போர்க்களமாக இருக்கக்கூடிய நம்முடைய வாழ்க்கையில், தீராத கஷ்டங்கள், தீராத துன்பங்கள் வரும்போது, அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், நிச்சயம் அந்த இறைவனின் அருளாசி நமக்கு கிடைக்க வேண்டும். மன குழப்பமான சமயத்தில் மனதை தெளிவுபடுத்த இந்த சியாமளா நவராத்திரியில் மாதங்கிதேவியை வழிபாடு செய்யலாம். மாணவர்கள் நன்றாக படிக்க, இந்த நவராத்திரியில் அம்பாளை வழிபாடு செய்யலாம்.
கலைத்துறையில் இருப்பவர்களும் இந்த நவராத்திரியில் அம்பாள் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். எல்லா நலனையும் வேண்டி இன்று மாலை பூஜையாறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்பாளின் இந்த நாமங்களை ஒரு முறை உச்சரித்து, வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்து பாருங்கள். சியாமளா நவராத்திரியின் நிறைவு நாளில் மாதங்கி தேவியின் அருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்து எல்லா செல்வ வளங்களும் உங்களை வந்து சேரும்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் உங்களுடைய வீடு சுத்தபத்தமாக தான் இருக்கும். மாலை கட்டாயம் எல்லோர் வீட்டிலும் தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடுநடைபெறும். அந்த வழிபாட்டோடு சேர்த்து இந்த மந்திரத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் புகைப்படத்திற்கு முன்பு பூக்களைப் போட்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம். மீனாட்சியம்மன் திருவுருவப்படம் இருந்தால் மிகவும் சிறப்பு. எந்த அம்மனின் திருவுருவப்படம் இல்லை என்றாலும், காமாட்சி அம்மன் விளக்கத்திற்கு இந்த பூக்களை அர்ச்சனை செய்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லுங்கள்.
சியாமளா நவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ஐம் க்லீம் ஸௌம் : சங்கீத யோகினியை நமஹ
சியாமாயை நமஹ
சியாமளாயை நமஹ
மந்திர நாயகிகையை நமஹ
மந்த்திரண்யை நமஹ
சசிவேசான்யை நமஹ
பிரதாநேஸ்யை நமஹ
சுகப்பிரியாயை நமஹ
வினாவத்யை நமஹ
வைணிக்யை நமஹ
முத்ரிண்யை நமஹ
ப்ரியகப்ரியாயை நமஹ
நிப ப்ரியாவை நமஹ
கடம்பேஸ்யை நமஹ
கடம்பவன் வாசின்யை நமஹ
சடாமடாயை நமஹ
இதையும் படிக்கலாமே: சகல நன்மைகளைத் தரும் தை வெள்ளி வழிபாடு
சியாமளா நவராத்திரி வழிபாடு என்பது ஒன்பது நாள் நடக்கக்கூடிய வழிபாடு. அந்த வழிபாட்டின் இறுதி நாள் தான் இன்று 7 -2-2025 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் இந்த மங்களகரமான ஆன்மீகம் சார்ந்த வழிபாடு பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.