பாத்திரம் தேய்க்கும் லிக்விடில் இந்த 1 பொருளை கலந்து விட்டால் போதும். அதை வைத்தே பாத்ரூம், டாய்லெட் வரை சுத்தம் செய்யலாம்.

toilet1
- Advertisement -

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு வீட்டை சுத்தம் செய்வது தான் மிகப்பெரிய வேலை. வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு இடத்தை சுத்தம் செய்வதற்கும் ஒவ்வொரு லிக்விட் தனித்தனியாக நமக்கு தேவைப்படும். உதாரணத்திற்கு பாத்திரம் தேய்க்க ஒரு லிக்விட், சிங்க் கழுவ ஒரு லிக்விட், பாத்ரூம் டைல்ஸ் கழுவ ஒரு லிக்விட் டாய்லெட் கழுவ ஒரு லிக்விட் என்று பலவகையான லிக்விட்கள் இப்போது நமக்கு கடையில் கிடைக்கும். ஆனால் அதற்காகும் செலவு கொஞ்சம் அதிகம் தான்.

வெறும் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை வைத்தே நம்முடைய வீட்டில் சூப்பரான ஒரு கிளீனிங் லிக்விடை, நம் கையாலேயே தயார் செய்ய போகின்றோம். அது எப்படி, அதை எப்படி எல்லாம் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம் என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு இது உங்களுக்காக.

- Advertisement -

கிளீனிங் லிக்விட் தயார் செய்யும் முறை:
இந்த லிக்விட் தயார் செய்ய பாத்திரம் தேய்க்கும் லிக்விட், ப்ரில், விம் லிக்விட், இப்படி எந்த பிராண்ட் லிக்விடை வேண்டும் என்றாலும் இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு அகலமான பௌலில் முதலில் 1 கப் அளவு பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றுங்கள். அதே 1 கப் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து இதோடு 2 டேபிள் ஸ்பூன் தூள் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு, இந்த 2 பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு லிக்விட் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா. இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் வரை இதை அப்படியே வைத்து பயன்படுத்தலாம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் சமையலறை சிங், சமையல் மேடை, ஸ்டவ் இந்த எல்லா இடங்களையும் இந்த ஒரு லிக்விடை ஊற்றி தேய்த்து துடைத்தாலே போதும். எண்ணெய் பிசுபிசுப்பு எல்லாம் நீங்கி பாலீஷ் போட்டது போல மாறிவிடும். குறிப்பாக சிங்கில் இருக்கும் பிசுபிசுப்பு முற்றிலும் நீங்குவதற்கு இந்த ஒரு லிக்விடே போதும். பாத்திரம் தேய்ப்பதற்கும் இந்த லிக்விடை நீங்கள் பயன்படுத்தலாம். அடிபிடித்து கருகிப்போன விடாப்பிடியான கறைகள் எண்ணெய் பிசுபிசுப்பு துர்நாற்றம் எல்லாம் இந்த ஒரு லிக்விடை கொண்டு சுத்தம் செய்து விடலாம்.

பிறகு இதே லிக்விடை பயன்படுத்தி உங்கள் வீட்டு கழிவரையையும் நீங்கள் சுலபமாக சுத்தம் செய்யவும் முடியும். டாய்லெட்டில் இந்த லிக்விடை ஊற்றி தடவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, லேசாக பிரஷை போட்டு தேய்த்து கழுவினாலே அங்கு இருக்கும் அழுக்கு முழுமையாக நீங்கிவிடும். பாத்ரூமிலும் இந்த லிக்விடை ஊற்றி தேய்த்து பத்து நிமிடம் கழித்து துடைப்பம் போட்டு சுத்தம் செய்தால் போதும். பாத்ரூமில் இருக்கும் அழுக்கு கறை எல்லாம் சுலபமாக நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல், மிக்ஸியை இப்படி துடைத்து பராமரித்து வந்தால், பல வருடங்களுக்கு உங்க மிக்ஸி பழுதடையாது பாத்துக்கோங்க.

இந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விடும் நாம் சேர்த்திருக்கக் கூடிய தூள் உப்பு, பேக்கிங் சோடாவும், அதிவிரைவாக செயல்பட்டு கறைகளை சுலபமாக நீக்கிவிடும். இது ஒரு எளிமையான குறிப்பு தான். ஆனால் சுத்தம் செய்வதற்கு இதுபோல ஒரு லிக்விடை இதுவரை நீங்கள் பயன்படுத்தி இருக்கவே மாட்டீங்க. உங்களுக்கு இந்த எளிமையான வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -