பட்டுப் புடவைகளை வீட்டில் எளிமையாக சுத்தம் செய்வது எப்படி?

silk saree maintian tips
- Advertisement -

புடவை என்றாலே பெண்களுக்கு கொள்ளை பிரியம் தான். அதிலும் பட்டுப் புடவை என்றால் கேட்கவே தேவையில்லை. ஒரு புடவை மட்டும் பிடித்து விட்டால் போதும் எத்தனை விலையாக இருந்தாலும் அதை வாங்கி விடுவார்கள். அப்படி ஆசைப்பட்டு வாங்கிய புடவையில் எங்கேனும் ஒரு சிறிய கறைப்பட்டு விட்டால் அவ்வளவு தான் ஏதோ பெரிய இழப்பே ஏற்பட்டது போல மனம் சோர்ந்து விடும்.

இதனாலே பலரும் பட்டுப் புடவையை பிடித்தே வாங்கி இருந்தாலும் அடிக்கடி பயன்படுத்தாமல் பீரோவில் வைத்து விடுவார்கள். இப்படியே வீணாகிப் போன புடவைகளே ஏராளம். ஆசைப்பட்டு வாங்கிய புடவைகளை ஆசையுடன் கட்டி பார்க்க நினைத்தால் இனி தாராளமாக கட்டுங்கள். கறை பட்டு விட்டால் சுத்தம் செய்ய இதோ ஒரு எளிய வீட்டு குறிப்பு உள்ளது.

- Advertisement -

பட்டுப்புடவை சுத்தம் செய்ய

முதலில் பட்டுப்புடவை ஆசைப்பட்டு வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதை எப்படி பராமரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பட்டுப் புடவை எப்போதும் மற்ற துணிகளோடு ஒன்றாக மடித்து வைக்க கூடாது. பட்டு புடவையை மடித்து வைக்கும் போது சுற்றிலும் நியூஸ் பேப்பர் வைத்து மடித்து வைக்க வேண்டும். ஒரு புடவையுடன் மற்ற புடவை ஒட்டக் கூடாது.

இந்த பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து மடிப்பை மாற்றி மடித்து வைக்க வேண்டும். அப்போது தான் புடவை கிழியாமல் வெகு நாட்கள் உழைக்கும். இப்படி மாதம் ஒரு முறை செய்யவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் செய்ய வேண்டும். அப்படி எடுத்து மடிக்கும் முன்பு லேசாக வீட்டு நிழலில் ஆற வைத்து மடித்தால் நல்லது.

- Advertisement -

இப்பங பட்டுப்புடவையை வீட்டில் சுத்தம் செய்யும் முறையை பற்றி பார்க்கலாம். இதற்கு நாம் பயன்படுத்தும் தண்ணீர் மிகவும் முக்கிய பட்டுப்புடவை பொறுத்த வரையில் சாதாரண தண்ணீரும் அல்லது வெதுப்பான தண்ணீரிலோ அலசக் கூடாது. பட்டுப் புடவை அலச எப்போதுமே நம் குளிர்ந்த நீரை தான் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பக்கெட்டில் உங்கள் புடவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏதேனும் மையில்டான ஷாம்பு ஊற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் இதற்கு குளிர்ந்த தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும் அதில் மட்டும் கவனமாக இருங்கள். இந்த தண்ணீரை தயார் செய்த பிறகு பஞ்சு அல்லது காட்டன் துணி இந்த தண்ணீரில் முக்கி எடுங்கள். ஏதேனும் கறை படிந்துள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்கள் பட்டுப்புடவையின் நன்றாக விசிறி போல மடித்துக் கொள்ளுங்கள். அதன் மேற்புறம் அதாவது பார்டர் இருக்கும் புறத்தை தனியாக கட்டி விடுங்கள். இந்த பகுதியை தண்ணீரில் நனைக்க கூடாது. இப்போது புடவையும் உடல் பகுதியை மட்டும் மடித்து தண்ணீரில் முழுவதுமாக முழ்கும் வரை ஐந்து நிமிடம் வரை மட்டும் வைத்திருங்கள்.

அதன் பிறகு எடுத்து புடவையை ஒரு மேசையின் மீது விரித்து காட்டன் துணி வைத்து ஈரத்தை அந்த டவல் கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் மின்விசறியின் கீழே புடவை ஆற வைத்து மடித்து வையுங்கள். புடவையை எந்த காரணத்தை கொண்டும் பிழியவோ அல்லது வெயிலில் காய வைக்கவும் கூடாது. அதன் பிறகு பட்டுப் புடவை நீங்கள் மறந்து விட வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளுக்கு தேவையான எளிமையான 8 வீட்டுக் குறிப்பு

இந்த முறையும் கூட கறை பட்ட உடனே செய்து விட வேண்டும். நாள்பட்ட கரையெனில் அதை நீக்குவது சிரமமாகி விடும். பட்டுப்புடவையை சுத்தப்படுத்த பயன்படுத்தும் இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -