- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல நன்மைகளைத் தரும் தை வெள்ளி வழிபாடு

சகல நன்மைகளைத் தரும் தை வெள்ளி வழிபாடு

- Advertisement -

பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தை மாதத்தின் 25ஆம் நாள் தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிறது, வெள்ளிக்கிழமையே சிறப்பு மிகுந்ததுதான். அதிலும் தை மாத வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் சியாமளா நவராத்திரியின் கடைசி நாள் என்பதால் அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக திகழ்கிறது. அந்த நாளில் பராசக்தியை நாம் எந்த முறையில் வழிபாடு செய்தால் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தை வெள்ளி வழிபாடு

வருடத்திற்கு ஒருமுறை தை மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி சியாமளா நவராத்திரியாக திகழ்கிறது. இது சியாமளா தேவியை வழிபாடு செய்வதற்குரிய நவராத்திரியாக கருதப்படுகிறது. சியாமளாவை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். இதோடு படிக்கின்ற பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் உண்டாகும். கல்வி அறிவில் மேலோங்கி இருப்பார்கள் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட சியாமளா நவராத்திரியின் கடைசி நாளான தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் இன்றைய தினத்தில் மூன்று திதிகள் சேர்ந்து வருகிறது. அதிகாலை 1:17 வரை நவமி திதி இருக்கிறது. அதற்கு பிறகு இரவு 11:26 வரை தசமி திதி இருக்கிறது. அதற்குப் பிறகு ஏகாதசி திதி தொடங்குகிறது. முத்திரிகள் சேர்ந்து வரக்கூடிய நாளாகவும், சியாமளா நவராத்திரியின் கடைசி நாளாகவும், தை மாதத்தின் கடைசி வெள்ளியாகவும் திகழக்கூடிய இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது.

இன்றைய தினத்தில் நாம் சியாமளாதேவியை வழிபாடு செய்தாலும் சரி அல்லது மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தாலும் சரி அல்லது பெண் தெய்வமாக எந்த தெய்வம் உங்களுக்கு பிடிக்குமோ அந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் சியாமளா நவராத்திரி வழிபாட்டிற்குரிய பலனை பெற முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் தீபம் ஏற்றுவது மட்டும்தான். மாலை ஆறு மணிக்கு வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூளை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை சத்தமாக வாய்விட்டு 108 முறை கூற வேண்டும். நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து வைத்துக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். கண்டிப்பான முறையில் வீட்டு நிலை வாசலுக்கு சாம்பிராணி தூபம் காட்டி வீடு முழுவதும் சாம்பிராணி தூபத்தை காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பராசக்தியின் அருளால் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகி சகல நன்மைகளும் நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: தை கடைசி வெள்ளி தனலட்சுமி பூஜை செய்யும் முறை

முழு மனதோடு அம்பிகைக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த முறையில் வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொரு வீட்டிலும் அம்பிகையின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்