தலைக்கு போடும் ஷாம்புவுடன் இந்த 2 பொருளை சேர்த்து தலைக்கு குளியுங்கள். எந்த கெமிக்கலினாலும் தலை முடிக்கு பாதிப்பு வராது. முடி உதிர்வு உடனே நிற்கும்.

hari-shampoo
- Advertisement -

நம்முடைய தலைமுடிக்கு பயன்படுத்தும் எந்த ஷாம்பு ஆக இருந்தாலும் சரி, அதில் நிச்சயமாக கெமிக்கல் பொருட்கள் கலக்கப்பட்டு தான் இருக்கும். முடி உதிர்வை கட்டுப்படுத்த நீங்கள் எத்தனை ஷாம்புவை மாற்றிக் கொண்டே சென்றாலும் அதன் மூலம் நிச்சயமாக முழுமையான தீர்வு கிடைக்காது. எந்த ப்ரான்ட் ஷாம்பு பயன்படுத்தினாலும் சரி, அந்த ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல், நம் தலை முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, ஷாம்புவுடன் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கலந்து அதன் பின்பு உங்களுடைய தலைக்கு குளித்துப் பாருங்கள். உங்களுடைய முடி உதிர்வு உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.

hair2

ஷாம்புவுடன் கலக்கப்போகும் அந்த இரண்டு பொருள் வெந்தயம், இன்ஸ்டன்ட் காபி தூள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 பெரிய டம்ளர் அளவு குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்தத் தண்ணீரில் 1 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீரின் நிறம் வெந்தயத்தின் நிறத்திற்கு மாற வேண்டும். அந்த அளவிற்கு கொதிக்கவிடுங்கள். (வெந்தயம் தண்ணீரில் மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கட்டும்.)

- Advertisement -

அதன் பின்பு வெந்தயத்தில் இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தய தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு, அதில் 1/4 ஸ்பூன் காபி பவுடரை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் உங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவை, 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் அளவு உங்கள் தேவைக்கு ஏற்ப ஊற்றி, தண்ணீருடன் நன்றாக கலந்துவிட்டு, இந்த ஷாம்பு தண்ணீரை பயன்படுத்தி தலைக்கு ஒரே ஒருமுறை குளித்து பாருங்கள்.

vendhayam

இந்த தண்ணீரை தலைக்கு போட்டு நன்றாக மசாஜ் செய்து எப்போதும் தலை கசக்குவது போல, கசக்கி விட்டு தண்ணீரை ஊற்றி அலசி விடுங்கள். அவ்வளவு தான். தலைக்கு குளித்து அலசும் போது உங்களுக்கே வித்தியாசம் தெரியும். பாத்ரூமில் எவ்வளவு முடி உதிர்ந்து என்று. இந்த முறையில் ஷாம்புவைப் பயன்படுத்தினால் நுரை கொஞ்சம் குறைவாகத்தான் வரும்.

- Advertisement -

சாதாரணமாக ஷாம்புவை பயன்படுத்தி நீங்கள் தலை குளிப்பதற்கும், இப்படி மேல் சொன்ன படி ஷாம்புவை பயன்படுத்தி குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் தெரியும்.

long-hair

எந்த பிராண்ட் ஷாம்பு வாக இருந்தாலும் சரி, அதை இந்த தண்ணீரோடு கலந்து நம்முடைய தலைக்கு அப்ளை செய்து குளிக்கலாம். ஒரு முறை பயன்பாட்டிலேயே வித்தியாசம் தரக்கூடிய குறிப்பு தான் இது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது.

- Advertisement -