மன பயத்தை ஒரு நொடிப்பொழுதில் நீக்க, சித்தர்கள் வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். தேவையற்ற மனக் குழப்பத்திற்கு, உடனே ஒரு தீர்வு கிடைக்கும்.

sidder

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு, வரப்போகும் நல்லது கெட்டது முன்கூட்டியே தெரியவரும் என்று சொல்வார்கள். அதாவது தன்னையும் மறந்து இறைவழிபாட்டில் தங்களுடைய மனதை, தங்களுடைய ஆன்மாவை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, இயல்பாகவே தோன்றும் ஒரு விஷயம் உண்டு. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நல்லது கூடிய விரைவில் நடந்துவிடும். நல்லதை நினைத்து நல்லதை நடக்கும் பட்சத்தில் அதன் மூலம் எந்த பிரச்சனையும் கிடையாது.

sad

ஆனால், சில சமயங்களில் சிலருக்கு மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி கெடுதல் நடக்கப் போவது போல அறிகுறிகள் நமக்கு தோன்றினால், தேவையற்ற மன பயமும் தேவையற்ற சஞ்சலங்கள் நமக்குள் தோன்றுவது இயல்புதான். மன பயத்தின் மூலம் மனக் குழப்பத்தின் மூலம், நான் தூங்கும் பொழுது கூட கெட்ட கனவுகள் வந்து நம்மை அச்சுறுத்தும். இப்படிப்பட்ட மன பயத்தை நீக்க, ஆன்மீக ரீதியாக சித்தர்களை வழிபடுவதன் மூலம், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை தடுக்க முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

மனிதராக இந்த உலகத்தில் பிறந்து, சித்தர்களாக மாறியவர்களுக்கு சக்தி அதிகம் உண்டு. அதாவது நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நம்மை காக்க கூடிய சக்தியும் சித்தர் வழிபாட்டிற்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சித்தர்களை மனமுருகி வேண்டி, நம்முடைய மன குழப்பத்தை நீக்க வேண்டும் என்று அழைத்தால், கண்ணுக்கு தெரியாத ரூபத்தில் அவர்கள் வந்து, நமக்கு ஒரு தீர்வை கொடுப்பார்கள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

birthstar-siddhar

உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு சித்தரை நினைத்தும் இந்த வழிபாட்டினை செய்யலாம். இல்லை, சித்தர்களைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாத பட்சத்திலும், உங்களுடைய வீட்டில் சித்தர்களின் திருவுருவப்படம் எதுவும் இல்லாதபட்சத்திலும் உங்களால் இந்த வழிபாட்டைச் செய்ய முடியும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு 18 சித்தர்களையும் மனதார நினைத்து, தீபத்தை ஒளிர விட வேண்டும். தீபச் சுடரை உற்றுநோக்கி, மனதில் இருக்கும் குழப்பம் நீங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வையுங்கள். அந்த தீப ஒளியில், உங்கள் மனதில் இருக்கும் இருள் நீங்குவதை நிச்சயம் உணர முடியும்.

எதிர்மறை சிந்தனையால் எதிர்மறை எண்ணத்தால் எதிர்பாராத ஆபத்து எதுவும் நமக்கும், நம் குடும்பத்திற்கும் வந்துவிடக்கூடாது என்று தீபச்சுடரிடம் மனமுருகி வேண்டிக் கொண்டாலே போதும். உங்களுடைய மனபயம் நீங்கும். மனசஞ்சலம் நீங்கும். குழப்பத்திலிருந்து விரைவாக நீங்கள் வெளி வந்துவிடுவீர்கள். ஆத்மார்த்தமாக சித்தர்களை அழைத்து, தீபச்சுடரில் ஆவாகனம் செய்து வழிபடுபவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு.

deepam

அந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு 18 சித்தர்களின் பெயரைச் சொல்லி மனதார உச்சரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு சித்தர்களின் பெயரையும் தாராளமாக உச்சரிக்கலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சித்தர்கள் சமாதி இருக்கும் இடத்திற்குச் சென்றால், அந்த சமாதி இருக்கும் இடத்தில் பத்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்வது நம்முடைய வாழ்க்கைக்கு மேலும் பல நன்மையை கொடுக்கும். உங்களுக்காக 18 சித்தர்களின் பெயர்களும், அவர்கள் சமாதி இருக்கும் இடங்களும் இதோ!

dhanvantari-siddhar1

அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
சுந்தரனார் – மதுரை
கரூவூரார் – கரூர்

theraiyar-siddhar

திருமூலர் – சிதம்பரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மாயவரம்

இடைக்காடர் – திருவண்ணாமலை
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்

bogar

வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி

மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில் மருதாணிச் செடி இப்படி இருந்தால், மூதேவி அடையும். கஷ்டம் வரத்தான் செய்யும். மருதாணி செடியில் இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.