இந்த தேவியை மனதார வேண்டிக்கொண்டு, தூங்கச் செல்லுங்கள்! நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்.

nithra-devi1
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை தூக்கமின்மை. குறிப்பாக, இந்த பிரச்சனையானது குறிப்பிட்டுச் சொல்லப் போனால் பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஆண்களும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் நம் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் தான். அதற்காக, கஷ்டங்கள் எல்லாம் முழுமையாக தீர்ந்த பின்பு தான், நிம்மதியான தூக்கத்தை தூங்க முடியும் என்றால், இரவு நேரத்தில் யாராலும், இந்த ஜென்மத்தில் நல்ல தூக்கம் தூங்க முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.

sleepless

அவரவர் வாழ்க்கையில், அவரவருக்கு தகுந்தபடி கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். என்ன செய்வது? இதில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் யார் என்றால், குழந்தைகள் தான். அவர்கள் மெய்மறந்து தூங்குவதை பார்க்கும்போது, நாமும் குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கக் கூடாதா! எவ்வளவு நிம்மதியான வாழ்க்கை! என்று நம்மில் பலபேர் சிந்திப்போம். பல பேர் என்ன? எல்லோருமே கட்டாயமாக சிந்தித்து இருப்பார்கள். பொதுவாகவே, குழந்தைப் பருவத்தில் தூங்கும் நேரம் அதிகமாக இருக்கும். பச்சிளம் குழந்தைகள் எல்லாம் பகல் நேரம், இரவு நேரம் பாராமல் தூங்கிக் கொண்டே இருக்கும். இதற்கு என்ன காரணம்? அந்த பிஞ்சு மனதில் எந்த குழப்பமும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை.

- Advertisement -

பெரியவர்களுக்கும் இதே விதியை கடைப்பிடித்தால் போதும். தூங்கும் போது நம்முடைய மனதை குழந்தை மனது போல் மாற்றிக் கொண்டு எந்த பிரச்சனையையும் பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தூங்கினால் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும் என்பது உண்மையான ஒன்று. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் ஒரு மனிதனால் தூங்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அது கொஞ்சம் கடினமான விஷயம்தான். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. இருந்தாலும் தூக்கம் ஒருவருக்கு சரியாக வரவில்லை என்றால், அடுத்த நாள் காலையில் அவரால் தன்னுடைய வேலையை முழு ஈடுபாட்டோடு செய்ய முடியாது. வாழ்க்கையில் தொடர் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் ஒருவருக்கு இரவு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது.

sleep1

நீங்கள் தினந்தோறும் இரவு தூக்கத்தை தூங்காமல் விட்டுவிட்டால், அதுவே உங்களுக்கு ஒரு பெரிய வியாதியாக மாறிவிடும். தூக்கமின்மை ஒருவருக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்தி விடும். தேவையில்லாத வியாதிகளை நாமே வரவைத்துக் கொள்வதற்கு, நாமே வழி காட்டியதாக மாறிவிடும்.

- Advertisement -

உங்களுக்கு இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் மனதிற்கு பிடித்த விஷயத்தை, உங்கள் வாழ்க்கையில் குறிக்கோளாக வைத்திருக்கும் ஒரு விஷயத்தை, அடைய வேண்டிய லட்சியத்தை, அடையப் போவதாக, அடைந்ததாக, அதற்கான முழு ஈடுபாட்டில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக மனதிற்குள்ளேயே பாவனை செய்து கொள்ளுங்கள். ஒரு படி மேலே போய் உங்களுடைய லட்சியத்தை நீங்கள் அடைந்து விட்டதற்காக, உங்களுக்கு எல்லோரிடமும் பாராட்டு கிடைப்பதாக கூட மனதில் நினைத்துக் கொள்ளலாம். தவறே இல்லை.

sleep1

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம். நாம் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ, அதை இந்த பிரபஞ்சம் நமக்குத் தரும். இரண்டாவதாக நம்முடைய மனம் நம்மை அறியாமலேயே சந்தோஷப்பட்டு விடும். தூக்கமும் உங்களது கண்களை தழுவும். இது சுலபமான முறைதான். எல்லோராலும் முயற்சிக்க பட்டு வெற்றியடைந்த ஒரு விஷயம். நீங்களும் முயற்சி செய்து தான் பாருங்களேன்! நல்ல தூக்கம் வந்தால் அது வெற்றி தானே!

- Advertisement -

இதேபோல் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உங்களிடம் திருப்புகழ் புத்தகம் இருந்தால் அதில் இருந்து ஏதாவது ஒரு பாடலை வாசித்து விட்டு தூங்க வேண்டும். எமபயம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உறங்கச் செல்வதற்கு முன்பு நித்ரா தேவியை மனதார நினைத்து கொண்டு உறங்கச் செல்ல வேண்டும் யார் இந்த நித்ரா தேவி? என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

nithra-devi

ஸ்ரீதேவியின் தமக்கையான மூதேவி தான் இந்த நித்ரா தேவி. நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த நித்ரா தேவியின் துணை நமக்கு அவசியம் தேவை. நித்திரை என்றால் தூக்கம். தூக்கத்திற்கு அதிபதி தான் இந்த நித்ரா தேவி. நித்திரா தேவி மட்டும் இல்லை என்றால், அதாவது தூக்கம் மட்டும் இல்லை என்றால், நம்மால் வாழவே முடியாது என்பதுதான் உண்மையான ஒன்று. ஒருவர் வாழ்க்கையில் மகாலட்சுமியின் அம்சத்தை பெற்று இருக்கிறாரா, இல்லையோ? இரவு நேரத்தில் நித்ரா தேவியின் ஆசீர்வாதத்தை பெற்றால்தான், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில் வெற்றி அடையும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thookkam vara enna seiya vendum. Nidra devi. Goddess nidra devi. Sleeping tips in Tamil. Thookam vara tips.

- Advertisement -