எதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க வேண்டுமா? இதை செஞ்சுதான் பாருங்களேன்!

pursewithcash

பணம் என்ற வார்த்தையை சொன்னால் தான் பல பேரும் பார்க்கிறார்கள். ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற பழமொழி மாறி ‘எதை செய்தால் பணம் வரும்’ என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதில் யாரையும் குறை கூறவில்லை. காலத்தின் சூழ்நிலை அப்படி மாறிக் கொண்டு வருகிறது. நம்முடைய வீட்டில் இருக்கும் பெண்களது கையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணமானது வெளியில் வரவேண்டும் என்றால், அரசாங்கம் யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். உதாரணத்திற்கு பழைய நோட்டுகள் செல்லாது. புதிய 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றால், பதுக்கி வைத்திருக்கும் பல நோட்டுக்கள் எதிர்பாராமல் வெளியில் வந்து தான் தீரும். பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வெளியே கொண்டு வர இதுவும் ஒரு சூட்சமம் தானே! வீட்டில் பணத்தை சேர்த்து வைக்கும் பெண்களை குறை சொல்லவில்லை. பொதுவான கருத்து இது. இன்றைய காலகட்டத்தின் சூழ்நிலை ‘பணத்தை எப்படி பதுக்கி வைத்துக் கொள்ளலாம்’ ‘என்ன பரிகாரம் செய்தால் எந்த வழியில் எல்லாம் பணம் வரும்’ பணம் பணம் பணம் என்ற தேடல் நம்மிடம் இருக்க, பணம் நம்மை ஆட்டி வைக்கத்தான் செய்யும்.

money

வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவிற்கு பணம், அதோடு சேர்த்து நிம்மதி, ஆரோக்கியம், சொந்தம் பந்தம், மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, இறைவழிபாடு, இயலாதவர்களுக்கு உதவி செய்வது, பிடித்த உணவை சாப்பிடுவது, பிடித்த உடையை வாங்கி அணிவது, இப்படி மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமென்றால், கடைசியில் என்ன தேவைப்படும்? அத்தியாவசியமான தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றாலும் பணம் தான் தேவைப்படுகிறது அல்லவா? இப்படி இருக்க பணத்தை நோக்கி செல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று சிந்திக்க வைத்துவிடுகிறது! சரிதான். பணத்தை நோக்கி செல்வதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவிற்கே வந்து விடுவோம். இந்த பணத்தை மேலும் மேலும் சேர்க்க என்ன தான் செய்வது என்ற ஒரு சின்ன பரிகாரத்தை பற்றி பார்த்துவிடுவோம்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணி அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி அல்லது 8 மணியிலிருந்து 9 மணி. இந்த நேரத்தில் உங்களுக்கு உகந்த நேரம் எதுவோ அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் முதல் வாரம் எந்த நேரத்தில் செய்கிறீர்களோ தொடர்ந்து 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதன் பின்பு உங்களது தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

vilvam tree

ஒரு சதுர வடிவில் இருக்கும் வெள்ளைத் துணியை எடுத்து பன்னீரில் நனைத்து காய வைத்துக் கொள்ள வேண்டும். புதியதாக வாங்கிய (கடல் உப்பு) கல்உப்பு ஒரு கைப்பிடி அளவு, 6 மொச்சை, 6 டைமண்ட் கற்கண்டு இவைகளை  வெள்ளைத் துணியில் வைத்து, அந்தத் துணியின் நான்கு மூலைகளிலும் சிறிது குங்குமம் வைத்து, ஒரு நூலைக் கொண்டு ஒரு சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். இதை உங்களது வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வடகிழக்கு மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாத படி வைத்துவிடவேண்டும். மறுவாரம் அந்த முடிச்சை அவிழ்த்து அதனுள் இருக்கும் பொருட்களை எல்லாம் வில்வ மரம் அடியில் போட்டு விட்டு, அந்த துணியை மட்டும் அடுத்த வாரத்திற்கு மீண்டும் பன்னீரில் நனைத்து காய வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வில்வ மரத்தை தேடி செல்ல முடியாதவர்கள் வேப்பமரம், அரசமரம், இந்த மரங்களுக்கு அடியில் போட்டு விடலாம். மீண்டும் பரிகாரத்திற்கு உள்ளே வைக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதியதாக வைக்கப்பட வேண்டும். இந்தப் பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

money

எதிர்பாராத பணம் என்றால் மாய மந்திர வித்தைகள் செய்து வானத்தில் இருந்து பணம் வருவது இல்லை. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து வைத்து இருந்திருக்கலாம். அந்த பணம் வரவே வராது என்று முடிவு செய்திருக்கலாம். அந்தப் பணம் நீங்கள் நேர்மையாக சம்பாதித்த பணமாக இருந்தால் நிச்சயம் உங்கள் கைகளில் வந்து விடும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் வராமல் இருந்தாலோ, சம்பளத் தொகை நிலுவையில் இருந்தாலோ, இப்படி நியாயமான முறையில் உங்களுக்கு வரவேண்டிய பணம் அடுத்தவரது கையில் போய் மாட்டிக் கொண்டிருக்கும். வெகுநாட்களாக சிக்கல் தீராமல் அந்த பணத்தை நம்மால் பெற முடியாத சூழ்நிலை இருந்திருக்கும். நியாயமான முறையில் உங்களுக்கு வரவேண்டிய எந்த ஒரு தொகையாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அந்தப் பணம் நிச்சயமாக உங்கள் கைகளுக்கு வந்து சேரும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vara vendiya panam vara. Kodutha panam thirumba kidaika. Kodutha panam thirumba vara Tamil. Panam vara pariharam Tamil. Pana varavu pariharam.