சித்தர்களின் பாடல்கள் ஏன் மனிதர்களுக்கு புரிவதில்லை? அகத்தியர் விளக்கம்

Agathiyar

இந்த பாரத தேசம் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இப்போதும் பலர் வாழ்கின்றனர். சித்தர்கள் தங்களுடைய வாழ்நாளில் மனிதர்களின் நன்மைக்காக ஏராளமான நூல்களை இயற்றி உள்ளனர். ஆனால் அந்த நூல்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அனைவருக்கும் புரிகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் சித்தர்கள் பிறருக்கு புரியாத வகையில் நூல்களை இயற்றினார்? அதற்கான காரணம் என்ன என்பதை சித்தர்களே தங்களின் பாடல்கள் மூலம் கூறி உள்ளனர். வாருங்கள் அது பற்றி பார்ப்போம்.

Agathiyar

அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:7
“கெதியறியாப் பாவிகட்கு இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள ஞானி களுக்கே எய்தும் எய்தும்
பதியறிய நன்மௌன யோகிகட்கே
பெரிசுத்த நூலிதுதான் பதனம் பண்ணும்
விதியிலை என்றெண்ணாதே; நூதலைத்தேடு;
விண்டு மிண்டு பேசாதே; வேண்டாம் வேண்டாம்;
நிதி பெறுவார் உபசாரம் நீக்கி போடு;
நினைவு கொண்டு சூத்திரத்தின்
நிலையை பாரே”

அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:23

“அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால்
அகங்கடந்த மேஞ்ஞானியருள் பெற்றோர்க்குக்
குறு முகமாய் கொடுப்பதல்லால் மற்றோர் கையில்
கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் கூறிப்
பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றி
பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்
கருவறிய ஞானிகட்கே வெளியிட்டேனால்
கையடக்கமாக வைத்துக் கண்டுதேறே”

இந்த பாடல்கள் மூலம் அகத்தியர் கூறுவது யாதெனில், இந்த பாடல் அனைத்தும் சரியான மனிதர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதால், ஞானத்தை அடைய விரும்புபவர்கள், அதன் மேல் பரிபூரண நாட்டம் கொண்டு, குரு மூலமே சித்தர்களின் பாடல்களுக்கான முழு பொருளையும் அறிய முடியும். மற்றபடி சாதாரண மனிதர்களால் சித்தர்களின் பாடல்களில் ஒளிந்துள்ள பொருளை முழுமையாக அறிய முடியாது. சாதாரண மனிதர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட பாடல் அல்ல சித்தரின் பாடல்கள் என்று கூறி உள்ளார்.

agathiyar

சித்தர்களின் பாடல்களை நாம் தொடர்ந்து படிக்கும்போது அதில் ஏராளமான மறை பொருள் இருப்பதை நம்மால் உணர முடியும். ஆகையால் பொக்கிஷங்கள் நிறைந்த சித்தர்களின் பாடலில் அடங்கி உள்ள பொருளை இதுவரை நாம் தெளிவாக அறிந்து வைத்துள்ளோமா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூற வேண்டும்.

சித்தர்கள் குறித்த ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.