உங்கள் காலில் போட்டிருக்கும் வெள்ளி கொலுசை பாருங்கள்! கட்டாயம் கருப்பாகத்தான் இருக்கும். 5 நிமிஷத்துல சுத்தம் செய்திடலாமா?

kolusu-cleaning

நாம் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணங்களில் குறிப்பாக காலில் அணியும் ஆபரணம் வெள்ளிக்கொலுசு. இது கட்டாயம் அழகாகத்தான் இருக்கும். அதிலும் சூட்டு உடம்பு உடையவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி நகையாக இருந்தாலும் சரி, தங்க நகையாக இருந்தாலும் சரி, சீக்கிரத்தில் கருத்துப் போய் விடும். நிறையப்பேர் அழுக்குப் படிந்த கொலுசை அப்படியே காலில் அணிந்திருப்பார்கள். அந்த கொலுசை சிரமமே இல்லாமல், ஐந்தே நிமிடத்தில் எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்காக நீங்கள் காசு கொடுத்து எந்த ஒரு பொருளையும் வெளியிலிருந்து வாங்க வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம்.

kolusu-leg

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நன்றாக கொதிக்க விடுங்கள். முதலில் அதில், உங்கள் வீட்டில் காலியான மாத்திரை கவர் இருக்கும் அல்லவா? அதாவது அலுமினிய கவர்கள் இருந்தால் மட்டும், அதை போட வேண்டும். சில மாத்திரை கவர்களில் பிளாஸ்டிக் இருக்கும். பிளாஸ்டிக் கவர் உள்ள மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதன் பின்பாக ஒரு ஸ்பூன் அளவு ஆப்ப சோடா உப்பு போட வேண்டும். அதன்பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும் உங்களுடைய வெள்ளிக்கொலுசை அதில் போட்டு விடுங்கள். 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை உங்களுடைய கொலுசை, நன்றாக சுடுதண்ணீரில் கொதிக்க விடுங்கள்.

அதன் பின்பாக பழைய பல் தேய்க்கும் பிரஷ் இருந்தால், எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக பல் தேய்க்கும் பேஸ்ட் தடவிக் கொள்ளுங்கள். சுடுதண்ணீரில் போட்டு இருக்கும் கொலுசை எடுத்து, பேஸ்ட் போட்டு வைத்திருக்கும் பிரஷால் லேசாகத் தேய்த்து கொடுங்கள். லேசான முறையில் முன் பக்கமும் பின் பக்கமும் தேய்த்து கொடுத்தாலே போதும். சுத்தமாக அழுக்கு போய்விட்டு, உங்களுடைய கொலுசு பலபலவென்று மாறிவிடும்.

kolusu-cleaning1

இறுதியாக நல்ல தண்ணீரில் கழுவி, காட்டன் டவலில் துடைத்து விடுங்கள். சூடாக இருக்கும் தண்ணீரில், அப்படியே கையை விட்டு விடாதீர்கள். கொஞ்சம் தண்ணீர் ஆறிய பின்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் இடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் உப்புத் தண்ணீரில் இந்த டிப்ஸை ட்ரை பண்ணாதீங்க! குடிக்கின்ற நல்ல தண்ணீர் வைத்து ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

பழைய மாத்திரை கவரில் சிலது பிளாஸ்டிக் இருக்கும். பிளாஸ்டிக் கவர்களை போடக்கூடாது. முழுமையான அலுமினிய மாத்திரைகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இல்லை என்றால் இப்போதெல்லாம் சாப்பாடு கட்டிக் கொடுக்க அலுமினிய கப் இருக்கிறது அல்லவா? அதை வாங்கி கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹோட்டலில் உணவை பேக் செய்ய பயன்படுத்தும் அலுமினிய கப்.

silver-box

இந்த அலுமினிய கப் உங்கள் வீட்டில் இருந்தால் இதை இன்னொரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய வீட்டில் பால் கட் பண்ணும் கத்தரிக்கோல் மிகவும் மொக்கையாகிவிடும். இந்த அலுமினிய கப்பை, அந்த கத்தரிக்கோலை கொண்டு பலமுறை வெட்டுங்கள். அந்த கத்திரிக்கோல் ஷார்ப் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டுல, நிறைய செடி வச்சிருக்கீங்களா? அப்ப உங்களுக்கான டிப்ஸ் தான் இது! குறிப்பா, உங்க வீட்டு ரோஜா செடியில் நிறைய பூ பூகணும்னா இத தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to clean silver kolusu at home in Tamil. How to clean silver kolusu in Tamil. How to clean velli kolusu in Tamil. Velli kolusu cleaning in Tamil. Kolusu clean tips in Tamil.