அடிக்கிற வெயிலிலும் உங்கள் முகம் மட்டும் தகதகன்னு தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? தக்காளி பழத்தோடு இதை மட்டும் சேர்த்து முகத்தில் போட்டு பாருங்க. டக்குனு பேரழகியா மாறிடுவீங்க.

face10
- Advertisement -

அழகா இருக்கணும், கலரா இருக்கணும், என்ற ஆசை எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அதிலும் இந்த வெயில் காலத்தில் கொஞ்ச நேரம் வெளியில் சென்று வந்தால் போதும். முகம் கருகருவென கருத்து போகின்றது‌. வெயிலில் சென்று வந்த கருமை நிறம் நீங்கவும், இந்த குறிப்பை பின்பற்றலாம். இயற்கையாகவே சருமத்தின் நிறம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அந்த மாநிரத்தை படிப்படியாக கொஞ்சம் வெள்ளையாக மாற்றவும் இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். மிகக்குறைந்த செலவில் முகத்தை வெள்ளையாக்க கூடிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

வெயிலிலும் முகம் வெள்ளையாக இருக்க அழகு குறிப்பு:
முதலாவதாக முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். ஸ்கிரப் செய்வதற்கு ஒரு பாதி தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து, அதையும் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெட்டி வைத்திருக்கும் தக்காளியை இந்த ஓட்ஸ் தூளில் தொட்டு, அப்படியே லேசாக பிழிந்தால், தக்காளி பழத்தில் இருக்கும் ஜூசும், அந்த ஓட்ஸும் கலக்கும். இதை முகத்தில் வைத்து வட்ட வடிவில் ஜென்டில் ஆக ஸ்கிரப் செய்ய வேண்டும் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் ஸ்கிரப் செய்து, அதன் பின்பு முகத்தை ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள்.

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி 2 ஸ்பூன், சந்தனத்தூள் 1 ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு 2 ஸ்பூன், பிறகு ரோஸ் வாட்டர் இருந்தால் இதோடு ஊற்றி, பேக் போல கலந்து கொள்ள வேண்டும். ரோஸ் வாட்டர் இல்லையென்றால் தண்ணீரை ஊற்றி இதை பேக் போல கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

15 நிமிடத்தில் சருமம் இழுத்து பிடித்து, சருமம் ட்ரை ஆக மாறி இருக்கும். பிறகு முகத்தை நன்றாக ஈரம் செய்து விட்டு, வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். முதல் முறை இந்த பேக் போடும்போது உங்களுடைய முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாள் தொடர்ந்து இந்த பேக்கை போட்டு வர நல்ல பொலிவு முகத்தில் ஏற்படும். வெயிலில் சென்று வந்த டேன் இருந்தால் கூட உடனடியாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: தலை முழுக்க பொடுகு இருக்கிறதா? இந்த 2 இலை போதும் பொடுகு பிரச்சனை இனி உங்களை நெருங்கவே நெருங்காது!

உடம்பு வறட்சித் தன்மை அடைந்தால் தான் சருமத்தில் சுருக்கம் ஏற்படும். கருமை நிறம் ஏற்படும். டிஹைட்ரேஷன் ஏற்படாமல் இருக்க இந்த வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை ரொம்பவும் வெயிலில் செல்வதாக இருந்தால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக் கொள்வது நல்லது. வெயிலில் அழகுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு குளுமை சேர்க்கும், இயற்கையாக கிடைக்கும், காய்கறிகள் பழங்கள், போன்ற உணவு பொருட்களாக சாப்பிடுவதன் மூலம், அழகு ஆரோக்கியமும் சேர்ந்து பாதுகாக்கப்படும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -