பல் தேய்க்கிற மாதிரி ரொம்ப ரொம்ப ஈசியா 10 நிமிடத்தில் உங்கள் வீட்டு உப்பு கரை படிந்த சிங்கை சுத்தம் செய்வது எப்படி?

shink
- Advertisement -

பல் துலக்குவது போல நம்ம வீட்டு சிங்கை சுத்தம் செய்ய போகிறோம் என்றால் அதற்கு நிச்சயமாக பல் தேய்க்கக்கூடிய ஒரு பொருளை பயன்படுத்தி தான் இந்த குறிப்பை பார்க்கப் போகின்றோம். நிறைய பேர் வீடுகளில் தண்ணீர் வரக்கூடிய குழாய், சிங்க், வாஸ் பேஷன், இவை அனைத்துமே சீக்கிரம் உப்பு கரை படிந்து வெள்ளைத் திட்டுக்கள் படிந்து பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கும். இந்த உப்பு கரைகளை நீக்கி எடுக்க கெமிக்கல் கலந்த நிறைய பொருட்கள் கடைகளில் விற்கிறது. இருந்தாலும் நம்முடைய டைல்ஸ், கடப்பா கல், மார்பில் இவைகளுக்கு எந்த ஒரு சேதாரமும் வராமல் இருக்க வேண்டுமென்றால் கெமிக்கல் கலந்த ஆசிடை பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது. கூடவே நம்முடைய ஆரோக்கியத்திற்கு அதில் இருந்து வரும் புகை மிக மிக ஆபத்து.

இந்த உப்பு கரை படிந்த வெள்ளை திட்டுகளை சுலபமாக நீக்க ஒரு சுலபமான வழியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பல் துலக்கும் பேஸ்ட் 2 ஸ்பூன், 2 எலுமிச்சம் பழத்தின் சாறு, தூள் உப்பு 2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலக்கவேண்டும். நுரை பொங்க பொங்க இதுவும் ஒரு ஆசிட் போல தான் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த கலவையை பயன்படுத்தி தான் சிங்கை சுத்தம் செய்யப் போகின்றோம். கல்லில் சிங்க் இருந்தாலும் சரி, எவர்சில்வர் இருந்தாலும் சரி, இந்த கலவையை தாராளமாக பயன்படுத்தலாம். கலந்து வைத்திருக்கும் இந்த கலவையை ஒரு ஸ்பாஞ்ச் நாரிலோ அல்லது பழைய தூசு தட்டும் பிரஷ்ஷிலோ தொட்டு கரைபடிந்த  எல்லா இடங்களிலும் நன்றாகப் படும்படி தடவி விடுங்கள். இந்த கலவையை கொஞ்சம் திக்காக கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் கலவை நன்றாக அந்த சிங்கிள் ஒட்டி பிடிக்கும்.

20 லிருந்து 25 நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற வைத்துவிடுங்கள். அதன் பின்பு சாதாரண நாரை வைத்து தேய்த்தாலே கொஞ்சமாக இருக்கக்கூடிய உப்பு கரை நீங்கி விடும். ஆனால் பல வருடங்களாக உப்பு கரை படிந்திருந்தால், சாதாரண நாரில் தேய்த்தால் நிச்சயம் போகாது. உப்புக் காகிதம் என்று கடையில் விற்கும் அல்லவா. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கி லேசாக தேய்த்து கொடுக்கும் போது உங்களுடைய சிங்கிள் இருக்கும் உப்புகரை சுத்தமாக நீங்கி விடும்.

- Advertisement -

முடிந்த வரை சுத்தமாக தேய்த்து முடித்து விட்டு தண்ணீரை போட்டு நன்றாக கழுவி விட்டு, உடனடியாக ஒரு துண்டை வைத்து ஒருமுறை சிங்கை சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். நீங்கள் தேய்க்கும்போது நீங்க கூடிய உப்பு கரையை விட, இப்படி துணியை வைத்து துடைக்கும் போது நீங்கக்கூடிய கரை அதிகமாக இருக்கும். வேண்டும் என்றால் ஒரு கருப்பு நிற துணியை வைத்து தேய்த்து துடைத்து பாருங்கள். வெள்ளையாக உப்பு எல்லாம் அந்த துணியில் வருவது நன்றாக தெரியும்.

இந்த பேஸ்டை நாம் சிங்கிள் தடவும்போது சிங்கிள் ஒரு துளி கூட ஈரம் இருக்காது. சிங்க் காய்ந்து இருக்கும் போதுதான் இந்த குறிப்பை டிரை பண்ணி பார்க்க வேண்டும். அதே சமயம் இந்த பேஸ்டை அப்ளை செய்துவிட்டு, பேச்சு நன்றாக காய்ந்தவுடன், உப்புக் காகிதம் போட்டு தேய்க்கும் போதும் சிங்கை ஈரம் செய்யக் கூடாது. உப்புக் காகிதம் தண்ணீரில் ஊறி கிழிந்து போய்விடும். மேலே சொன்ன குறிப்பில் இன்ட்ரஸ்ட் இருந்தால் மட்டும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -