உங்களுடைய வீட்டில் மருதாணிச் செடி இப்படி இருந்தால், மூதேவி அடையும். கஷ்டம் வரத்தான் செய்யும். மருதாணி செடியில் இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்.

marudhani1
- Advertisement -

வீட்டில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் கிடைக்கும் என்பது உண்மை. குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது. எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மருதாணி செடிக்கு உண்டு. இதே போல் இந்த மருதாணி இலைகளை அரைத்து கையில் இட்டுக் கொண்டால் பெண்களை எந்த ஒரு துஷ்ட சக்தியும் தாக்காது என்பதும் உண்மையான ஒரு விஷயம்தான். விசேஷ நாட்களில் பெண்களுக்கு மருதாணியை வைத்து விட, இதுவும் ஒரு காரணம்.

maruthani2

இந்த மகாலட்சுமி செடியானது சீதாதேவியின் ஸ்வரூபம் என்று சொல்லப்பட்டுள்ளது. சீதாதேவியின் விருப்பப்படி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் வரத்தைப் பெற்ற செடி என்ற பெருமையும் இந்த மருதாணி செடிக்கு உண்டு.

- Advertisement -

சீதாதேவி வனவாசம் இருந்த காலகட்டத்தில், தேவியின் கஷ்ட நஷ்டத்தை, அழுகையை பொறுமையாக கேட்டுக் கொண்ட செடி என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதன் மூலமாக, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மருதாணி செடிக்கு இப்படிப்பட்ட வரத்தை அளித்ததாக வரலாறு சொல்கிறது. அதாவது, ‘இந்த மருதாணி இலையை அரைத்து கையில் இட்டுக் கொள்ளும் பெண்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்காது. இந்த மருதாணி செடியில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள்’ என்றும் ஒரு வரம் இந்த மருதாணி செடிக்கு அளிக்கப்பட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

சரி, உங்களுடைய வீட்டில் இந்த மருதாணி செடியை வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதை எப்படி பராமரிப்பது என்று நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மருதாணி செடி உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் வைத்து இருந்தாலும் சரி, தொட்டியில் வைத்து பராமரித்து வந்தாலும் சரி, அல்லது வீட்டு வாசலின் முன்பு வைத்து வளர்த்து வந்தாலும் சரி, அந்த மருதாணி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் போது இரண்டு ஸ்பூன் அளவு பாலையும் சேர்த்து மருதாணி செடிக்கு ஊற்ற வேண்டும். காய்ச்சாத பாலை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

துளசிச் செடியை வீட்டில் வைத்து எப்படி வழிபாடு செய்கிறோமோ, அதேபோல இந்த மருதாணி செடிக்கும் சிறிய மண் அகல் விளக்கில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி, திரிபோட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய்க் கிழமை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது தீபமேற்றி வழிபட வேண்டும்.

milk

இப்படியாக மருதாணி செடியை ஒரு வீட்டில் வழிபாடு செய்து வந்தால், அந்த மகாலட்சுமியின் அருள் நமக்கு நிறைவாக கிடைக்கும். சில பேர் மருதாணி செடியை வைத்தது விட்டு அதற்கு தண்ணீர் கூட ஊற்றாமல் பராமரிக்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். உங்களுடைய வீட்டில் மருதாணி செடி வைக்க வில்லை என்றால் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், செடியை வைத்து அதை பராமரிக்காமல் அது வாடி போனால், நம் வீட்டிற்கு கஷ்டத்தை தரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

maruthani

ஆனால், செடியை வைத்து விட்டீர்கள். மருதாணி செடியை வைத்தும் உங்களுக்கு கஷ்டம் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றது என்றால், அதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள தவறுகளும் ஒரு காரணம் தான். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு வழிபாட்டு முறையையும், எந்த ஒரு பரிகாரத்தையும் அரைகுறையாக செய்யாமல், பாதியிலேயே விட்டு விட்டாலும் வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
10 துளசி இலைகள் இருந்தால் போதும் பத்தும் சாத்தியமாகும்! துளசி இலைகள் கொண்டு செய்யும் அற்புத பரிகாரங்கள் நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -