தினமும் உங்களுடைய வீட்டில் இந்த திரியைப் போட்டு தீபம் ஏற்றினால், ஒருபோதும் பணக்கஷ்டம் என்பதே வராது. வறுமையை விரட்டி அடிக்கும் சக்தி இந்த தீப திரிக்கு உண்டு.

cash-agal-vilakku
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் வறுமை நிரந்தரமாக விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாகக் குடி வர வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது. நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மகாலட்சுமிக்கு பிடித்தமான நல்ல வாசனை நம்முடைய வீட்டில் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வார்கள். ஆனால், இந்த வறுமையைப் போக்கக் கூடிய சக்தி சிவப்பு நிறத்திற்கு அதிகமாக உள்ளது என்ற ஒரு கருத்தும் உண்டு. சிவப்பு நிற திரியை கொண்டு வீட்டில் தீபம் ஏற்றினால் அந்த வீட்டில் நிச்சயமாக வறுமை இருக்காது.

sigapu-thiri

இந்த சிவப்பு நிற திரியுடன் நாம் ஒரு சில பொருட்களை சேர்த்து தீபம் ஏற்றும்போது அந்த வீட்டில் இருக்கக்கூடிய பஞ்சம், தலைவிரித்தாடும் வறுமை அனைத்துமே வெளியேறிவிடும். அந்த சிவப்பு நிற திரியுடன் நாம் சேர்க்கப் போகும் பொருட்கள் என்னென்ன. இந்த சிவப்பு நிற தீபத்தை வீட்டில் எப்படி, எந்த நேரத்தில் ஏற்றலாம் என்பதைப்பற்றிய விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பன்னீர் ரோஜா இதழ்களை உலரவைத்து பொடி செய்த தூள் அல்லது பன்னீர் ரோஜா இதழ் தூள் என்றே கடைகளில் விற்கிறது அதை வாங்கிக் கொண்டாலும் பரவாயில்லை. ஜவ்வாது பொடி, காய்ந்த பசுசாணம். வரட்டியாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டாயம் பசுமாட்டு சாணத்தில் இருந்து செய்யப்பட்ட வரட்டி தான் தேவை. வட்டியை வாங்கி நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

panner-rose

மூன்று பொருட்கள் மொத்தமாக, பன்னீர் ரோஜா இதழ் தூள், ஜவ்வாது பொடி, காய்ந்த பசுசாணம். இந்த மூன்று பொருட்களையும் முதலில் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் விற்கின்ற சிகப்பு நிற திரியை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த சிவப்பு நிற திரியை நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியில் ஒருமுறை போட்டு பிரட்டி எடுத்து கொள்ளவேண்டும்.

- Advertisement -

அதாவது வாசனை மிகுந்த லட்சுமிகடாட்சம் மிகுந்த இந்தப் பொடி சிகப்பு நிற திரையில் ஒட்டிக்கொள்ளும். ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த நல்லெண்ணெயில் முடிந்தால் 2 லவங்கம் போட்டுக்கொள்ளலாம். அந்த அகல் விளக்கில் தயாராக இருக்கும் சிவப்பு நிறதிரி போட்டு தீபம் ஏற்றி வைத்தால் வீடு அவ்வளவு சுபிட்சமாக மாறிவிடும்.

deepam

இந்த தீபத்தினை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உங்களுடைய வீட்டில் ஏற்றவேண்டும். அது காலை நேரமாக இருந்தாலும் சரி, மாலை நேரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஏற்றலாம். தினமும் ஏற்றலாம். பூஜை அறையிலேயே ஏற்றலாம். வீட்டில் இருக்கும் வறுமை நீங்குவதற்கு இது ஒரு சுலபமான வழி.

deepam

குறைந்தது ஒரு மணி நேரம். அதிகபட்சம் எவ்வளவு நேரம் இந்த தீபம் உங்கள் வீட்டில் எரிகின்றதோ அவ்வளவு நன்மையைத் தான் கொடுக்கும். இதில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமையை போக்கி விடும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -