இந்த 5 பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு எடுத்தால், அம்சமான பேரழகை 5 நாட்களில் பெறலாம். பிறகு நீங்கள் அழகி போட்டியில் கலந்து கொண்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

bath-powder
- Advertisement -

பெரிய பெரிய அளவில், கிலோ கலக்கில் பொருட்களை வாங்கி ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து குளியல் பொடியை பயன்படுத்த முடியாது, பேஸ் பேக் போட முடியாது என்பவர்கள் மிக மிக எளிமையான முறையில் இந்த ஐந்து பொருட்களை வைத்து வீட்டிலேயே குளியல் பொடி தயார் செய்து கொள்ளலாம். மிக்ஸி ஜாரில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு அரைத்தாலே சரும பொலிவை தரும் குளியல் பொடி ஐந்து நிமிடத்தில் தயாராகி விடும். அழகை மேம்படுத்தக்கூடிய அந்த குளியல் பொடி செய்ய எந்தெந்த பொருட்கள் தேவை, அரைத்த அந்த குளியல் பொடியை எந்த வகையில் எல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

பேரழகை தரும் குளியல் பொடி:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு – 10, உளுந்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், பச்சைப்பயிறு மாவு – 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். நைசாக ஒரு பொடி உங்களுக்கு கிடைக்கும் அல்லவா, அதை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதோடு உங்களுக்கு விருப்பம் என்றால் கஸ்தூரி மஞ்சள் அல்லது சாதாரண மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உடல் முழுவதும் இதை குளியல் பொடியாக பயன்படுத்துவதாக இருந்தால் இது இரண்டு நாளைக்கு மட்டுமே போதுமான பொடியாக இருக்கும். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பொடி தேவை என்றால், இந்த பொருட்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இந்த பொடியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு இந்த பொடியை போட்டு தண்ணீர், ரோஸ் வாட்டர், அல்லது தயிர் உங்கள் விருப்பம் போல எதை ஊற்றி வேண்டும் என்றாலும் இதை ஃபேஸ் பேக்காக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு முகத்தை நன்றாக ஈரம் செய்து, அதன் பிறகு வட்ட வடிவில் இரண்டு நிமிடம் முகத்தை தேய்த்து மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதே போல கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம் இருந்தால் அந்த இடத்தில் இந்த பேக்கை கொஞ்சம் அடர்த்தியாக போட்டு வந்தாலும் அந்த கரு நிறம் படிப்படியாக குறையும். அண்டராம்ஸில் சில பேருக்கு கரு நிறம் இருக்கும். அந்த இடத்திலும் இதை பேக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இது தவிர உடல் முழுவதும் இதை குளியல் பொடியாக எப்படி பயன்படுத்துவது. இந்த பொடியை பயன்படுத்தி குளித்தால், சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் சில பேருக்கு சோப்பு போட்டு குளித்தால் தான் திருப்தி இருக்கும். முதலில் சோப்பு போட்டு குளித்து விடுங்கள். அதன் பின்பு இந்த மாவை உடல் முழுவதும் 2 நிமிடம் தேய்த்து லேசாக ஸ்கிரப் செய்து, இரண்டு நிமிடம் கழித்து நல்ல தண்ணீரை ஊற்றி குளித்துவிட்டு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: அடிக்கிற வெயிலிலும் உங்கள் முகம் மட்டும் தகதகன்னு தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? தக்காளி பழத்தோடு இதை மட்டும் சேர்த்து முகத்தில் போட்டு பாருங்க. டக்குனு பேரழகியா மாறிடுவீங்க.

தொடர்ந்து இந்த பொடியை பயன்படுத்தி வர ஒரு மாதத்தில் சூப்பரான ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம். உங்களுடைய சருமம் முழுவதும் வெள்ளையாக மாறும். சாப்ட் ஆக மாறும். புது பொலிவோடு இருக்கும். அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் மலிவான விலையில் சூப்பரான அழகை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -