வெள்ளை ஷுவை பளிச்சுன்னு மாத்த இந்தப் பொருள் போதுன்னு இது நாள் வரை தெரியாம போச்சே. இனி கறை படிந்த ஷூ வை கூட ஒரு நிமிஷத்துல வெள்ளையா மாத்திடலாம்.

- Advertisement -

பெண்களைப் பொறுத்த வரையில் துணி துவைப்பது பெரிய வேலை தான். வாஷிங் மெஷினில் தானே துவைக்கிறோம் என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதிலும் கூட எல்லா துணிகளையும் போட்டு துவைக்க முடியாது. இந்த வெள்ளை சட்டை,ஷூ, போன்றவற்றை நாம் எப்போதும் ஊற வைத்து தான் துவைக்க வேண்டியதிருக்கும். இதையெல்லாம் துவைப்பது எவ்வளவு பெரிய வேலை என்பது பெண்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் ஷீவை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இப்போது அனைவருமே ஷூக்களை தான் பயன்படுத்துகிறார்கள். இதை நாம் தினமுமே துவைத்து கொண்டிருந்தால் சீக்கிரம் ஷூ வீணாகி விடும். அப்படி ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் அதை அடிக்கடி துவைக்க கூடாது. அப்படியானால் துவைக்காமல் எப்படி சுத்தம் செய்வது. வாங்க அதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

முதல் ஒரு சின்ன பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் இதற்கு வெள்ளை நிற பேஸ்ட்டை தான் பயன்படுத்த வேண்டும். இத்துடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கலந்து அதன் சாறை இதில் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கலக்க தண்ணீர் ஊற்றக் கூடாது. எலுமிச்சை சாறு மட்டும் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் பயன்படுத்தாத டூத் பிரஷ் இருந்தால் அதில் இந்த பேஸ்ட்டை தொட்டு ஷூ முழுவதும் தேய்த்து விடுங்கள். இந்த பேஸ்ட்டை நார்மல் ஷூ, கேன்வாஸ் ஷூ எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். அதன் பிறகு முதலில் ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து மேலே இருக்கும் பேஸ்ட் எல்லாம் நன்றாக துடைத்து எடுத்து விடுங்கள்.

பிறகு ஈரமில்லாத ஒரு டூத் பிரஷ் வைத்து மறுபடியும் ஒரு முறை துடைத்து விடுங்கள். இந்த முறையில் எவ்வளவு அழகான ஷூவையும் நிமிடத்தில் துவைக்காமல் சுத்தம் செய்து விடலாம். அவசர நேரத்தில் சுத்தம் செய்து காய வைக்க நேரமில்லாத சமயத்தில் இந்த பேக்கிங் சோடாவுடன் இரண்டு ஸ்பூன் லிக்விடை சேர்த்துக் கொள்ளுங்கள். லிக்குவீட் சேர்க்கும் போது நுரைத்துக் கொண்டு வரும் அதை அப்படியே துணி வைத்து மட்டும் துடைத்து விடுங்கள். இது சட்டென்று கறையை நீக்குவதுடன், லிக்விட் சேர்த்து இருப்பதால் ஷுவும் நல்ல மணமுடன் இருக்கும்.

- Advertisement -

அதே போல் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் ஷூ சாக்ஸ் போன்றவற்றை கழற்றி வைக்கும் பொழுது அதில் இரண்டு துண்டு பூண்டை நசுக்கி போட்டு விட்டால் போதும் பூச்சி எதுவும் அண்டாது. அதே போல் ஷூ வில் இரண்டு கிராம்புகளை போட்டு வைத்து விட்டாலும் இந்த வாடைக்கும் பூச்சிகள் வராது. அது மட்டுமின்றி கிராம்பு வாடை ஷூவில் இருக்கும் வியர்வை வாடையை கூட நீக்கி விடும்.

இதையும் படிக்கலாமே: கறிக்குழம்பை கொண்டும் செல்லும்போது கூடையில் அடுப்பு கரித்துண்டை வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற காரணம் என்ன தெரியுமா?

இந்த பதிவில் உள்ள தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். நீங்களும் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -