சமையலறையில் இருக்கும் சில்வர் பாத்திரங்கள் எப்போதுமே பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். உப்புத் தண்ணீரில் பாத்திரம் தேய்த்தால் கூட! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க!

vessels

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கட்டாயமாக இந்த ஆசை இருக்கும். பாத்திரத்தை தேய்த்து, அந்த பாத்திரத்தை அலமாரியில் அடுக்கி வைக்கும்போது அந்த பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டும், சில்வர் பாத்திரங்கள் பார்ப்பதற்கு எப்போதுமே அழகாக இருக்க வேண்டும், என்று நினைப்பார்கள். ஆனால் சில பேர் வீடுகளில் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் காரணத்தினால் பாத்திரம் எப்போதுமே பொலிவிழந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் சில்வர் பாத்திரத்தை சுற்றி புள்ளி புள்ளியாக வெள்ளையாக உப்புத் தண்ணீர் கரை படிந்து இருக்கும். இதனை தவிர்க்க என்ன செய்யலாம். எப்படி பாத்திரங்களை தேய்த்து வைக்கலாம் என்பதை பற்றிய சில டிப்ஸ்கள் உங்களுக்காக.

kitchen

முதலில் மொத்தமாக எல்லா பாத்திரத்தையும் தேய்து வைத்துவிட்டு, அதன் பின்பு அதை தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக பாத்திரங்களை தேய்த்து வைத்துவிட்டு, உடனே அந்த பாத்திரம் காய்வதற்குள் அதை சுத்தமாக கழுவி விட வேண்டும். சில்வர் பாத்திரத்தை சாதாரண ஸ்க்ரப் கொண்டு தேய்த்தாலும், கையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்துப் பாருங்கள்.

சில பேர் பாத்திரத்தை மேலோடு தேய்த்து அப்படியே கழுவி வைத்து விடுவார்கள். இப்படி பாத்திரத்தை லேசாக தேய்த்தாலும், பாத்திரத்தில் எண்ணெய் பிசுக்கு போக தான் செய்யும். இருப்பினும் கை கொஞ்சம் அழுத்தம் கொடுக்த்து பாத்திரத்தை தேய்க்கும் போது பாத்திரத்தில் நிறையவே வித்தியாசம் தெரியும்.

kitchen

வேண்டுமென்றால் நீங்கள் ஒரு முறை சோதித்துப் பாருங்கள். உங்கள் வீட்டிலேயே ஒரு பாத்திரத்தை லேசாகத் தேய்த்து கழுவி கவிழ்த்து வையுங்கள். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்து கழுவி கவிழ்த்து வைத்து பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே புரியும்.

- Advertisement -

அடுத்தபடியாக எல்லோர் வீட்டிலும் டீ குடிக்கும் டம்ளரில் ஒரு வாடை வீச தொடங்கும். இதற்குக் காரணம் அவர்கள் அந்த டீக்கரையை அந்த டம்ளரின் சரியாக தேய்ப்பது கிடையாது. ஸ்க்ரப்பர் டம்ளருக்கு உள்பக்கம் வரை, அடி பக்கம் வரை செல்ல வேண்டும். டம்ளரின் வாய்ப் பகுதியில் சில பேர் வீடுகளில் டீக்கரை படிந்திருக்கும். அந்த இடத்தையும் தினம்தோறும் பாத்திரம் தேய்க்கும் போது கவனம் செலுத்தி சுத்தப்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

kitchen1

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் செய்யக்கூடிய தவறு இது. கொஞ்சமாக இருக்கக்கூடிய குழம்பு பால் இவைகளை சூடு செய்வதற்கு சிறிய சில்வர் பாத்திரத்தை பயன்படுத்துவார்கள். அடி கனம் இல்லாத சில்வர் பாத்திரத்தை அடுப்பில் வைக்கும்போது, அந்தப் பாத்திரத்தின் உள் பக்கமும், மேல் பக்கமும் வட்ட வடிவில் கருப்பு நிறத்தில் ஒரு வளையம் உருவாகும். இது பாத்திரத்தின் அழகையே கெடுத்துவிடும். பார்த்த உடனே கண்டுபிடித்து விடலாம். இதை அடுப்பில் வைத்து சூடு படுத்தி உள்ளார்கள் என்று. இந்த கருப்பு நிறத்தை சுலபமாக போக்குவது எப்படி.

vessels1

மளிகை கடைகளில் சபீனா பவுடர் விற்கும். நிறைய பேர் கொஞ்ச காலத்திற்கு முன்பாக பாத்திரம் தேய்க்க இந்த பவுடரை தான் பயன்படுத்தி வந்தார்கள். இப்போது அதிகமாக புழக்கத்தில் இல்லை. இந்த சபீனா பவுடரை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த சபீனா பவுடரை ஸ்கிரப்பரில் தொட்டு, எந்த இடத்தில் கரைகள் அதிகமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து தேய்த்து விட்டு எலுமிச்சை பழச்சாறை, கரை உள்ள இடங்களில் தடவி ஸ்டீல் நாரை வைத்து நன்றாக தேய்த்தால் அந்த கருப்பு கரை சுத்தமாக நீங்கி விடும். சில்வர் பாத்திரம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

vessels2

உங்களுடைய வீட்டில் உப்பு தண்ணீராக இருக்கும் பட்சத்தில் பாத்திரம் தேய்க்க பார் பயன்படுத்துவதை விட, எலுமிச்சை சத்து நிறைந்த லிக்விடை பயன்படுத்துவது மிகவும் நல்லதொரு விஷயம். லீக்விடை பாத்திரம் தேய்க்க அப்படியே பயன்படுத்தாமல், கொஞ்சம் தண்ணீரில் கலந்து, அந்தத் தண்ணீரை ஸ்கிரப்பரில் தொட்டு பாத்திரம் தேய்த்தால் பாத்திரம் பளபளப்பாக இருப்பதை உங்களால் காண முடியும். ட்ரை பண்ணி பாருங்க.