இல்லத்தரசிகளுக்கு தேவையான எளிமையான 8 வீட்டுக் குறிப்பு

cooking
- Advertisement -

விரத நாட்களில் சமைக்கும் போது சில நேரங்களில் கவன குறைவு காரணமாக குழம்பில் உப்பு போட்டுமா இல்லையா என்பதை மறந்து இருப்போம். அதை ருசித்தும் பார்க்க முடியாது. உப்பு போடாமல் சாமிக்கும் படைக்கக்கூடாது. குழம்பில் உப்பு போட்டமா இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சூப்பரான வீட்டு குறிப்பு இருக்கு. இதோடு சேர்ந்து இன்னும் இல்லத்தரசிகளுக்கு தேவைப்படக்கூடிய பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

குறிப்பு 1

குழம்பு ஓரங்களில் நுரையோடு கொதித்துக் கொண்டிருந்தால், உப்பு போடவில்லை என்று அர்த்தம். குழம்பில் உப்பு சேர்த்து இருந்தால் குழம்பு நடுப்பகுதியில் தளதளவென கொதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை உங்களுக்கு இதை பார்த்தும் மனசுக்கு குழப்பமாகவே இருக்குதுன்னா, ஒரு சிட்டிகை உப்பை அந்த குழம்பில் போட்டு விடுங்க. சாமி கும்பிட்ட பிறகு, ருசித்து பார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சமைக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 2

சப்பாத்திக்கும் பூரிக்கும் மாவு பிசையும் போது அதில் கொஞ்சம் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து பிசைந்து பாருங்கள். சப்பாத்தியும் பூரியும் சாஃப்டாக இருக்கும். அதேசமயம் ருசியாகவும் இருக்கும்.

குறிப்பு 3

சர்க்கரைப் பொங்கல் செய்தாலும் சரி, மிளகு பொங்கல் செய்தாலும் சரி, பாசிப்பருப்பையும் பச்சரிசியும் லேசாக வருத்துவிட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட்டு பிறகு, அதை சமைத்துப் பாருங்கள். அரிசியும் பருப்பும் சூப்பராக வெந்து பொங்கல் நல்ல சுவை தரும்.

- Advertisement -

குறிப்பு 4

இடியாப்பம் செய்ய மாவு பிசையும் போது, அதில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றுங்கள். கால்பங்கு பால் ஊற்றி பிசைந்து பாருங்கள். நீங்கள் செய்யக்கூடிய இடியாப்பம் வெண்மை நிறத்தோடும் வரும்.

குறிப்பு 5

வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது இனி இந்த குறிப்பையும் பின்பற்றுங்கள். கொஞ்சம் வேர்க்கடலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து, அந்த மாவில் சேர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவு சேர்த்து வெங்காய பக்கோடா செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் வித்தியாசமாகவும் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6

ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஊற வைத்து விடுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவில் உப்பு, காரம், இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயத்தூள், கரம் மசாலா, சேர்த்து வாழைக்காய் பஜ்ஜி உருளைக்கிழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போட்டு பாருங்க. இந்த பஜ்ஜி சூப்பர் சுவையில் இருக்கும்.

குறிப்பு 7

கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை லேசாக வதக்குங்கள். இதை எடுத்து அப்படியே கொதிக்கின்ற சாம்பாரில் இறுதியாக போட்டு அடுப்பை அணைத்தால் சாம்பாரின் சுவை மேலும் மேலும் கூடும்.

இதையும் படிக்கலாமே: மதுரை ஸ்பெஷல் பால் பன் செய்முறை

குறிப்பு 8

தக்காளி சாதத்துக்கு இனிமே தக்காளியை நறுக்கி போடாதீங்க. ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தக்காளி, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், முந்திரி பருப்புகள் போட்டு அரைத்து இதை சேர்த்து தக்காளி சாதம் செய்து பாருங்கள். அமிர்தம் போல ருசி கிடைக்கும்.

- Advertisement -