இந்தத் தவறை மட்டும் செய்பவர்களுக்கு வாழ்வில் வரக்கூடிய அதிர்ஷ்டம் நிச்சயமாக தடைபடும்.

thirusti-things
- Advertisement -

நாம் நல்லது என்று நினைத்து செய்யும் ஒரு சில காரியங்கள் கூட கடைசியில் நமக்கு ஆபத்தாய் முடிவது உண்டு. அந்த வகையில் நாம் நம் வீட்டின் நன்மைக்காகவும், குடும்பத்திற்காகவும் செய்யும் இந்த செயல் கடைசியில் எதற்காக செய்ய நினைத்தோமோ! அதுவே இல்லாமல் செய்துவிடும். இந்த தவறை தெரிந்தோ, தெரியாமலோ பலரும் இன்று செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு இயற்கையாக உண்டாகக்கூடிய அதிர்ஷ்டங்களும், நல்லவைகளும் தடைபடுகின்றன. அப்படி நாம் என்ன தவறு செய்கிறோம்? என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

lemon

வழக்கமாக பூஜை, புனஸ்காரங்களில் கலந்து கொள்ளும் பொழுது ஆலயங்களில் அம்மனுக்கு மாலையாக சூட்டப்படும் எலுமிச்சை மாலையிலிருந்து எலுமிச்சம் கனியை பிரசாதமாகக் கொடுப்பது உண்டு. அதை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் அல்லது திருஷ்டிக்காக வாசலில் கட்டுவது உண்டு. அதில் எந்த தவறும் இல்லை. அதை ஜூஸ் போட்டு கூட நீங்கள் தாராளமாக குடிக்கலாம். ஆனால் திருஷ்டிக்காக எலுமிச்சை கனியை தலை வாசலில் கட்டும் பொழுது அதை காய்ந்து போகும் வரை அல்லது அழுகும் வரை அப்படியே விட்டு வைப்பது மிகவும் தவறான விஷயம். இதனால் நீங்கள் என்ன காரணத்திற்காக அந்த எலுமிச்சை கனியை கட்டினீர்களோ அதுவே பலிக்காமல் போய்விடும். திருஷ்டி என்பதற்காக நாம் செய்யும் சில விஷயங்கள் முறையாக செய்யப்பட வேண்டும்.

- Advertisement -

காய்ந்து போன அந்த திருஷ்டிக்கனியில் கெட்ட சக்திகள் நிரம்பி இருக்கும் என்பார்கள். நாம் கோவிலுக்கு செல்வது அங்கு உள்ள நல்ல சக்திகளை உள்வாங்குவதற்கு தான். அதுபோல் நல்ல சக்திகளையும், கெட்ட சக்திகளையும் உள்வாங்கும் திறன் இயற்கையாகவே நம் உடலுக்கு உண்டு. அப்படி இருக்கும் பொழுது திருஷ்டிக்காக கட்டப்படும் பொருட்களை பல காலம் வரை அப்படியே விட்டு வைத்தால், அதில் கெட்ட சக்திகள், அதிர்வலைகள் நிரம்பிவிடும். அதை தாண்டி தினமும் நாம் வீட்டிற்குள் சென்று வந்து கொண்டிருக்கும் பொழுது அதனுடைய தாக்கம் நிச்சயம் நம் உடலை பாதிக்க செய்யும்.

thirusti-lemon

திருஷ்டி கழிப்பதற்கு படிகாரம், பச்சைமிளகாய், திருஷ்டி செடி வகைகள், கற்றாழை என்று எதை கட்டி தொங்க விட்டாலும் அதை அதிக நாட்கள் அப்படியே விட்டுவிடக் கூடாது. அதற்குரிய சக்தி குறிப்பிட்ட நாட்கள் வரைதான் அதில் இருக்கும். அதன் உயிர் சக்தி போய் விட்டால், அதன் ஆற்றலும் நீங்கி விடும். அப்போது அதனை அப்புறப்படுத்தி விடுவது தான் மிகவும் நல்லது.

- Advertisement -

இது போன்று திருஷ்டிக்காக கட்டப்படும் விஷயங்கள் அமாவாசை அல்லது அதற்குரிய குறிப்பிட்ட நாட்களில் நாம் செய்வது வழக்கமாக உள்ளது. அதே போல் தான் அமாவாசை தினத்தில் திருஷ்டிக்காக கட்டப்படும் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மாற்றி புதுப்பித்து விட வேண்டும். அதை அப்படியே பல காலம், பல நாட்கள் என்று தொங்கவிட்டால் அதனுடைய நல்ல சக்தி நீங்கி துர்சக்திகள் நிரம்பிவிடும்.

katralai

நம் தலை வாசலை ஒரு நாளைக்கு பத்து முறையாவது கடந்து சென்று வருவோம். அதனுடைய கெட்ட அதிர்வலைகள் உடல் உள் வாங்கி இருந்தால், நமக்கு நல்ல கிரக அமைப்புகள் இருந்தாலும், நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டத்தை அது தடுத்து நிறுத்திவிடுமாம். பொதுவாகவே கிரகங்கள் நமக்கு நல்லது செய்வதை விட, தீயது செய்யும் காலம் தான் அதிகமாக இருக்கும். நல்ல கிரக அமைப்புகள் இருக்கும் பொழுது நமக்கு நல்ல வாய்ப்புகள், சந்தோஷமான மனநிலை இருக்கும். அது சில குறைந்த காலம் வரை தான் நீடித்திருக்கும்.

- Advertisement -

thirusti

மற்ற எல்லா காலத்திலும் தீங்கு செய்யும் கிரக அமைப்புகள் நம்மை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் பொழுது இது போன்ற சில விஷயங்களில் நாம் கவனமாக இல்லாவிட்டால் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் தடைபடும். அதனால் எச்சரிக்கையுடன் அடிக்கடி புதியதாக மாற்றி கட்டி விடுங்கள் என்பதை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
செல்வ வளத்தை தரும் இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்து பாருங்கள்! இன்னும் அதிர்ஷ்டம் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -