பெண்கள் கையில் இருக்கும் பணம், சிக்கனமாக செலவாக வேண்டும் என்றால், அவர்கள் எந்தெந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -

பெண்கள் என்றாலே சாமர்த்தியமும், சாதுர்யமும் நிறைந்தவர்கள் தான். அதிலும், சிக்கனப்படுத்தி செலவு செய்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை அளவோடு வாங்கி, மிச்சம் பிடிக்கும் பெண்கள் என்றால்,  அவர்களை பாராட்டுவதற்கு கட்டாயம் வார்த்தையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த ஒரு வீட்டின் நிர்வாகம், அந்த வீட்டின் பெண்மணியின் கையில் இருக்கின்றதோ, அந்த வீடு கட்டாயம் மகாலட்சுமி அம்சம் நிறைந்த வீடகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ‘ஆண்கள் வீட்டை நிர்வாகம் செய்தால், அந்த வீட்டில் மகாலட்சுமி குடியேற மாட்டாளா?’ என்று ஆண் வர்க்கம் கோபப்பட வேண்டாம். வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது, ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகம் இருக்கும் அல்லவா?

women2

சில வீடுகளில் இதற்கெல்லாம் விதிவிலக்காக, தாராளமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். சிக்கனத்தோடு செலவு செய்யும் ஆண்களும் இருக்கிறார்கள். இதையும் மறுக்க முடியாது. சரி, பெண்கள் கையில இருக்கிற பணம், சிக்கனமாக செலவாக வேண்டும் என்றால் அந்தப் பெண் குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும்? இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தால், பெண்கள் கையில் சேமிப்பு என்பது இரண்டு மடங்கு அல்ல, பல மடங்கு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முதல் விஷயம் இந்த காலகட்டத்தில் பெண்கள் தண்ணீரை பயன்படுத்தும் விதம். குறிப்பாக சிங்கிள் பாத்திரம் கழுவும் பெண்கள், பைபிள் தண்ணீரை திருகி விட்டு விட்டு, அளவே இல்லாமல் தண்ணீரை செலவு செய்து, பாத்திரம் கழுவினால், கட்டாயம் அவர்கள் கையில் இருக்கும் பணம் சேமிப்பில் தங்காது. இதற்காக, அந்தக் காலத்தைப் போன்று, கூடையில் தண்ணீரை பிடித்து வைத்து, அலம்பி கழுவச் சொல்லவில்லை. அந்த பைலின் அளவை, சிறியதாக வைத்து தண்ணீரை கீழே வீணாக சிந்தாமல், அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பது சரியான முறை.

women3

அடுத்ததாக மின்சாரம். போட்ட லைட் போட்ட படியே இருக்கும். ஃபேன் ஓடிக்கிட்டே இருக்கும். ஹீட்டர் ஸ்விட்ச் ஆஃப் பண்ண மாட்டாங்க. டிவி ஓடவில்லை என்றாலும், அந்த சுவிட்ச், ஆனில் தான் இருக்கும். இப்படி மின்சாரத்தை கட்டுப்பாடு இல்லாமல் செலவு செய்யும் வீட்டிலும் கட்டாயம் சேமிப்பு தங்காது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடத்தில் தான் உள்ளது. அந்த சுவிட்சை நீங்க அணைத்துவிட்டு போனீங்கன்னா, உங்க கையில் 10 ரூபாய் சேர்ந்தது நினைச்சுக்கோங்க.

- Advertisement -

அடுத்ததாக, சமையலுக்கு வருவோம். வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு தகுந்தவாறு, சமையலை செய்யவேண்டும். பற்றாக்குறையான சமையலும் இருக்கக்கூடாது. அதிகப்படியாக மிஞ்சி போகும் சமயலும் இருக்கக் கூடாது. ‘அது எப்படிங்க கரெக்டா அளவு சமைக்க முடியும்? முன்னபின்ன ஆகத்தான் செய்யும். என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.’ அளவு முன்பின் ஆகாமல், சரியான அளவில் சமைக்கும் பெண்ணின் கையில், சேமிப்பு கட்டாயம் இரட்டிப்பாகும். ஒரு கைப்பிடி அளவு சாதமோ, இரண்டு கரண்டி குழம்போ மிஞ்சினால் அதில் எந்த தவறும் இல்லை.

women4

சிலபேர் சமைத்தால், தினம்தோறும் பாதி சாப்பாடு அப்படியே மிஞ்சி இருக்கும். பாதி குழம்பு அப்படியே மிஞ்சிக் கிடக்கும். இது மிகவும் தவறான பழக்கம். இப்படி சமையல் பொருட்களை அள்ளி அள்ளி கொட்டி, அளவு இல்லாமல் செய்யும் பெண்களின் கையில் கட்டாயம் சேமிப்பு தங்காது.

- Advertisement -

இப்போது சொல்லக்கூடிய விஷயத்தை நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! பெண்கள் சமைக்கும் குழம்பு, பொரியல், கூட்டு, ரசம் எதுவாக இருந்தாலும் அதில் சில பெண்கள் போடக்கூடிய உப்பு, காரம், உரைப்பு, எண்ணெய் அளவுகள் எல்லாமே சரியான அளவில் இருந்தால், அவர்கள் செலவு செய்யும் பணத்தையும், அளவோடு செலவு செய்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களை திறமையாகக் கையாளும் பெண்கள், அவர்கள் கையில் இருக்கும் பணத்தையும் திறமையாக கையாண்டு, சேமிப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

salt

இதை நீங்கள் நம்பாமல் இருந்தால், உங்களுக்கு தெரிந்த பெண்களின் சமையலை சாப்பிட்டு பார்த்து விட்டு, அவர்கள் கையில் பணம் சேர்கிறதா, என்று சோதித்து பாருங்கள். நிஜமாகவே இதுல உண்மை இருக்குன்னு உங்களுக்கு புரியும். (அதாவது, எந்த ஒரு வேலையையும், பொறுப்பாக செய்யும் பெண்கள், கையில் சேமிப்பு பலமடங்காக அதிகரிக்கும் என்பது தான் இதற்கு அர்த்தம்.)

அடுத்ததாக, நம் வீட்டு சமையலறையில் உப்பு நிறைவாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த உப்பை பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி அலமாரியில் வைப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அந்த கல்லுப்பை பிரித்து, உப்பு ஜாடியிலோ அல்லது நீங்கள் எதில் உப்பைக் கொட்டி வைத்து இருக்கிறீர்களோ, அந்த டப்பாவில் முழுமையாக நிரப்பி வைக்க வேண்டும் என்பதையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள்.

pen-1

பொதுவாகவே, பெண்களுக்கு யூகிக்கும் தன்மை என்பது அதிகமாகவே இருக்கும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், ‘பின்னால் வரக்கூடிய விளைவுகளை, முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு பக்குவம் இருக்கும்’. அவர்களுடைய கணிப்பும் பல சமயங்களில் சரியானதாக அமைந்துவிடும். இதனால தான் ‘பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவார்கள்’. காலப்போக்கில் இந்த பழமொழிக்கான அர்த்தமே மாறிவிட்டது. எது எப்படியாக இருந்தாலும், பெண்கள் கையில் சேமிப்பு என்பது கட்டாயம் இருக்க வேண்டும். அதற்காக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கு, பெண்கள் தொலைநோக்கு கண்ணோட்டத்தோடு, பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது தான் நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்தத் தவறை மட்டும் செய்பவர்களுக்கு வாழ்வில் வரக்கூடிய அதிர்ஷ்டம் நிச்சயமாக தடைபடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -