சிவனும் சக்தியும் சேர்ந்து, உங்கள் வீட்டிற்கு குடி வந்து, உங்கள் குடும்பத்தை வழி நடத்துவார்கள். இந்த ஒரு தீபத்திற்கு அப்படி ஒரு மகிமை!

arthareshwarar

நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ, கணவன் மனைவிக்கிடையே அன்யோன்னியம் அதிகரிக்க, நம்முடைய குழந்தைகள் அறிவாற்றல் நிறைந்த குழந்தைகளாக வளர, வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற, ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், உங்களுடைய வீடு கோவில் ஆக மாற, சிவனையும் சக்தியையும் நினைத்து இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. அது என்ன தீபம்? அதை எப்படி நம் வீட்டில் ஏற்ற வேண்டும்? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sivan-parvathi

ஒரு வீட்டில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும், சிவனும் சக்தியும் போல இருந்தாலே போதும். அந்த வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. அதாவது சக்திக்குள் சிவன் இருக்கின்றார். சிவனுக்குள் சக்தி இருக்கின்றார்கள். ஒவ்வொரு கணவன் மனைவியுமே, இவர்களை போல் வாழ வேண்டும் என்று நினைத்து, தங்களுடைய வாழ்க்கையை வாழத் தொடங்கினால், அந்த வீடு நிச்சயம் கோவிலாகும்.

சரி, வழிபாட்டை பார்த்துவிடுவோம். முதலில் வெள்ளைநிற விளக்கு திரிகளை எடுத்து பன்னீரில் நனைத்து ஊற வைத்து நிழலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வெள்ளை நிற விளக்கு திரியை மஞ்சளில் நனைத்து, ஊற வைத்து நிழலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இப்போது இருக்கக்கூடிய வெள்ளை, மஞ்சள் திரியிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து, இரண்டையும் ஒன்றாகக் திரிக்க வேண்டும். ஒரு திரி சிவனின் அம்சம். மரு திரி சக்தியினுடைய அம்சம்.

sivan

கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் தாம்பூலத் தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை அந்த தாம்பூலத் தட்டு, பித்தளை அல்லது மற்ற உலோகங்களில் வைத்துக்கொள்வது நல்லது. உங்களுடைய வீட்டில் சில்வர் தான் உள்ளது என்றால் வேறு வழி இல்லை. அந்தத் தட்டை சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் பச்சரிசி மாவால் சூலம் வரைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு சூலம் வரையத் தெரியவில்லை என்றால், அழகான மாக்கோலம் ஒன்றே அந்த தாம்புல தட்டில் மேல், போட்டுக் கொள்ளுங்கள். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, இரண்டாக திரித்து வைத்திருக்கும் மஞ்சள் திரையையும் வெள்ளை திரியையும் ஒன்றாக போட்டு, முடிந்தால் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.

Arthanareswarar

அகல் தீபத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். இந்த பூஜையை செய்யும் போது உங்களுடைய குடும்ப நலனை மனதில் நினைத்துக்கொண்டு, செய்ய வேண்டும். ஓம் சிவசக்தியே போற்றி! ஓம் சிவசக்தியே போற்றி! என்ற மந்திரத்தை மனதார உச்சரித்துக்கொண்டே தீப தூப ஆராதனை காட்டி, இந்த பூஜையை செய்ய வேண்டும்.

sulam

இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, தீபச் சுடரின் ஒளியில் சிவனையும் பார்வதியையும் நினைத்து, அந்த சுடரை உற்று நோக்கி, உங்களுடைய இல்லற வாழ்க்கை சுபிட்சமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அதை அனுசரித்து செல்ல வேண்டிய மனப்பக்குவம் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு வர வேண்டும்’. என்ற வேண்டுதலை வைத்து மனதார சிவ சக்தி வழிபாட்டை செய்தாலே போதும்.

deepam

வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடும். இந்த தீபத்தை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை ஏற்றினாலும் சரி, அல்லது தினம்தோறும் ஏற்றி சிவன்-பார்வதி வழிபாடு செய்தாலும் சரி. அது உங்களுடைய நேரத்தை பொருத்தது. ஆகமொத்தத்தில் மனதார ஒருநாள் இந்த வழிபாட்டை செய்தாலும் சிவனும் சக்தியும் உங்கள் மனதிலும், உங்கள் வீட்டிலும் குடியேறி உங்கள் குடும்பத்தை வழிநடத்திச் செல்வார்கள் என்ற நம்பிக்கை கொண்டு, உறுதி தந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மனசுக்கு புடிச்சவங்களா திருமணம் செய்ய நாள் குறிக்கனுமா? அதுக்கு முன்னாடி இதையெல்லாம் முதல்ல தெரிஞ்சுக்கோங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.