தலைக்கு குளித்து முடியை காய வைத்த பின்பு உங்கள் முடி பரட்டை மாதிரி மாறிவிடுமா? ஷாம்புவுடன் இந்த 2 பொருளை போட்டு குளித்து பாருங்க. ஹேர் ஸ்டைனிங் செய்தால் கூட இந்த லுக் கிடைக்காதுங்க.

hair20
- Advertisement -

சிலபேருக்கு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து வந்த பின்பு, தலையை காய வைத்த பின்பு, அவர்களுடைய முடியை அழகாக சீவி ஒரு ஹேர்ஸ்டைல் செய்யவே முடியாது. காரணம் துண்டு துண்டு முடிகள் எல்லாம் அப்படியே மேலே எழும்பி கொண்டு நிற்கும். இதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது. முடியை படிய வைக்க என்ன செய்தாலும் சரியாக வராது. எண்ணெய் தடவினால் பிசுபிசுப்புத் தன்மையோடு நாம் நினைத்த ஹேர் ஸ்டைலை செய்து கொள்ள முடியாது. எல்லோராலும் ஹேர்ஸ்பிரே வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள முடியாது. அது கொஞ்சம் விலை அதிகம். எல்லோராலும் ஹேர் ஸ்டைனிங், ஸ்மூதிங், கேரட்டின் இப்படியெல்லாம் பியூட்டி பார்லருக்கு சென்று செய்து கொள்ள முடியாது. இது ரொம்ப ரொம்ப விலை அதிகம்.

இப்படியிருக்க நம்முடைய வீட்டிலேயே முடியை ஸ்மூத்தாக மாற்றிக் கொள்வது எப்படி. ஷாம்புவுடன் எந்த 2 பொருட்களை சேர்த்து தலையை வாஷ் செய்தால் முடி பளபளப்பாக சூப்பராக மாறும் என்று தெரிந்து கொள்வோமா. கலர் இல்லாத அலோ வேரா ஜெல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு தேங்காய் எண்ணெய். இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்.

- Advertisement -

உங்களுடைய தலையை அலச 2 டேபிள்ஸ்பூன் ஷாம்பூ தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதோடு 1 ஸ்பூன் அளவில் அலோ வேரா ஜெல், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக அடித்து கலக்குங்கள். இப்போது இந்த ஷாம்புவைக் கொண்டு உங்களுடைய தலையை நன்றாக தேய்த்து கசக்கி அலச வேண்டும். அதன் பின்பு எப்போதும் போல தலையை துவட்டி காய வைத்துக்கொள்ளுங்கள்.

அதன் பின்பு சிக்கு எடுத்து தலையை சீவி பாருங்கள். உங்களுடைய தலைமுடியில் இருக்கக்கூடிய வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வீர்கள். மாதத்தில் 3 நாட்கள் இப்படி உங்களுடைய தலையில் இந்த ஷாம்புவை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் மூலமாக எண்ணெய் பிசுபிசுப்பு இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு ஒரு துளிகூட தேவை கிடையாது. நீங்கள் இதை ஒரே ஒரு முறை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். ரிசல்டை பார்க்கும்போது உங்களுக்கு மனது திருப்தியாகும்.

- Advertisement -

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் ஆயில் போட்டால் இன்னும் முடி பள பளப்பாக இருக்கும். பாதாம் ஆயுளும் எல்லோர் வீட்டிலும் இருக்காதல்லவா. முடிந்தால் பாதாம் எண்ணெய்யை வாங்கி 1 டேபிள்ஸ்பூன் அளவு ஷாம்பூவில் ஊற்றி கலந்து தலைக்கு குளித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லாமல் பாதாம் எண்ணெயில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஊட்டச்சத்து அதிகமாகவே உள்ளது.

நிறைய பேருக்கு இன்னொரு சந்தேகம் எழும். எந்த பிராண்ட் ஷாம்புவை பயன்படுத்தலாம் என்று. உங்களுடைய வீட்டில் ரெகுலராக எந்த ஷாம்புவை பயன்படுத்துவீங்களோ அந்த ஷாம்புவில் மேல் சொன்ன இரண்டு பொருட்களை சேர்த்தால் போதும். கூடுமானவரை அலோ வேரா ஜெல்லைப் வெள்ளையாக இருக்க கூடியசெல்லாக பார்த்து கடையில் வாங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அருகில் கற்றாழை கிடைத்தால் அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து ஷாம்புவுன் போட்டு கலந்து குளிப்பது 100% நல்லது. மேல் சொன்ன குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -