5 நாட்களில், உங்கள் வீட்டில் ரோஜா செடி புதிய துளிர்விட்டு, நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக் கொத்தாக பூக்க, இத மட்டும் செஞ்சா போதும்.

rose

நம் வீட்டில் இருக்கும் ரோஜா செடி நிறைய துளிர்விட்டு கொண்டே இருந்தால் தான், அதில் அதிகப்படியான மொட்டுக்கள் வைக்கும். மொட்டுக்கள் நிறைய வைத்தால், ரோஜா செடியை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். அந்த மொட்டுக்களில் எல்லாம் பூக்கள் மலர்ந்த பின்பு, சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. உங்கள் வீட்டு ரோஜா செடியில் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்க வேண்டுமா? பின் வரக்கூடிய குறிப்புகளை பின்பற்றினாலே போதும். அந்த சுலபமான குறிப்புகள் என்னென்ன என்பதை இப்போது பார்த்துவிடலாமா?

rose-cutting

முதலில் ரோஜா செடியில் இருந்து நீங்கள் ஒரு பூவைப் பறிக்கும் போது வெறும் பூவை மட்டும் கிள்ளி எடுக்கக்கூடாது. கீழே இருக்கும் 2 அல்லது 3 இலைகளையும் சேர்த்து கிள்ளி எடுங்கள். இதுதான் முதல் டிப்ஸ். பூவை கிள்ளி எடுத்த கிளையின் முனையில், கொஞ்சமாக மஞ்சளை எடுத்து தண்ணீரில் குழைத்து பேஸ்ட் போல் தயார் செய்து அந்தக் கிளையின் முனைப் பகுதியின் மேல் பக்கத்தில் தடவி விட வேண்டும். அப்போது சீக்கிரமே அந்த இடத்தில் புதிய துளிர்விட்டு புதிய மொட்டுக்கள் வரும்.

குறிப்பாக ரோஜா செடிகளுக்கு ஆட்டுச் சாண உரத்தைப் போடுவது மிகவும் நல்லது. இரண்டு வாரங்கள் நன்றாக காய வைத்த ஆட்டு சாணம் உரத்தை, நன்றாக பொடி செய்து அதன் பின்பு ரோஜா செடிகளுக்கு போட வேண்டும். ரோஜா செடியின் மண்ணை மேல் பக்கத்தில் நன்றாக கிளறி விட்டு, அதன் பின்பு இரண்டு கைப்பிடி அளவு ஆட்டு சாணத்தை செடியை சுற்றி தூவி, லேசாக தண்ணீரை ஊற்றவேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி விட்டால், தண்ணீர் டிரைனேஜ் ஓட்டை வழியாக மொத்தமாக வெளியே செல்லும்போது சத்துக்களும் வெளியே சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஈர ஆட்டு சானத்தை அப்படியே செடிகளுக்கு போடக்கூடாது. இது இரண்டாவது டிப்ஸ்.

rose-plant-spray

மண்புழு உரம், டீத்தூள், காபித் தூள், முட்டை தூள் எது போடுவதாக இருந்தாலும், ரோஜா செடியில் இருக்கும் மண்ணை முதலில் கிளறிவிட்டு அதன் பின்புதான் செடியை சுற்றி தூவ வேண்டும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒரு முறை உரங்களை மாற்றி மாற்றி செடிகளுக்கு கொடுக்கலாம். எந்த உரத்தை போட்ட பின்பும் தண்ணீரை தெளித்து விட வேண்டுமே தவிர, நிறைய தண்ணீரை அப்படியே ஊற்றி விடக்கூடாது.

- Advertisement -

குறிப்பாக எந்த உரத்தையும் மழை பெய்யும் போது, அந்த மழை காலங்களில் பயன்படுத்த வேண்டாம். மழை பெய்து முடிந்த பின்பு உரத்தை போடுவது செடிகளுக்கு நல்ல ஊட்டச் சத்தைக் கொடுக்கும். மாதம் ஒருமுறை செடிகளுக்கு எப்சம்(Epsom Salt) சால்ட் தண்ணீரை கொடுப்பது மிகவும் நல்லது. 1 லிட்டர் அளவு தண்ணீரில், 1 ஸ்பூன் அளவு எப்சம் சால்ட் கலந்து வேர் பகுதிகளில் படாமல் இலைகளின் மேல் மட்டும் தெளிக்க வேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறாமல், இலைகள் உதிராமல் இருக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இது மூன்றாவது டிப்ஸ்.

rose2

நான்காவதாக உங்கள் வீட்டு ரோஜா செடியை பூச்சி அரிக்காமல் இருக்க மாதத்திற்கு இரண்டு முறை, ஒரு லிட்டர் அளவு தண்ணீரில் 10ml வேப்ப எண்ணெயை நன்றாக கலந்து இலைகள் மேல் மட்டும் ஸ்பிரே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தத் தண்ணீர் வேரில் படக்கூடாது. இந்த டிப்ஸை காய்கறி செடிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் கீரை செடிகளுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது. கீரை கசப்பாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டு ரோஜா செடி சீக்கிரமே துளிர்விட வேண்டும் என்றால், சீக்கிரமே பூ பூக்க வேண்டும் என்றால், மேல் சொன்ன விஷயங்களை சரியான முறையில் கவனித்தாலே போதும். செடிகள் செழிப்பாக வளரும். கொத்துக்கொத்தாகப் பூ பூக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.