சித்தர்களை நேரில் காண இந்த மந்திரத்தை கூறினால் போதும்

siddhar

உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே மனம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த மனதின் ஒரு தன்மையான சித்தம் எனப்படுவதை வென்று, பல அற்புத ஆற்றல்களை கைவரப் பெற்றவர்கள் தான் சித்தர்கள். சித்தர்கள் என்றாலே பல விதமான மாய ஜாலங்கள், அஷ்டமா சித்திகள் செய்கிற சக்தி கொண்டவர்கள் என்று தான் நாம் அவர்களை உருவகப்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் சித்தர்கள் மனித குல நன்மைக்காகவே தாங்கள் பெற்ற சித்தாற்றல்களை பயன்படுத்தினர். இங்கு நாம் மனம் விரும்பும் சித்தர்களின் நேரடி தரிசனம் பெற உதவும் மந்திரம் மற்றும் அதை உச்சாடனம் செய்யும் முறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சித்தர்கள் பூமியான தமிழகத்தில் அக்காலம் தொட்டு, இக்காலம் வரை பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் உருவமாகவும், அருவ வடிவிலும் பல சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். சித்தர்கள் மீது பக்தியும், ஆர்வம் கொண்ட பலருக்கும் சித்தர் பெருமக்கள் மனித குல மேன்மைக்காக தந்த மந்திரங்கள், யோக தந்திரங்கள், வைத்திய குறிப்புகள் போன்றவற்றை நூல்களின் வாயிலாகவே படிக்கின்ற நிலை இருக்கின்றது என்கிற ஆதங்கமும், அதே நேரம் சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் ஆர்வமும் அதிகம் கொண்டிருக்கின்றனர்.

சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Siddhar

உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் “ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி” என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும். இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு செய்வினை உள்ளதா என கண்டறியும் வழிகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Siddhar dharisanam mantra in Tamil. It is also called as Siddhargal in Tamil or Siddhargal valipadu in Tamil or Manthira valipadu in Tamil or Siddhargalai kaana in Tamil.