சனி தோஷம் போக்கும் அற்புதமான மந்திரம்

19325
- விளம்பரம் -

சனி பெயர்ச்சி நடக்கும் சமயங்களில், சனிபகவான் சில ராசிக்காரர்களை தண்டிப்பதும் சில ராசிக்காரர்களுக்கு நர் பலன்களை தருவதும் வழக்கம். சிலருக்கு ஜாதகத்திலே சனி தோஷம் இருந்தால் அவர்களுக்கு சனிபகவானால் சில இன்னல்கள் ஏற்படும். சனி பகவானை சாந்தப்படுத்தி அவர் அளிக்கும் தண்டனையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அது பற்றி பார்ப்போம்.

sani

மந்திரம்:
ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்

- Advertisement -

பொருள்:
மகரம், கும்பம் ஆகிய ராசிகளின் தலைவரும், மேற்கு, தெற்கு ஆகிய மண்டலங்களில் வீற்றிருப்பவரும், தன்னை வணங்குபவருக்கு நீண்ட ஆயுளை வரமாக அருளும் சனி பகவான், நன்மை செய்யட்டும்.

sani bagavaan

சனி கிழமைகளில் குளித்துவிட்டு, சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ள கோயிலிற்கு சென்று சனிபகவானை மனமுருகி வேண்டி இந்த மந்திரத்தை கூறி வந்தால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம். மந்திரத்தை கூறமுடியாதவர்கள் மந்திரத்தின் பொருளையாவது கூறி வழிபடலாம்.

குளிகன்

அருகில் சனிபவானுக்கு தனி சன்னதி கொண்ட ஆலயம் இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருந்தபடியே சனிபகவானை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி வழிபடலாம்.

Advertisement