எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட! ஆமால்ல இதை இப்படி கூட செய்யலாமேன்னு நீங்க யோசிக்கிற மாதிரி இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற அட்டகாசமான ஸ்மார்ட் ஐடியா.

நகைகளை சுத்தம் செய்ய பல வழிகள் இருந்தாலும் கல் வைத்த நகைகளை சுத்தம் செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். இல்லை என்றால் அதில் கறை பிடித்து விடும் சில நேரங்களில் கற்கள் உதிர்ந்து விடும். இனி அதற்கும் இந்த ஷாம்பூவை கொண்டு லேசாக பிரஷ் வைத்து தேய்த்து பாருங்கள் கல் வைத்த நகையெல்லாம் பளிச்சென்று மின்னும். இந்த ஷாம்பூவை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

- Advertisement -