வருடத்திற்கு 1 முறை இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்தால் போதும். வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் சேர்ந்திருந்த நெகட்டிவ் எனர்ஜி அத்தனையும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கி விடும்.

ganapathi1
- Advertisement -

அடிக்கடி நம்முடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் வீட்டை சுத்தப்படுத்தி விடுவோம். குறிப்பாக பொங்கல் திருநாள் அன்று நாம் இந்த வேலையைச் செய்வோம். பொங்கல் வருவதற்கு முன்பாகவே வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டுவிட்டு, சிலபேர் வீட்டிற்கு வெள்ளை அடித்து வீட்டை சுத்தம் செய்து கொள்வார்கள். இதேபோல் வருடத்திற்கு ஒருமுறை நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் வீட்டிலிருந்து வெளியே தள்ள வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் செய்ய வேண்டிய ஆன்மீக ரீதியான ஒரு ஹோமத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஹோமம் என்றதுமே ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து செய்ய வேண்டுமோ என்ற பயம் யாருக்கும் தேவை கிடையாது. பொதுவாகவே வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் வருடத்திற்கு ஒருமுறை கணபதி ஹோமம் நடத்த வேண்டும். ஆனால் எல்லோராலும் வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் கணபதி ஹோமம் நடத்துவது என்பது முடியாத காரியம். கணபதி ஹோமத்திற்கு இணையாக விநாயகரை நினைத்து இந்த ஒரு பூஜையை உங்கள் வீட்டில் செய்தால் போதும். அந்த கணபதி ஹோமம் நடத்திய பலனை நம்மால் அடையமுடியும். இந்த ஹோமத்தை விநாயகரை நினைத்து நம் வீட்டில் செய்யும் போது நம் வீட்டில் தங்கியிருக்கும் எல்லா எதிர்மறை ஆற்றலும் நம் வீட்டிலிருந்து வெளியே விரட்டி அடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சரி, அந்த சுலபமான ஹோம வழிபாட்டினைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோமா. ஒரு சிறிய மண் சட்டி நமக்குத் தேவைப்படும். அதில் ஒரு கட்டி கற்பூரம் ஏற்றி வைத்து, அதன் மேலே சமித்து குச்சிகளை போட்டு நெருப்பு மூட்டி கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த நெருப்பில் நாம் யாகம் வளர்க்க வேண்டும். அதாவது ஹோமம் வளர்க்க வேண்டும். நம்முடைய கையாலேயே.

மருதாணி விதை, காய்ந்த குப்பைமேனி இலைகள், வலம்புரிக்காய் இடம்புரிகாய், இந்த நான்கு பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு இந்த பொருட்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அந்த நெருப்பில் போட வேண்டும். ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி!’ எந்த மந்திரத்தை சொல்லி 11 முறை இந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அந்த நெருப்பில் போட்டால் போதும். ஹோமத்தில் இருந்து வெளிவரும் புகை உங்கள் வீடு முழுவதும் பரவும்.

- Advertisement -

மருதாணி விதை, குப்பைமேனி இலை, வலம்புரிக்காய், இடம்புரிகாய்  எல்லாம் ஒரு கைப்பிடி அளவு வாங்கினால் கூட போதும். தரையில் ஒரு கலவடை அல்லது கொஞ்சம் மணலை பரப்பி வைத்துவிட்டு, அதன் மேலே ஒரு மண் சட்டியை வைத்து இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அமர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களுடைய அனைவரின் கையாளும் இந்த பொருட்களை நெருப்பில் போடலாம். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் பஸ்பமாக வேண்டும். குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். வீடு லட்சுமி கடாட்சத்தோடு இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தால் உங்கள் வீடு சுபிட்சம் அடையும்.

வருடத்திற்கு ஒருநாள் ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமையில் இந்த ஹோமத்தினை வீட்டில் செய்து கொள்ளலாம். வினை தீர்க்கும் விநாயகர் உங்கள் வீட்டிற்க்கு அளவில்லா அருளாசியை வழங்கி விடுவார். வீடு என்று இருந்தால் நிச்சயம் நல்லது கெட்டது நடக்கத்தான் செய்யும். வீட்டிற்குள் நல்லவர்கள் கெட்டவர்கள் வந்து போகத் தான் செய்வார்கள். எந்த ரூபத்தில் நெகட்டிவ் எனர்ஜி நம் வீட்டில் தங்கி நமக்கு பிரச்சனை கொடுக்கிறது என்பதே தெரியாது. அந்த நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி அடிக்க இந்த வழிபாடு சிறப்பானது. நம்பிக்கையுள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -