அடிக்கடி உங்கள் கிச்சன் கத்திரிக்கோலை சானா பிடிப்பீர்களா? இனி காசு கொடுத்து சானா பிடிக்காமல் வீட்டிலேயே 5 நிமிடத்தில் எப்படி புதிது போல் கூர்மையாக மாற்றலாம்?

scissors-sharpen1
- Advertisement -

நாம் கத்திரிக்கோலை அதிகமாக பயன்படுத்துவது கிச்சனில் தான். சமையலறையில் பாக்கெட்டுகளை கத்தரிக்க கத்தரிக்கோல் ஒன்றை தொங்கவிட்டு இருப்போம். இந்த கத்தரிக்கோல் அடிக்கடி பயன்படுத்துவதால் விரைவாக கூர்மை மழுங்குவதை பார்த்திருப்போம். மொக்கை கத்திரிக்கோலை அடிக்கடி சானா பிடித்து வைப்பதை ஒரு வேலையாகவே செய்து கொண்டிருந்தால் இனி அதற்கான அவசியம் இல்லை! வீட்டிலேயே எளிதாக சில குறிப்புகளை பயன்படுத்தி சுலபமாக உங்கள் கத்திரிக்கோலை புதியது போல் கூர்மையாக்கி விடலாம், சரி அது எப்படி? என இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

scissors

கத்திரிக்கோலை யாரும் அடிக்கடி சுத்தம் செய்வது கிடையாது. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட எண்ணெய் பிசுக்குடன், அழுக்காக இருக்கும். கத்தரிக்கோலை அடிக்கடி சாமான் கழுவும் பொழுது இரும்பு நார் கொண்டு லேசாக தேய்த்து கழுவி காய வைத்து கொள்ளலாம். இதனால் விரைவாக கத்தி மழுங்குவதை தடுக்கலாம். கத்தரிக்கோலின் கூர்மை குறையும் பொழுது சொர சொரப்பாக இருக்கும் படிக்கட்டுகளில் தேய்த்து கூர்மைப் படுத்தலாம் அல்லது உங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு நசுக்க பயன்படுத்தும் கல்லின் பின்புறம் 5 நிமிடம் நன்கு தேய்த்தால் போதும் கூர்மை ஆகிவிடும்.

- Advertisement -

ஸ்டீல் ஸ்பூன் அல்லது ஸ்டீல் கத்திகளை வைத்து கத்தரிக்கோலின் முனையை தேய்த்தால் கூர்மை வலுவடையும். ஒரு ஐந்து நிமிடத்திற்கு இது போல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் வீணாகத் தூக்கி எறியும் மாத்திரை கவர்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இது போல் உங்களுடைய கத்தரிக்கோல் மழுங்கிப் போகும் சமயத்தில் அந்தக் கவர்களை துண்டு துண்டாக கத்தரித்தால் போதும், நல்ல கூர்மை அடையும்.

tablet-cover-scissor

இதே போன்ற ஒரு முறையில் வேக வைத்த முட்டை ஓடுகளை தூக்கிப் போடாமல் வெயிலில் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். உங்கள் கத்தரிக்கோல் கூர்மை இழக்கும் பொழுது அந்த ஓடுகளை துண்டு துண்டாக கத்தரித்தால் கத்தரிக்கோல் நன்கு கூர்மை அடையும். சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு கத்தரிக்கோல் கூர்மை அடைய உதவி செய்யும். உப்பில் கத்தரிக்கோலை விட்டு ஒரு 5 நிமிடத்திற்கு கத்தரிப்பது போல் செய்து வந்தால் புதிய கத்தரி போல் நன்கு கத்தரிக்கும்.

- Advertisement -

அலுமினியம் ஃபாயில் பேப்பர் உங்களிடம் இருந்தால் அதையும் துண்டு துண்டாக கத்தரிக்க பயன்படுத்தலாம். பிரியாணிக்கு கொடுக்கும் டப்பாக்கள் இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில் செய்யப்படுவது தான். அல்லது எமரி பேப்பர் என்று சொல்லப்படும் சாண்ட் பேப்பர்(sand paper) கத்தரித்தால் இதை விட நல்ல ரிசல்ட் கிடைக்கும். இது துருப்பிடித்த இரும்பு கரைகளை நீக்குவதற்கு பயன்படும் ஒரு பேப்பர் ஆகும்.

scissors-sharpen

கண்ணாடி பாட்டில்கள், ஸ்பேனர், ஸ்க்ரூட்ரைவர், கட்டிங் பிளேடு போன்ற வீட்டிலிருக்கும் டூல்ஸ் வகைகளை லேசாக கத்தரிப்பது போல் ஐந்து நிமிடம் செய்தால் மழுங்கிய முனை கூர்மை அடையும். இது போல் நீங்கள் எந்த ஒரு பொருளைக் கொண்டும் கத்தரிக்கோலை கூர்மை செய்தாலும் அதன் பிறகு ஒரு முறை ஈரமாக இருக்கும் டிஷ்யூ பேப்பரை கொண்டு நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் மெல்லிய துகள்கள் நீங்கிவிடும். அதன் பிறகு சாதாரண காட்டன் துணியைக் கொண்டு துடைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டியது தான். இதில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை செய்து பார்த்து பயன் பெறலாமே!

- Advertisement -