சிம்ம ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்தால் போதும்

simmam

ஜோதிடத்தில் சில ராசிகள் அதிர்ஷ்டம் வாய்ந்தவை என்றும், சில ராசிகள் அதிர்ஷ்டமில்லாதவை என்கிற ஒரு கருத்து அனைவரிடமும் உள்ளது. முன்னோர்கள் கூறிய படி சில வழிமுறைகளை கடைபிடித்தால் நாம் எந்த ராசியில் பிறந்து இருந்தாலும் வாழ்வில் மேன்மையான நிலையை அடையலாம். மொத்தமுள்ள 12 ராசிகளில் ஐந்தாவது ராசியாக வருவது “சிம்மம்” எனப்படும் “சிம்ம ராசி”. இந்த சிம்ம ராசி குறித்தும், இந்த ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் ஏற்பட செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் சூரியனுக்குரிய ராசியாக சிம்ம ராசி இருக்கிறது. மற்ற எந்த ஒரு ராசிக்காரர் மீதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு விஷேஷ சக்தி சிம்ம ராசிக்காரர்களுக்கே உரிய ஒரு வரமாகும். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெற செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Lord sooriyan

சிம்மராசி காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த திட்டங்களை பெறுவதற்கு வருடத்தில் ஒரு முறையேனும் வீட்டில் மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வது சிறந்த பலன்களை தரும். உங்களால் முடிந்த போதெல்லாம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற உடைகளை அணிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் மேற்கூறிய நிறங்களில் கைக்குட்டைகளை வைத்துக் கொள்வதால், அதிர்ஷ்டங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் புலால் உணவுகள் ஏதும் உண்ணாமல், கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.

வருடந்தோறும் வருகின்ற தை, ஆடி, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் தவறாமல் மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும். பார்வை இழந்த நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை செய்வது சூரியபகவானின் அருளாசிகளை உங்களுக்கு பெற்றுத்தந்து, வாழ்வில் மேன்மையான நிலையை அடைய உதவும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
நோய்கள் விரைவில் குணமாக பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Simha rasi tips in Tamil. It is also called Simma rasi dosha pariharam in Tamil or Simma rasi in Tamil or Simma rasi pariharangal in Tamil or Simma rasi in Tamil.