ஷாம்பூ தலைக்கு மட்டுமல்ல இதற்கெல்லாம் பயன்படும்னு தெரிஞ்சா இனி காலி பேக்கெட்டை கூட தூக்கி போட மாட்டீங்க!

shampoo-cleaning
- Advertisement -

நாம் தலைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஷாம்பூவில் சில செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் நம் தலையை மட்டும் சுத்தம் செய்வதோடு அல்லாமல், நம் வீட்டில் இருக்கும் பொருட்களையும் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த குறிப்புகள் ஷாம்பூவை கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. தலைக்கு மட்டுமல்லாமல் ஷாம்பூ வீட்டு உபயோகத்திற்கு எப்படி எல்லாம் பயன்படுத்துவது? என்று இந்த பதிவின் மூலம் தெரிஞ்சுக்கோங்க.

குறிப்பு 1:
வீடு துடைக்க லைசால் இல்லாத பொழுது நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை அரை பேக்கெட் அளவிற்கு அரை பக்கெட் தண்ணீரில் சேர்த்து தண்ணீரை குலுக்கி விடாமல் லேசாக மாப்பை உள்ளே நுழைத்து, பிழிந்த பின்னர் துடைத்து பாருங்கள், வீடு அவ்வளவு வாசமாக சுத்தமாக மாறும். தண்ணீரை அதிகம் குலுக்கி விட்டால் நுரைக்க ஆரம்பித்து விடும் பிறகு வழுக்கி விட வேண்டியது தான். எந்த நறுமண பொருளும் தராத ஒரு சுத்தத்தையும், வாசத்தையும் ஷாம்பூ கண்டிப்பாக கொடுக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பதற்காக ஹேண்ட் வாஷ் வாங்கி வைப்பது உண்டு. ஹேண்ட் வாஷ் இல்லாத சமயங்களில் அல்லது ஹேண்ட் வாஷ் பயன்படுத்த முடியாதவர்கள் ஏதாவது ஒரு காலியான ஹேண்ட் வாஷ் டப்பாவில் முக்கால் பாகம் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் அரை பேக்கெட் நீங்கள் தலைக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பூவை கலந்து குலுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வாரம் வரை நல்ல ஒரு சுத்தத்தை நம் கைகளுக்கு கொடுக்கும். சூப்பரான வாசமாகவும், கைகள் பளிச்செனவும் மாறும். அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு இதில் கழுவி பாருங்கள் கொஞ்சம் கூட வாசம் இருக்காது.

குறிப்பு 3:
நம் தலைமுடி ஷைனிங்காக பளபளன்னு இருக்க ஷாம்பூவில் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இந்த கலவை நம் வீட்டில் இருக்கும் கண்ணாடி மற்றும் பளபளப்பான பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்வதற்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். கண்ணாடி பொருட்கள் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு ஷாம்பூ கலந்த ஸ்பிரே சூப்பராக பயன்படும். ஸ்ப்ரே பாட்டிலில் ஷாம்பூவை கால்வாசி ஊற்றி கலந்து வைத்துக் கொண்டு ஃப்ரிட்ஜ், மிக்ஸி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டிவியின் மேற்புறம் போன்றவற்றை கூட லேசாக ஸ்பிரே செய்து சுத்தமான துணியில் துடைத்து எடுத்தால் பளிச் பளிச்சுனு மின்னும்.

- Advertisement -

குறிப்பு 4:
உங்களிடம் இருக்கும் பழைய தங்க மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்வதற்கு கூட இந்த ஷாம்பூ பயன்பட போகிறது. நிறம் மங்கி அழுக்காக இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஒரு துளி ஷாம்பூ கையில் போட்டுக் கொண்டு நகைகளை அலசி, ஒரு பழைய டூத் பிரஷ் கொண்டு லேசாக தேய்த்தால் போதும், புதிது போல பளபளன்னு மின்ன ஆரம்பிக்கும். நகைகள் மட்டுமல்ல தலைவார பயன்படுத்தும் சீப்பை கூட இந்த முறையில் நீங்கள் தேய்க்கலாம்.

குறிப்பு 5:
மிக்ஸி ஜாரில் அரைத்த பொருட்கள் காய்ந்து போய்விட்டால் அதை அவ்வளவு சுலபமாக கழுவ முடியாது. அந்த சமயத்தில் கொஞ்சம் ஷாம்பூவை ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியை ஒரு முறை இயக்கிய பின்னர் கழுவினால் ரொம்ப சுலபமாக கழுவி விடலாம். ஷாம்பூ அதிகம் சேர்த்தால் அதன் வாசம் போவதற்கு நேரம் எடுக்கும் எனவே நன்கு நாலைந்து முறை தண்ணீர் ஊற்றி அலசுங்கள்.

குறிப்பு 6:
ஷாம்பூ கலந்த ஸ்பிரே பாட்டில் கண்ணாடி பொருட்களை பளபளக்க செய்ய மட்டுமல்லாமல் ஷூக்களை பாலிஷ் போடவும் பயன்படுத்தலாம். திடீரென ஷூ பாலிஷ் இல்லை என்றால் கொஞ்சம் ஸ்பிரே செய்து காட்டன் துணையால் துடைத்தால் போதும் புதிது போல ஜொலிக்கும். சமையல் மேடையை சுத்தம் செய்யவும் இது போல ஷாம்பூ கலந்த ஸ்பிரே பயன்படுத்தினால் ஈக்கள், எறும்புகள் தொந்தரவு இல்லாமல் இருக்கும். சமையலறையும் நல்ல வாசம் வீசும்.

குறிப்பு 7:
குழந்தைகள் பள்ளிக்குப் போக பயன்படுத்தும் உடைகள் மற்றும் பட்டுத் துணிகள் போன்றவை நிறம் மங்காமல் இருக்க வாஷிங் லிக்விட் உடன் சிறிதளவு ஷாம்பூ சேர்த்து துவைத்து பாருங்கள், நீண்ட நாட்கள் பளிச்சென உழைக்கும்.

- Advertisement -