குப்பையில் தூக்கி போடும் இந்த பொருளை வைத்து உங்கள் வீட்டு சிங்கை சுத்தம் செய்து பாருங்கள். காலத்திற்கும் உப்பு தண்ணீர் கரை படியாமல், சிங்க் புத்தம் புதுசு போல மின்னும்.

shik-cleaning
- Advertisement -

குப்பையில் தூக்கி போடக்கூடிய எலுமிச்சை பழ தோலை தான் சிங்கை கழுவுவதற்காக பயன்படுத்த வேண்டும். எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சாரை பிழிந்து விட்டு, அந்தத் தோலை ஒரு கவரில் அல்லது டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் சேகரித்து வாருங்கள். தினம்தோறும் அதிலிருந்து ஒரு தோலை எடுத்து இரவு உங்களது சிங்கை தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, பாத்திரங்களை கழுவி சிங்கை சாதாரண தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு விடுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீர் நன்றாக உலர்ந்து விடவேண்டும்.

lemon

தண்ணீர் உலற வில்லை என்றால் ஒரு காட்டன் துணி கொண்டு சிங்கையும், சிங்க் சுற்றி உள்ள இடத்தையும் முதலில் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். ஒரு துளி தண்ணீர் கூட இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் சமையல் மேடைக்கும் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அதன் பின்பு இந்த எலுமிச்சம் பழத்தோலை எடுத்து சிங்க் முழுவதும் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரை ஊற்றி சிங்கை கழுவி விடுங்கள். இரவு நேரத்தில் இப்படி செய்து விட்டு சிங்கை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட வேண்டும். இரவு நேரத்தில் சிங்கிள் தண்ணீர் இருப்பதால்தான் வெள்ளைத் திட்டுக்கள் படுகின்றது. மறுநாள் காலை சிங்க்கை எப்போதும் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

shik-cleaning1

தினமும் இப்படி செய்ய சிரமப்படக் கூடாது. சிங்கை துடைப்பதற்கு ஒரு ஸ்பாஞ்ச் வாங்கி வைத்துக் கொண்டால், சுலபமாக இருக்கும். அந்த ஸ்பான்ஜில் சிங்கை துடைக்கும் போது தண்ணீர் முழுவதையும் ஸ்பாஞ்ச் உறிஞ்சிக் கொள்ளும். தினமும் இதைச் செய்து வந்தாலே உங்கள் வீட்டு சிங்க் உப்புத்தண்ணீர் கரை படியாமல் வெள்ளைத் திட்டுக்கள் படியாமல் எப்போதும் போல, புதுசு புதுசாக பளபளப்பாக இருக்கும்.

- Advertisement -

சரி இப்போது சிங்கை சுற்றி வெள்ளை நிறத்தில் திட்டுக்கள் படிந்து விட்டது. என்ன செய்வது. மேல் சொன்ன படி முதலில் சிங்கை நன்றாக காய வைத்துவிட்டு, எலுமிச்சை தோலை வைத்து உப்பு கரை படிந்த இடத்தில் தேய்க்க வேண்டும். அடுத்தபடியாக பல் தேய்க்கும் பேஸ்டை உப்பு தண்ணீர் படிந்த கரையின் மேலே நன்றாக தடவி, 20 லிருந்து 30 நிமிடங்கள் உலர வைத்து விடுங்கள்.

paste

அதன்பின்பு ஒரு ஸ்டீல் நாரைக் கொண்டு தேய்த்தால் உப்பு தண்ணீர் கரை நீங்க ஆரம்பிக்கும். ஸ்டீல் நாரைக் கொண்டு தேய்த்துவிட்டு, அப்படியே உப்பு தண்ணீர் கரை நீங்கியவுடன், சிங்க்கை தண்ணீர் ஊற்றி கழுவி விடக்கூடாது. பேஸ்டை ஒரு துண்டு கொண்டு துடைத்து எடுத்து விட வேண்டும். அந்தப் பேஸ்டுடன், வெள்ளை நிற உப்பு படிந்த கரைகளும் சுத்தமாக துண்டோடு வந்துவிடும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வீட்டு சிங்கிள் இருக்கக்கூடிய உப்பு தண்ணீர் கரை படிப்படியாக குறையத் தொடங்குமே தவிர, உப்புத்தண்ணீர் கரையை ஒரே நாளில் நம்மால் நிச்சயமாக நீக்க முடியாது.

shik-cleaning2

தேவைப்பட்டால், எலுமிச்சை பழச்சாறை கொண்டு சிங்கை சுத்தம் செய்து விட்டு, பேஸ்ட் போட்டு சிங்கை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு உப்பு தண்ணீர் படிந்த கரைகளை, உப்புக் காகிதம் போட்டு நறநறவென தேய்த்து எடுத்தால் அந்த இடத்தில் இருக்கும் உப்புக் கரை நீங்கி விடும். ஆனால் லேசாக மேடை பகுதிகளில் கீறல் விழ வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால், கீறல் விழாமல் பக்குவமாக இந்த உப்பு காகிதத்தை, இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். மேலே சொல்லியிருக்கும் விஷயங்களில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றி பயன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -